வெள்ளி, 7 ஜூன், 2019

டிஎன்பிஎஸ்சி~அண்மையில் நடத்தப்பட்ட 7 தேர்வுகளுக்கு சான்று சரிபார்ப்பு , நேர்காணல் நடக்கிறது…

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் ~ ஆவணம் சமர்ப்பிக்க 30ம் தேதி கடைசி…

அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை கைவிட கோரிக்கை...



TN SCERT YouTube Channel ~ Video Lesson...

வியாழன், 6 ஜூன், 2019

பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம்- தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் (மே28 முதல் ஜூன்08 வரை) நடைபெறுதல்- மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக...

*நீலகிரி மாவட்டம் உதகையில் பள்ளிகள் இணைப்பு நடவடிக்கை தீவிரம்.இயக்குநர் பார்வைக்கு வராமல் நடவடிக்கையா?ஆசிரியர்கள் அதிர்ச்சி*

*📘பள்ளிகள் இணைப்பு பற்றிய இன்றைய பதிவு.*

*🔹நீலகிரி மாவட்டம் உதகையில் பள்ளிகள் இணைப்பு நடவடிக்கை தீவிரம்*
******************************
நீலகிரி மாவட்டம் உதகையில் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் பார்வைக்கு வராமல் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 4, 5 தேதிகளில் ஐந்து பள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. இரண்டு தொடக்கப்பள்ளிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இரண்டு நடுநிலைப் பள்ளிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் இவர்களின் எதேச்சதிகாரத்தால் நடை பெற்றுள்ளது. எவ்வித ஆணையும் வழங்காமல் வாய்மொழியாகவே பள்ளிகளை இணைத்துள்ளார்கள். ஆன்லைனில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு மட்டும் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராக பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள மூவருக்கும் எவ்வித தலைமையாசிரியர் பதவியும் வழங்கப் படாமல் ஒரே இடத்தில் சென்று பணியாற்றுங்கள் பின்னால் உத்தரவு வரும் எனச் சொல்லி இருக்கிறார்கள். 5 பள்ளிகளில் உள்ள மாணவர்களை பள்ளியை விட்டு விடுவித்துவிட்டு தற்போது மூடியுள்ளார்கள். எவ்வித எழுத்துப்பூர்வமான உத்தரவும் இந்த தேதிவரை வழங்கப்படவில்லை. மாணவர்கள் வருகை குறைவை காரணம் காட்டி இதனைச் செய்வதாக வாய்மொழியாக தெரிவித்துள்ளார்கள். உதகையில் தொடங்கியிருக்கிறார்கள். குன்னூர், கூடலூரில் நாளை மறுநாள் தொடங்குவார்கள். பிறகு மலையிலிருந்து தரைதள மாவட்டத்திற்கு வருவார்கள்.

 தமிழக பள்ளிக் கல்வித் துறையில் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற உறுதிப்பாடே இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தாலொழிய தமிழக பள்ளிக்கல்வித்துறை தமிழக பள்ளிக் கல்வித் துறையாக செயல்படாது. உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களின் நடைமுறைகளை தமிழகத்தில் சர்வசாதாரணமாக அமல் படுத்தி வருகிறார்கள். மும்மொழி தாக்குதலை மத்தியில் ஆளும் அரசு கொண்டு வந்து தாக்குதல் நடத்துகிறது. தமிழன் தமிழனாக தலைநிமிர்ந்து குரல் கொடுத்தவுடன் இந்தி படிப்பது கட்டாயம் இல்லை என்று உறுதி அளிக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பிறமாநில நடைமுறையினை தமிழகத்தில்  தைரியமாக மிக எளிதாக புகுத்தி வருகிறார்கள். தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு செவிவழிச் செய்தியாகக் கூட தெரியப்படுத்தவில்லை. அரசாணை எண் 101 படுத்தும் பாடு. முழு விவரத்தையும் கேட்டுள்ளோம். எழுத்துப் பூர்வமாக பெற்றவுடன் தொகுத்து முறையாக பதிவின் மூலமும் பத்திரிக்கையின் மூலமும் தெரியப்படுத்திட உள்ளோம்.

*அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்! பள்ளிகள் இணைப்பை தடுத்து நிறுத்துவோம்!! தொடங்கட்டும் நமது தீவிர பணி!!!*

பே-டிஎம், போன்-பே கேஷ்-பேக் ஆபர்ல சிக்காதீங்க...

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள்...

செவ்வாய், 4 ஜூன், 2019

*🌷தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக 15.06.2019 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*👆

*🌷தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக 15.06.2019 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*👆