*🌷அக்டோபர் 5, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
----------------------------------------------
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*1.சர்வதேச ஆசிரியர் தினம்.*
*2.இராமலிங்க அடிகளார் பிறந்த தினம்*
*3.எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் பிறந்ததினம்.*
*4.ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுதினம்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*🌷சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.*
*ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.*
*யுனெஸ்கோ*
*அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.*
*ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.* *ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு* *நன்றி தெரிவிக்கும் விதமாகவும்* *இது நடைமுறைப்*
*படுத்தப்பட்டு வருகின்றது.*
*இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.*
*ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.*
----------------------------------------------
*🌷வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடிய இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று (1823).*
*அடிகளார் தருமசாலை அமைத்து மக்களுக்கு மூன்று வேளையும் உணவளித்தவர். இன்றும் தமிழக அரசு இந்த தருமசாலைக்கு குறைந்த விலையில் பொருட்களைக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது என வாழ்ந்தவர். ஆரிய எதிர்ப்பு, சமஸ்கிருத மாயை உடைப்பு என அன்றே ஆரம்பித்தவர்.*
*சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கு தாய் மொழி என்று சொன்ன பொழுது, சிறிதும் தயங்காமல் அப்படியானால் தமிழ் தான் தந்தை மொழி என பதிலளித்தவர். அன்றே தமிழ் தனித்தியங்கும் மொழி என்றும், சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என்றும் மக்களுக்கு உணர்த்தியவர் வள்ளலார்.* *"தாய்மொழிப் பற்றும் துறக்க முடியாதது, துறக்கவும் கூடாது என்பதனை உலகினர்க்கு உணர்த்தியவர் வள்ளலார் ஒருவரே" என ம.பொ.சி இவரின் தாய்மொழிப் பற்றை விளக்குகிறார்.*
*இவர் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் இராமகிருட்டிண பரமஹம்சர், தயானந்த சரசுவதி, இராசராம்* *மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோர் வடமொழியை ஏற்று வைதீக மதத்தை போற்றி* *வந்தனர்.* *இவரோ தமிழை ஏற்காத வைதீக மதத்தையும் வடமொழியையும் புறக்கணிக்கத் துணிந்தார்.*
*ஏழை, பணக்காரன், மேல்சாதி, கீழ்சாதி, முறைகளை வன்மையாகக் கண்டித்தவர். சாதி சமய வேறுபாடுகளைக் கடுமையாய் எதிர்த்தார். மக்கள் வாழப் பயன்படும் நெறியே நன்னெறி எனப் போற்றினார்.*
*சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க அதையும், அதன் மூலமான சாத்திரங்களைக் குப்பை என சொல்லி,* *புதைக்கச் சொன்னவர்:*
*"இருட்சாதித் தத்துவச்*
*சாத்திரக் குப்பை*
*இருவாய்ப் புன்செயில்*
*எருவாக்கிப்போட்டு*
*மருட்சாதி சமயங்கள்*
*மதங்களாச் சிரம*
*வழக்கெல்லாம்* *குழிக்கொட்டி*
*மண்மூடி போட்டு"*
*புலவராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, உரைநடை எழுத்தாளராக, நூலாசிரியராக, உரையாசிரியராக, ஞானாசிரியராக, போதகாசிரியராக, மருத்துவராக, இவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாக, ஞானியாக, சித்தராக வாழ்ந்தவர்.*
----------------------------------------------
*🌷எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் பிறந்த தினம் இன்று(1927).*
*எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமஸ்கிருதப் பண்டிதர். ரங்கராஜன் தன் 16ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார்.*
*இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம்,வினோத் ஆகியவை அவற்றுள் சில.*
*'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம்.*
*ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ்(தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன்* *(லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்);*
*ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல்(டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள்.*
*கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுஷ்ய கதைகளும்*
*டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார்.*
-------------------