புதன், 26 ஜூன், 2019

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் - தூய்மை பாரத இயக்கம் (Swachh Bharath Mission) - பள்ளிகளில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் சுவற்றில் எழுதுதல் - நடவடிக்கை மேற்கொள்ளுதல் - சார்பு...

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தொடர் போராட்டம்~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்…

மும்மொழிக் கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவோம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில், பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாராட்டு விழா, ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நிதிய இரண்டாமாண்டு விழா ஆகிய ஐம்பெரும் விழா, மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஒன்றிய தலைவர் வே. கந்தன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் இரா.சுரேஷ், துரை, மணிமாறன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஜெக.மணிவாசகம் வரவேற்றார். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் ஜெக.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆ.நாகராஜன், சோம.அண்ணா ஆகியோர் பாராட்டுரை ஆற்றினர். இதில், சிறப்பு விருந்தினராக ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க. மீனாட்சிசுந்தரம் பங்கேற்று பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்ற தவறான தகவலை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிடுகிறார். கோடை வெயில் காரணமாக, ஒருவாரம் கழித்து பள்ளிகளைத் திறக்க வேண்டுமென கேட்டுக் கொண்டோம். ஆனால், உடனடியாக பள்ளிகளைத் திறந்தார்கள். இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுவரையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. 
பணி ஓய்வு பெறும் நாளில், அரசு ஊழியர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம், ஊதிய உயர்வு ரத்து, பணி உயர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். மும்மொழிக் கொள்கை என்பது இந்தியை மறைமுகமாகத் திணிக்கும் நடவடிக்கையாகும். இதை எதிர்த்து ஆசிரியர்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.

செவ்வாய், 25 ஜூன், 2019

LKG, UKG APPOINTMENT ஆண் ஆசிரியர்கள் பணியமர்த்த கூடாது- TAMILNADU GOVT - REVISED DRAFT CODE REGULATION SCHOOLS, 2015 தமிழக அரசு கூறுவதை கடைபிடிக்காத கல்வித்துறை ...

*🌷25 ஆண்டுகள் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்&ஆசிரியர்களுக்கு ரூ.2000 ஊக்கப்பரிசு வழங்குவதற்கு தேவையான பரிந்துரை படிவம்!*

*🌷25 ஆண்டுகள் மாசற்று பணியாற்றிய அரசு ஊழியர்&ஆசிரியர்களுக்கு ரூ.2000 ஊக்கப்பரிசு வழங்குவதற்கு தேவையான பரிந்துரை படிவம்!*

🔖🔖🔖🔖 *DEE PROCEEDINGS-- பள்ளிக் கல்வி - தொடக்கப் பள்ளிகள் - கரூர், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள 102 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு பாடம் போதிக்கும் ஆசிரியர்களின் பணிநிரவல் - சார்பாக.*

🔖🔖🔖🔖 *DEE PROCEEDINGS-- பள்ளிக் கல்வி - தொடக்கப் பள்ளிகள் - கரூர், காஞ்சிபுரம், திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்திலுள்ள 102 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு பாடம் போதிக்கும் ஆசிரியர்களின் பணிநிரவல் - சார்பாக.*

1.8.2019 முதல் IFHRMS மூலம் ஊதியம் பெற்று வழங்க வேண்டும் இயக்குனர் செயல்முறை


மனிதனை விண்ணுக்கு சுமந்து செல்லும் ககன்யான் விண்கலம் 2021ல் ஏவப்படும் ~ இஸ்ரோ தலைவர் பேட்டி…

காளிப்பட்டி அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 நடுகற்கள் கண்டெடுப்பு...

வாடகைக்கு வரிச்சலுகை பெற வீட்டு உரிமையாளர் பான் எண் தர மறுத்தால் என்ன செய்வது ?