திங்கள், 27 மே, 2019

*12 ம் வகுப்பு மறுகூட்டல்,மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*

*🌼12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு*

*🌼10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.*

*🌼12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.*

*🌼இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாமாண்டு அரியர் மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு Scan.tndge.in. என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.*

 *🌼மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் இன்றைய தினமே www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

ஞாயிறு, 26 மே, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம்23/05/2019 நாளிதழ் செய்திகள்




நாமக்கல் மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு ஏ.கே.பி.சின்ராசு அவர்களை சந்தித்து வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தெரிவித்த நிகழ்வுகள் படத்தொகுப்பு

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளரும்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும்,ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாவலர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.பி.சின்ராசு அவர்களுக்கு வாழ்த்தும்,பாராட்டும் தெரிவித்தார்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த  மாநில,மாவட்ட மற்றும்  ஒன்றியப்பொறுப்பாளர்கள்  மாவட்டச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் தலைமையில் 25.05.2019  சனி முற்பகல்  9.15 மணியளவில் நாமக்கல்  பாராளுமன்ற உறுப்பினர்  அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.வாழ்த்துக்கள் தெரிவித்த நிகழ்வுகளின் படத்தொகுப்பு *.


















சனி, 25 மே, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ~ ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் (23.05.2019) ~நாளிதழ் செய்திகளில்…

அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு...

எருமப்பட்டி கூட்டுறவு சங்க செயலாளர் லட்சக்கணக்கில் மோசடி ~ ஆசிரியர்கள் பரபரப்பு புகார் ~ நாளிதழ் செய்திகளில்...


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு கால அவகாசம் வழங்க வேண்டும்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் (23.05.2019) ~செய்தியறிக்கை…