திங்கள், 17 ஜூன், 2019

பர்கூர் அருகே மூன்றாம் குலோத்துங்க சோழர்களின் 12ம் நூற்றாண்டு கால கல்வெட்டு கண்டுபிடிப்பு...

பிஇ, பிடெக் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு...

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் கண்ணாடி பாட்டிலில் தினமும் உணவு மாதிரி வைக்க வேண்டும் ~ உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்…

பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ₹100 முதல் ₹1 லட்சம் வரை அபராதம்...

'மீண்டும் முதலில் இருந்தா' என்ற தலைப்பில் தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்த கல்வியாளர் திரு கஜேந்திரபாபு அவர்களின் உரையை கேளுங்கள்...

*🌳நாமக்கல் மாவட்டம் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மானக் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கான புதிய பதிவுகள் பதிவு செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌳நாமக்கல் மாவட்டம் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மானக் திட்டம் 2019-2020 ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கான புதிய பதிவுகள் பதிவு செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்.*


*🌷1:30 மாணவர் விகிதாச்சாரப்படி ஆசிரியர் பணியிட நிர்ணய பட்டியல்*

*🌷1:30 மாணவர் விகிதாச்சாரப்படி ஆசிரியர் பணியிட நிர்ணய பட்டியல்*

நாமக்கல் நகரில் இன்று (17/06/19) மாலையில் ஒன்றுகூடுவோம்!கல்விக்கான தொடர் பயணத்தை தொடர்வோம்!பேராசிரியர் என்.மணி அவர்களின் கருத்துக்கள் களத்தில் விதைக்கப்படுவதற்கு , வீரியமாக வினையாற்றுவதற்கு நாமக்கல் வாரீர்!வாரீர்!வாரீர்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  நாமக்கல் மாவட்டம் (கிளை)                                     ----------------------------------------          புதிய    கல்விக்கொள்கை - கருத்தரங்கம்                        ---------------------------------------- 

இடம்:                      எசு.பி.எம்., மேல்நிலைப்பள்ளி,  நாமக்கல்.

நாள்:
17.06.19 (திங்கள்)

நேரம்:
பிற்பகல்  05.00 மணி.
----------------------------------------
கருத்துரை:

பேராசிரியர். என்.மணி் அவர்கள்.,
தமிழ்நாடுஅறிவியல் இயக்கம்.
----------------------------------------
அன்பானவர்களே!வணக்கம்.

மத்தியரசு வெளியிட்டுள்ள
புதிய கல்விக் கொள்கை  வரைவு அறிக்கையை  பதிவிறக்கம்  செய்துக்கொள்ளுங்கள். தங்களது ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின் மேலான பார்வைக்கும், கவனத்திற்கும் வரைவு அறிக்கையை கொண்டுச் செல்லுங்கள்.
ஒன்றிய ஆசிரியப் பெருமக்களின்  கருத்துக்களை கேட்டுப்பெறுங்கள் . ஒன்றியளவிலான ஆசிரியர்களின்  கருத்துக்கள் கொண்ட அறிக்கையை இறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இத்தகு ஒன்றிய அளவிலான  அறிக்கைகளை 
இக் கருத்தரங்கில் முன்மொழிவு  செய்திடுவதற்கு திட்டமிடுங்கள்;
வழிவகை காணுங்கள்.
இக்கருத்தரங்கில்
பங்கேற்போரின் கருத்துரைகளுடன்
மாவட்ட அளவிலான
அறிக்கையை மாநில அமைப்பிற்கு பரிந்துரை செய்திடுவதற்கு உதவிடுங்கள்.

தேசத்தின் கல்வியை வடிவமைப்பதில், கட்டமைப்பதில் முழுக்கவனம் கொண்டு செயல்பட வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டம் இது. எனவே, இக்கருத்தரங்கின் தீவிரத்தன்மை, முக்கியத்துவம்,
தேவை ஆகியனவற்றை மனதில் நிறுத்தி  விரைந்து செயல்படுங் கள்!
ஆசிரியர் மன்றத்தினர் உள்ளிட்ட அனைத்து பகுதியினரும்
இக் கருத்தரங்கில்  கலந்துக்கொண்டு  பங்களிப்புச்
செய்யுங்கள்!
கல்விக்கருத்தரங்கை  வெற்றிகரமாக்குங்கள்!                           நன்றி.                                 ~முருகசெல்வராசன்.

₹6 ஆயிரம் நிதி உதவி பெற விவசாயிகளுக்கு அழைப்பு ~ வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...