திங்கள், 17 ஜூன், 2019

*🌷1:30 மாணவர் விகிதாச்சாரப்படி ஆசிரியர் பணியிட நிர்ணய பட்டியல்*

நாமக்கல் நகரில் இன்று (17/06/19) மாலையில் ஒன்றுகூடுவோம்!கல்விக்கான தொடர் பயணத்தை தொடர்வோம்!பேராசிரியர் என்.மணி அவர்களின் கருத்துக்கள் களத்தில் விதைக்கப்படுவதற்கு , வீரியமாக வினையாற்றுவதற்கு நாமக்கல் வாரீர்!வாரீர்!வாரீர்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  நாமக்கல் மாவட்டம் (கிளை)                                     ----------------------------------------          புதிய    கல்விக்கொள்கை - கருத்தரங்கம்                        ---------------------------------------- 

இடம்:                      எசு.பி.எம்., மேல்நிலைப்பள்ளி,  நாமக்கல்.

நாள்:
17.06.19 (திங்கள்)

நேரம்:
பிற்பகல்  05.00 மணி.
----------------------------------------
கருத்துரை:

பேராசிரியர். என்.மணி் அவர்கள்.,
தமிழ்நாடுஅறிவியல் இயக்கம்.
----------------------------------------
அன்பானவர்களே!வணக்கம்.

மத்தியரசு வெளியிட்டுள்ள
புதிய கல்விக் கொள்கை  வரைவு அறிக்கையை  பதிவிறக்கம்  செய்துக்கொள்ளுங்கள். தங்களது ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின் மேலான பார்வைக்கும், கவனத்திற்கும் வரைவு அறிக்கையை கொண்டுச் செல்லுங்கள்.
ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின்  கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள் . ஒன்றியளவிலான ஆசிரியர்களின்  கருத்துக்கள் கொண்ட அறிக்கையை இறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இத்தகு ஒன்றிய அளவிலான  அறிக்கைகளை 
இக் கருத்தரங்கில் முன்மொழிவு  செய்திடுவதற்கு திட்டமிடுங்கள்;
வழிவகை காணுங்கள்.
இக்கருத்தரங்கில்
பங்கேற்போரின் கருத்துரைகளுடன்
மாவட்ட அளவிலான
அறிக்கையை மாநில அமைப்பிற்கு பரிந்துரை செய்திடுவதற்கு உதவிடுங்கள்.

தேசத்தின் கல்வியை வடிவமைப்பதில், கட்டமைப்பதில் முழுக்கவனம் கொண்டு செயல்பட வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டம் இது. எனவே, இக்கருத்தரங்கின் தீவிரத்தன்மை, முக்கியத்துவம்,
தேவை ஆகியனவற்றை மனதில் நிறுத்தி  விரைந்து செயல்படுங் கள்!
ஆசிரியர் மன்றத்தினர் உள்ளிட்ட அனைத்து பகுதியினரும்
இக் கருத்தரங்கில்  கலந்துக்கொண்டு  பங்களிப்புச்
செய்யுங்கள்!
கல்விக்கருத்தரங்கை  வெற்றிகரமாக்குங்கள்!                           நன்றி.                                 ~முருகசெல்வராசன்.

₹6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு ~ வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம் ~ நடப்பு ஆண்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்…

ஞாயிறு, 16 ஜூன், 2019

தமிழக அரசு முழு பா.ஜ.க-வாக மாறிவிட்டது' - புதுக்கோட்டையில் கொந்தளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்

விகடன் செய்திகள்

 தமிழ்நாடு
1 1 வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/06/2019) கடைசி தொடர்பு:06:30 (14/06/2019)

*`தமிழக அரசு முழு பா.ஜ.க-வாக மாறிவிட்டது' - புதுக்கோட்டையில் கொந்தளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்!*

நீட் தேர்வைப் போலவே புதிய கல்விக் கொள்கையையும் தமிழகத்தில் திணிப்பதற்கு பா.ஜ.க அரசு முயல்வதாகவும், தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய கல்விகொள்கையை கடுமையாக விமர்சித்தார். அதில், "தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படாததால், அரியலூர் அனிதா, பட்டுக்கோட்டை வைசியா, திருப்பூர் வில்லியங்காட்டைச் சேர்ந்த ரித்தூஸ்ரீ உள்ளிட்ட பலர் மடிந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், தமிழக அரசோ மத்திய அரசோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு, சர்வாதிகாரமாக நீட் தேர்வை நடத்திக்கொண்டிருக்கிறது. சுயநலம் கருதி தமிழக அரசும் முதலமைச்சரும் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வைப் போல, தற்போது மத்திய அரசுக் கல்வியை காவி மயமாக்கும் நோக்கோடு, அவசர அவசரமாக புதிய கல்விக்கொள்கையை  அமலாக்குவதற்குத் துடிக்கிறது. இதனால், மாநில மொழிகள் சிதையும். அந்த மொழிகளுக்குரிய கலாசாரம், பண்பாடு அனைத்தும் ஒழிக்கப்படும்.

தமிழகக் கல்வி அமைச்சர், நம் மாநில உரிமையை வழக்கம் போல் சுய நலம் கருதி விட்டுக்கொடுத்துவிட்டு, 'பெரும்பாலான மாநில கருத்தை நாங்களும் ஏற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது' எனக் கூறிவிடாமல், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வாதிட்டு வெற்றிபெற முயல வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அந்த கல்விக்கொள்கையை ஏற்கக் கூடாது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பாடப் புத்தகங்களின் அட்டையிலேயே காவி நிறத்தைப் பட்டையாகத் தீட்டி, அதன் நடுவே எந்த வகுப்பு பாடப்புத்தகம் என்று எழுதியிருப்பதும், பாரதியார்  உருவில் காவி நிற முண்டாசை அமைத்திருப்பதும், தமிழக அரசு பா.ஜ.க-வாக மாறிவிட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதிலிருந்து, பா.ஜ.க-வின் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.

சனி, 15 ஜூன், 2019

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்காமல் வேண்டுமென்றே தகவல்களை வழங்க மறுக்கும் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும் கூட இச்சட்டத்தின் படி தண்டிக்கப்படும் என்பதற்கு இந்த ஆணையே சான்று...

தமிழக அரசு முழு பா.ஜ.க-வாக மாறிவிட்டது' - புதுக்கோட்டையில் கொந்தளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்!

விகடன் செய்திகள்

 தமிழ்நாடு
1 1 வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/06/2019) கடைசி தொடர்பு:06:30 (14/06/2019)

*`தமிழக அரசு முழு பா.ஜ.க-வாக மாறிவிட்டது' - புதுக்கோட்டையில் கொந்தளித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்!
*

நீட் தேர்வைப் போலவே புதிய கல்விக் கொள்கையையும் தமிழகத்தில் திணிப்பதற்கு பா.ஜ.க அரசு முயல்வதாகவும், தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட்டு, இந்த முயற்சியை முறியடிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம், புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய கல்விகொள்கையை கடுமையாக விமர்சித்தார். அதில், "தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படாததால், அரியலூர் அனிதா, பட்டுக்கோட்டை வைசியா, திருப்பூர் வில்லியங்காட்டைச் சேர்ந்த ரித்தூஸ்ரீ உள்ளிட்ட பலர் மடிந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், தமிழக அரசோ மத்திய அரசோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு, சர்வாதிகாரமாக நீட் தேர்வை நடத்திக்கொண்டிருக்கிறது. சுயநலம் கருதி தமிழக அரசும் முதலமைச்சரும் கண்டுகொள்ளவில்லை. நீட் தேர்வைப் போல, தற்போது மத்திய அரசுக் கல்வியை காவி மயமாக்கும் நோக்கோடு, அவசர அவசரமாக புதிய கல்விக்கொள்கையை  அமலாக்குவதற்குத் துடிக்கிறது. இதனால், மாநில மொழிகள் சிதையும். அந்த மொழிகளுக்குரிய கலாசாரம், பண்பாடு அனைத்தும் ஒழிக்கப்படும்.

தமிழகக் கல்வி அமைச்சர், நம் மாநில உரிமையை வழக்கம் போல் சுய நலம் கருதி விட்டுக்கொடுத்துவிட்டு, 'பெரும்பாலான மாநில கருத்தை நாங்களும் ஏற்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது' எனக் கூறிவிடாமல், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வாதிட்டு வெற்றிபெற முயல வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அந்த கல்விக்கொள்கையை ஏற்கக் கூடாது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பாடப் புத்தகங்களின் அட்டையிலேயே காவி நிறத்தைப் பட்டையாகத் தீட்டி, அதன் நடுவே எந்த வகுப்பு பாடப்புத்தகம் என்று எழுதியிருப்பதும், பாரதியார்  உருவில் காவி நிற முண்டாசை அமைத்திருப்பதும், தமிழக அரசு பா.ஜ.க-வாக மாறிவிட்டது என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது. இதிலிருந்து, பா.ஜ.க-வின் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு துணைபோகிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில், தமிழக அரசு அக்கறையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.

இந்தியாவில் பெரும் தண்ணீர் பஞ்சம்.ஒரு சொட்டு கூட இல்லாத நிலை வரும்.நாசா செயற்கைக்கோள் ஆய்வில் தகவல்*

*⭐இந்தியாவில் பெரும் தண்ணீர் பஞ்சம்.ஒரு சொட்டு கூட இல்லாத நிலை வரும்.நாசா செயற்கைக்கோள் ஆய்வில் தகவல்*

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கருத்தரங்கம்

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*நாமக்கல் மாவட்டம் (கிளை)*
----------------------------------------
*புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை கருத்தரங்கம்*
----------------------------------------
இடம்: எசு.பி.எம்., மேல்நிலைப்பள்ளி,
நாமக்கல்.
நாள்:
17.06.19 (திங்கள்)
நேரம்:
பிற்பகல்  05.00 மணி.

அன்பானவர்களே!  வணக்கம்.
மத்தியரசு வெளியிட்டுள்ள
 புதிய கல்விக் கொள்கை  வரைவு அறிக்கையை  பதிவிறக்கம்  செய்துக்கொள்ளுங்கள். தங்களது ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின் மேலான பார்வைக்கும், கவனத்திற்கும் வரைவு அறிக்கையை கொண்டுச் செல்லுங்கள்.
ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின்  கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள் . ஒன்றியளவிலான ஆசிரியர்களின்  கருத்துக்கள் கொண்ட அறிக்கையை இறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இத்தகு ஒன்றிய அளவிலான  அறிக்கைகளை 
இக் கருத்தரங்கில் முன்மொழிவு  செய்திடுவதற்கு திட்டமிடுங்கள்;
வழிவகை காணுங்கள்.
இக்கருத்தரங்கில்
பங்கேற்போரின் கருத்துரைகளுடன்
மாவட்ட அளவிலான
அறிக்கையை மாநில அமைப்பிற்கு பரிந்துரை செய்திடுவதற்கு உதவிடுங்கள்.

தேசத்தின் கல்வியை வடிவமைப்பதில், கட்டமைப்பதில் முழுக்கவனம் கொண்டு செயல்பட வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டம் இது. எனவே, இக்கருத்தரங்கின் தீவிரத்தன்மை, முக்கியத்துவம்,
தேவை ஆகியனவற்றை மனதில் நிறுத்தி  விரைந்து செயல்படுங் கள்!
ஆசிரியர் மன்றத்தினர் உள்ளிட்ட அனைத்து பகுதியினரும்
இக் கருத்தரங்கில்  கலந்துக்கொண்டு  பங்களிப்புச்
செய்யுங்கள்!
கல்விக்கருத்தரங்கை  வெற்றிகரமாக்குங்கள்! நன்றி.
-முருகசெல்வராசன்.