சனி, 28 செப்டம்பர், 2019

சந்திரயான்-2ல் இருந்து இறங்கியபோது நிலவின் தரையில் விக்ரம் பலமாக மோதி உள்ளது ~ புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டது நாசா…

நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் கெடு நீட்டிப்பு...

ஆதார் - பான் இணைக்க வரும் 30ம் தேதி கடைசி...

கீழடியின் கீழே…. கண்டது கைம்மண்ணளவு, காண வேண்டியது…?

அறிஞர் அண்ணா பற்றிய சுவையான செய்திகளில் ஒன்று, நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம் : ஒரு பொதுக்கூட்ட மேடையில் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் அண்ணாவிடம், "எதிர்பாராமல் அளிக்கும் தலைப்பில் உடனே பேசுவீர்களா?" என்று கேட்டார். "பேசுவேன்" என்று அண்ணா கூறினார். உடனே சேதுப்பிள்ளை அதே மேடையில் "ஆற்றங்கரையினிலே" என்னும் ஒரு தலைப்பை வழங்கினார். 'அண்ணா எப்படிப் பேசுவாரோ?' என அவையினர் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

அண்ணா எழுந்தார், "சிந்து நதி என்னும் அந்த ஆற்றங்கரையோரத்தில்தான் ஆரியர்கள் முதன்முதலாக வந்து குடியேறினார்கள்." என்று தொடங்கினார். அந்த உரையில் ஆற்றங்கரை நாகரிகங்கள் பற்றி ஒரு மணிநேரம் அண்ணா ஆற்றொழுக்காகப் பேசி முடித்தாராம்.

உலகின் மூத்த நாகரிகங்களில் ஒன்றின் பிறப்பிடமான எகிப்து நாட்டை நைல் நதியின் கொடை என்பார்கள். சிந்துவெளி நாகரிகத்தின் பெயரிலேயே இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கை வளமாக்கிய ஆற்றின் பெயர் உள்ளது.

மஞ்சள், யாங்சி ஆறுகளின் கரையோரத்தில் மலர்ந்து செழித்தது சீன நாகரிகம்.

டைக்ரிஸ், யூப்ரடிஸ் ஆகிய இரு பேராறுகளுக்கு இடையில் அமைந்த மெசபடோமியா (சற்றொப்ப இன்றைய இராக்) நிலப்பகுதியில் பிறந்தது சுமேரிய நாகரிகம்.

தென் அமெரிக்காவில் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பில் வளர்ந்து, சில நூறு ஆண்டுகள் முன்பு ஐரோப்பியக் குடியேறிகளால் அழிக்கப்படும் வரை நிலைத்து நீடித்த 'இன்கா' நாகரிகமும் பேராறுகளின் நடுவில்தான் ஊஞ்சலாடிற்று.

இந்த ஆற்றங்கரை நாகரிகங்களின் வரிசையில் வைகைக் கரையோரத்தில் வாழ்ந்து மறைந்த தமிழர்களின் நாகரிகம் பற்றிய செய்திகள் தமிழறிஞர்தம் உணர்வார்ந்த நம்பிக்கைகளாக மட்டும் இருந்து வந்த நிலையில் அந்த நம்பிக்கைகளுக்கு ஆதிச்சநல்லூரில் சிறகு முளைத்தது. இப்போது கீழடியில் அவை அறிவுலக வான்வழியில் உறுதியாகச் சிறகு விரித்துள்ளன.

வைகைக் கரை, பொருநைக் கரை நாகரிகம் என்பது தொல்தமிழர் நாகரிகமே என்பதை மறுக்கவியலாத நிலையில் அது பற்றிய புதைந்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்து அறிவியல் நோக்கில் மெய்ப்பிக்கத் தமிழர் நாகரிகத்தின் மீதான ஆரியக் காழ்ப்புணர்ச்சி தடைபோட்டு வந்தது. சிந்துவெளிக் காளையைக் கூடக் குதிரையாகப் பார்க்க வைத்த இந்தக் காழ்ப்புணர்ச்சி இந்திய அரசின் தொல்லியல் துறையிலும் இந்த நாள் வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வகுப்பு நலன் போலவே இன நலனும் கணித வாய்பாடுகளையும் அறிவியல் முடிவுகளையும் கூட கேள்விக்குள்ளாக்கத் தயங்குவதில்லை. இங்கே ஆரிய நலன் அறிவியல் ஆய்வுகளையே தடுக்குமளவுக்குப் போய் விடுகிறது.

ஆதிச்சநல்லூரில் 2004-06 காலத்தில் அகழ்வாய்வு மூலம் கிடைத்த எலும்புகளும் கலைப்பொருட்களும் பதினைந்து ஆண்டு காலத்தாழ்வுக்கு பிறகே "கார்பன் டேட்டிங்" எனப்படும் காலம்காண் கரிம ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் கூட நீதிமன்றத் தலையீடு தேவைப்பட்டது. இவ்வகையில் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் இழுத்தடிப்பு புதிராக இருப்பதை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஆதிச்சநல்லூர் காட்டும் தமிழர் நாகரிகம் கி.மு. 905க்கும் கி.மு. 696க்கும் இடைப்பட்ட காலத்துக்குரியது என்று ஆய்வு முடிவுகள் வழியாகத் தெரிய வந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் அகழ்வாராய்ச்சி மூலமாகக் கிடைத்த கலைப்பொருட்களை கரிம ஆய்வுக்கு உட்படுத்திய போது, அவை கி.மு.345ஆம் ஆண்டுக்குரியவை எனத் தெரிய வந்தது. அங்கு கிடைத்த தமிழ்க் கல்வெட்டுகள் தமிழின் தொன்மையை உணர்த்தி நின்றன.

மதுரை நகரிலிருந்து தென்கிழக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் கீழடி அமைந்துள்ளது. . இந்த இடத்திலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. தூரத்தில் வைகையாறு ஓடுகிறது. இந்த ஊருக்குக் கிழக்கே மணலூரும் தென்கிழக்கே அகரமும் மேற்கே கொந்தகையும் அமைந்திருக்கின்றன.

கீழடியில் உள்ள தென்னந்தோப்பில்தான் முதன் முதலில் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. பெங்களூரில் உள்ள இந்திய அகழ்வாய்வுப் பிரிவு 2014 - 15, 2015- 16 ஆகிய ஆண்டுகளில் ஆகழாய்வுகள் மேற்கொண்டது. இதற்குப் பிறகு தமிழ்நாடு அரசு 2017 -18ல் அகழாய்வுப் பணிகளைத் துவங்கியது. நான்காம் கட்ட அகழாய்வின் முடிவுகள்தாம் அண்மையில் வந்திருப்பவை.

இந்தியத் தொல்லியல் துறை சார்பில் முதல்கட்ட அகழாய்வுப் பணிகளை வழிநடத்தியவர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா. அவரை இப்பணியில் இந்திய அரசு தொடரவிடவில்லை. அவர் கோரிய சில ஆய்வுகள் செய்யப்படவே இல்லை. இப்போது தமிழக அரசு நல்ல முயற்சியை எடுத்திருப்பதாக அவர் பாராட்டியுள்ளார்.

தமிழர்களின் தொன்மையான நாகரிகம் என்பது சில தமிழறிஞர்கள், உணர்வாளர்களின் வெறும் மிகைப் பேச்சில்லை, பெரிதும் வரலாற்று உண்மையே என்பதைக் கீழடி அகழ்வாராய்ச்ச்சிகள் மீண்டும் அழுத்தமாக நிறுவியுள்ளன. கீழடி பல வகையிலும் முக்கியமாவது எப்படியென்றால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்த அகழாய்வுகளில் சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் என்று இதுவரை கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடி 'பிராமி' எனப்படும் தமிழி எழுத்துகள் சங்க காலத்தின் அகவையை மேலும் மூன்று நூற்றாண்டுகள் கூட்டியுள்ளன.

2018ஆம் ஆண்டு கீழடியில் நடந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள், அமெரிக்காவின் மியாமியில் உள்ள, 'பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வக'த்திற்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த மாதிரிகளின் காலம் கி.மு. 580 என்று அங்கு கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 'கீழடி கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை வளமான நாகரிகம் கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும்' என்று தெரியவருகிறது. அதாவது, வைகை ஆற்றங்கரையில் நகரமயமாதல் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தமிழ் 'பிராமி'யின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்னும் முடிவும் வரப்பெறுகிறது. அப்போதே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாகத் திகழ்ந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை குறியீடுகளுக்கு அடுத்துக் காணக் கிடைக்கும் வரிவடிவம் தமிழ் 'பிராமி' எழுத்துகளாகும். இவற்றைத் தமிழி என்றும் பண்டைத் தமிழ் எழுத்துகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கீழடி அகழாய்வில் தமிழ் 'பிராமி' எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத் துறை மேற்கொண்ட அகழாய்வில் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளன.

கீழடியில் கிடைத்த மண் பாண்டங்களின் தொழில்நுட்பம், கனிமங்களின் கலவை, களிமண்ணின் தன்மை ஆகியவை கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை ஒரே மாதிரியாக இருந்துள்ளன என இத்தாலியின் பைசா பல்கலைக்கழக அறிக்கையில் தெரியவருகிறது.

கீழடியில் அகழ்ந்தெடுத்த செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடுமண்ணாலான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் ஒவ்வொன்றிலும் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் காணக் கிடைக்கின்றன. செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக சிலிக்காவும், ஒட்டுப்பொருளாகக் கணிசமான (7%) சுண்ணாம்பு கலந்துள்ளதையும்; சுண்ணாம்புச் சாந்தில் 97% சுண்ணாம்பு இருந்ததையும் உற்றுநோக்கும் போது அக்கால மக்கள் தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணாவின் இரு கருத்துகள் முகமையானவை. முதலாவதாக ``இப்போது செய்திருக்கும் ஆய்வுகள் போதாது; இன்னும் ஆய்வுகள் செய்ய வேண்டும்" என்கிறார். கீழடியில் ஆய்வுக்குரிய நிலம் 110 ஏக்கர். ஆனால், நாம் அதில் 10 சதவிகிதத்தை மட்டுமே தோண்டிப் பார்த்துள்ளோம் என்பது நம் போராட்டம் தொடர வேண்டிய தேவையைச் சுட்டுகிறது.

இரண்டாவதாக, "நான்காம் கட்ட ஆய்வில் கண்டறிந்த பொருள்களின் காலம் கி.மு 583 என்று கூறுகிறார்கள், இன்னும் பழைமையாகவும் இருக்கலாம்" என்ற அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கருத்து நம்மிடம் பொறுமையான நீண்ட விடாமுயற்சியைக் கோருகிறது. நம்மிடம் என்று நான் சொல்வது தமிழக அரசிடமும் தமிழக மக்களிடமும் அம்மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களிடமும்! வெளிப்பட்டிருக்கும் உண்மைகள் புதைந்து கிடக்கும் உண்மைகளில் சிறு பகுதி மட்டுமே! எல்லா உண்மைகளையும் வெளிப்படுத்தும் வரை நமக்கு ஓய்வில்லை.

தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம், தமிழ்நாடு ~தொழிற்கல்வி படிப்புதவித்தொகை விண்ணப்ப படிவம்…

ஆசிரியர் நல தேசிய நிதியம் _ தொழில்நுட்ப பயிலக பட்டபடிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு படிப்பு உதவித்தொகை வழங்குதல் சார்ந்து...



தேசிய ஆசிரியர் நல நிதி நிறுவனம், தமிழ்நாடு ~தொழிற்கல்வி படிப்புதவித்தொகை விண்ணப்ப படிவம்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்டம் கிளை ஒன்றியச் செயலாளர்கள் கூட்டம் நாள் 29.09.19 ஞாயிறு காலை

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்  

நாமக்கல் மாவட்டம் (கிளை
)
*********************
விரைவு ஒன்றியச் செயலாளர்கள் 
கூட்ட அழைப்பு
********************
அன்புடையீர்! வணக்கம்.

இடம்:
மன்ற அலுவலகம்,
பரமத்தி-வேலூர்.

நாள்: 29.09.19 (ஞாயிறு)
நேரம்: முற்பகல் 10.00மணி

கூட்டப்பொருள்:
1.உறுப்பினர்பதிவு
2.வரவு-செலவு
3.ஜாக்டோ-ஜியோ போராளிகளுக்கு பாராட்டு விழா
4.ஜாக்டோ-ஜியோ நடவடிக்கைகள்
5.ஆசிரியர்கோரிக்கைகள் 
6.மாவட்டச் செயலாளர் கொணர்வன 

தங்களின் வருகையை அன்புடன் எதிர்நோக்குகிறேன். தவறாது வருக !
நன்றி!
முருகசெல்வராசன்.

Go No:371 Date: 17.09.2019 பள்ளிக்கல்வி சிறப்பு பி.எட் கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்காலத்தை மூன்றாண்டு (2021)வரை நீடித்தல் அரசாணை வெளியீடு







Go No:302 Date:26.09.2019 தமிழக அரசு ஊழியர்களுக்கு (2018-19) போனஸ் அறிவிப்பு