திங்கள், 24 ஜூன், 2019

*ஜூலை 2 அன்று பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கைகள் மற்றும் அவை சார்ந்த விவாதங்கள் நடத்தப்படும்.*

*🌷தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.*

*தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்ப
ட்டிருந்தது. இந்நிலையில், எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.*

*கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் ஜுலை 30 வரை அவை நடக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்  தொடரின் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும். மறுநாள் முதல் அவை அலுவல்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*

*தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால் அறிவிப்பு*

*மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும். அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு*

*சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் - சபாநாயகர் அறிவிப்பு.*

*ஜூன் 28-ம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றம்.ஜூன் 29, 30 தேதிகள் அரசு விடுமுறை*

*ஜூலை 1-ம் தேதி வனம், சுற்றுச்சூழல் துறை, 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை  சார்ந்த மானியக்கோரிக்கைகளும்,அவை சார்ந்த விவாதமும் நடத்தப்படும்.*

ஆசிரியர்கள் பொது மாறுதல் (2019-20) கலந்தாய்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*




ஆசிரியர்கள் சிறப்புநிலை பெற கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை தேவையில்லை ~ தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு…

ஞாயிறு, 23 ஜூன், 2019

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்: நாள். 21.06.2019


EMIS இணையதளத்தில் Staff Fixation Entry யினை சரிபார்த்தல்- வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்த இயக்குனர் செயல்முறை



Go No:218 கல்வியாண்டு 2019-20 ஆசிரியர் கலந்தாய்வு நடத்துவதற்காக அரசாணை எண் 218 நாள்:20.06.2019

Go No:217 01.08.2018 ம்தேதி அடிப்படையில் பணிநிரவல் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான அரசாணை எண் 217 நாள்:20.06.2019

சனி, 22 ஜூன், 2019

2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் / தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்/ உடற்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம்...

2019 - 2020 கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்...

2019 -2020ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்விற்கான கால அட்டவணை...

தொடக்கக்கல்வி துறை

1. 21.06.2019 முதல்
28.06.2019 வரை-
பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்

2. 08.07.2019 முற்பகல் 
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- மாவட்டத்திற்குள் 

3. 08.07.2019 பிற்பகல்
வட்டார கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்

4. 09.07.2019 முற்பகல்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 

5. 09.07.2019 பிற்பகல்
நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

6. 10.07.2019 முற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்

7. 10.07.2019 பிற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள் 

8. 11.07.2019 முற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு- ஒன்றியத்திற்குள்

9. 11.07.2019 பிற்பகல்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

10. 11.07.2019 பிற்பகல் 
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்

11. 12.07.2019 முற்பகல்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

12.  12.07.2019 பிற்பகல்
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு

13. 13.07.2019 முற்பகல்
 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள் 

14. 13.07.2019 பிற்பகல்
இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்தில் 

15. 14.07.2019 முற்பகல்
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ஒன்றியத்திற்குள்

16. 14.07.2019 பிற்பகல்
 இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - வருவாய் மாவட்டத்திற்குள்


17. 15.07.2019 முற்பகல்
 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்  கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்

18. 15.07.2019 முற்பகல்
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - மாவட்டம் விட்டு மாவட்டம்.