புதன், 7 ஆகஸ்ட், 2019

அனைத்து வகை பள்ளிகளிலும் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 09.08.2019 அன்று நடத்துதல் சார்பு... மாநில திட்ட இயக்குநர் செயல்முறை



EMIS ~ பள்ளியின் புகைப்படம் ஏற்ற புதிய வசதி!

EMIS ~ தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியின் முகப்புத்தோற்றம் மற்றும்  புகைப்படங்கள் 5 பதிவேற்றம் செய்ய  EMIS வலைத்தளத்தில் புதிய option கொடுக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி சார்ந்த சிறந்த படங்களை பதிவேற்றம் செய்யலாம்...

அறிவியல் விருது பெற ஆசிரியர்களுக்கு அழைப்பு...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்., 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் செயல்படும், அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அறிவியல் விருது வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களின் அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்த, அறிவியல் நகரம் சார்பில், இந்த விருது வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான விருதுக்கு, ஏழு முதல், பிளஸ் 2 வரை வகுப்பு எடுக்கும், 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ் வழி, ஆங்கில வழி என, தலா,ஐந்து பேருக்கு விருது வழங்கப்படும். விண்ணப்பங்களை, www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த விருதை பெற தகுதி உள்ளவர்கள், தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அதிகாரி வழியாக, செப்., 15க்குள்பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய சந்தாதொகை ஆகஸ்ட் இறுதிக்குள் செலுத்த வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை


அந்தந்த மாவட்டத்திலேயே சான்றிதழ் உண்மைத்தன்மை அறிக்கை பெறலாம்...

அரசு மற்றும் உதவிபெறும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவு ~ வட்டார வள மையங்களில் சிறப்பு ஏற்பாடு…

பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் - ஊரக வளர்ச்சித்துறை - 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகங்களைத் தூய்மை செய்தல் - சார்பு...