செவ்வாய், 2 ஜூலை, 2019

அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியப் பயிற்றுநர்களுக்கான தர எண் பதிவு செய்வது சார்ந்த அறிவுரை



புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை திரும்பபெற வேண்டும் ~ தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் ~நாளிதழ் செய்திகளில்...

பிற மொழித் திணிப்புகளை அரசு எதிர்க்க வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல் ~ நாளிதழ் செய்திகளில் ...

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எதிர்ப்பு~நாளிதழ் செய்திகளில்...

திங்கள், 1 ஜூலை, 2019

உங்கள் ஜாதகம் வருமான வரித்துறை கையில் ~ சம்பளம், டெபாசிட், கடன் உட்பட எல்லாமே விண்ணப்பத்தில் ரெடி…

தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக ''தமிழ் மறவன்'' வகையை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது...

தமிழ்நாட்டின் அடையாளங்களாக சிலவற்றை மாநில அரசு அங்கீகரித்துள்ளது. அதன்படி, மாநில விலங்காக வரையாடும், பறவையாக மரகதப் புறாவும், மலராக செங்காந்தளும், மரமாக பனை மரமும் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மாநில வண்ணத்துப்பூச்சியாக "தமிழ் மறவன்' என்ற வகை வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தமிழகம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய காரணியாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகளாகும். காய், கனிகள் மற்றும் விதைகள் உருவாவதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும் முக்கியக் காரணியாக விளங்குவது மகரந்த சேர்க்கையாகும். இந்த மகரந்த சேர்க்கைக்கு உறுதுணையாக விளங்குவது வண்ணத்துப்பூச்சிகள்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஆங்கிலேயர்கள் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுப்பை நடத்தினர். இதில் 324 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாக அட்டவணைப்படுத்தியுள்ளனர். இதில் 311 வகை வண்ணத்துப்பூச்சி வகைகளை, வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் தற்போது கண்டறிந்து அதனை வகைப்படுத்தியுள்ளனர். மேலும், 13 வகை வண்ணத்துப்பூச்சிகளைத் தேடி வருகின்றனர்.

இந்தியாவில் பல மாநிலங்கள், தங்கள் மாநிலத்தை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் வண்ணத்துப்பூச்சியை தங்களது மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்துள்ளன. அதேபோன்று, தமிழக விவசாயிகளின் நண்பனாக விளங்கும் வண்ணத்துப்பூச்சியை தமிழக அரசின் பட்டாம் பூச்சியாக அறிவிக்க வேண்டும் என வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வு செய்ய வனத் துறையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடத்தப்பட்டது. "தமிழ் மறவன்' மற்றும் ''தமிழ் லேஸ்விங்'' ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில், "தமிழ் மறவன்' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்க தமிழக அரசுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாலவர் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று, வனத் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர் ''தமிழ் மறவன்'' வகையை மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளார். 

G.O Ms - 41 - 7th Pay Commission பிறகு GROUP A, B, C, D அரசு ஊழியர்கள் யார், யார்? - அரசாணை வெளியீடு