ஞாயிறு, 6 அக்டோபர், 2019

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் இணையதளம் மூலம் பெயர் சேர்க்கலாம் ~ மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு ~இணையதளம் வழியாக வாக்குச்சாவடியை அறிவது எப்படி?

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் வட்டெழுத்து கண்டுபிடிப்பு ~11ம் நூற்றாண்டை சேர்ந்தது…

🌷அக்டோபர் 6, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 6, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*👇
---------------------------------------------------------        🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*1.சென்னை மாகாண முன்னாள் முதல்வர் பரமசிவ சுப்பராயன் நினைவு தினம்.*

*2.உலக உணவு பாதுகாப்பு தினம்.*

*3.உச்சநீதிமன்ற முதல் பெண்நீதிபதியாக எம். பாத்திமாபீவி  நியமிக்கப்பட்ட தினம்.*

*4.வானியல் விஞ்ஞானி மேகநாத் சாகா பிறந்ததினம்.*

*5.புலவர்.புலமைப்பித்தன் பிறந்ததினம்.*

-----------------------------------------------------------      🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*🌷சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் பரமசிவ சுப்பராயன் நினைவு தினம் இன்று.*  


*பரமசிவ சுப்பராயன் (செப்டம்பர் 11, 1889 – அக்டோபர் 6, 1962) சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வராவார். திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் கிராமத்தின் ஜமீன்தாராகிய இவர், தனது வாழ்நாளில் சென்னை மாகாணத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சர், கல்வி மற்றும் சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், இந்தோனேசியாவிற்கான இந்தியத் தூதர், இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினர், மேலவை உறுப்பினர், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் போன்ற பல பதவிகளை வகித்தார்.*
----------------------------------------------

*🌷உலக உணவு பாதுகாப்பு தினம் இன்று.*


*நாம் உண்ணும் உணவை வீண் செய்ய வேண்டாம். என்றும் உணவு கொடு‌க்கு‌ம் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.*
----------------------------------------------

*🌷1950 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தில் 1989ஆம் ஆண்டு,*
*முதல் பெண் நீதிபதியாக  கேரளத்தைச் சேர்ந்த  நீதிபதி எம்.பாத்திமா பீவி நியமிக்கப்பட்ட தினம் இன்று.*

*பாத்திமா பீவி தமிழ்நாட்டின் ஆளுநராகவும் பதவி வகித்தார்(25 ஜனவரி 2007- 3 ஜூலை)*

----------------------------------------------
*🌷இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறைக்கு அடித்தளமிட்டவரும், வானியல் விஞ்ஞானியுமான மேகநாத் சாஹா (Meghnad Saha) பிறந்த தினம் இன்று(1893).*

*வங்கதேசத்தின் ஷரடோலி கிராமத்தில்  பிறந்தார். தந்தை மளிகை வியாபாரி. வறுமையால் மகனை வேலைக்கு அனுப்ப நினைத்தார். இவரது அறிவுக்கூர்மையால் கவரப்பட்ட ஆசிரியர்கள் அவரிடம் பேசி, படிப்பைத் தொடரச் செய்தனர்.*

*ஆரம்பக் கல்வி முடிந்ததும் சிமுலியாவில் இருக்கும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். விடுதி, உணவுச் செலவு அதிகமானதால் மிகவும் சிரமப்பட்டான். அனந்தகுமார் தாஸ் என்பவர் வீட்டில் தங்கிக்கொண்டு, அங்கு வீட்டு வேலைகள் செய்தபடியே படித்தான்.*

*படிப்பில் படுசுட்டி. சமுதாய நலனிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தான். வங்கப் பிரிவினையின்போது 12 வயதுதான். ஆனாலும், போராட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டான். வங்கதேச ஆளுநர், பள்ளிக்கு வந்தபோது, நண்பர்களைத் திரட்டி வகுப்புப்புறக்கணிப்பு போராட்டம் நடத்தினான். இதனால் உதவித் தொகை நிறுத்தப்பட்டது.*

*தாக்கா கல்லூரியில் வேதியியல், கணிதவியல், ஜெர்மன் மொழி கற்றார். உதவித்தொகை பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். சத்யேந்திரநாத் போஸ், மகலனோபிஸ் ஆகியோர் இவரது சகாக்கள். பிரபுல்ல சந்திர ரே, ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டியவர்கள்.*

*இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர விரும்பினார். அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியவர் என்று கூறி அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.*

*கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஜெர்மனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். சூரியன், நட்சத்திரங்களின் வெப்பநிலை, அழுத்தம் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டார்.*

*வெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார். 1920இல் வெளிவந்த ‘சூரிய மண்டலத்தில் அயனியாக்கம்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது. கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.*

*கல்கத்தா பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையைப் பெற்று லண்டனில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.* *அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத்* *தலைவராக*
*15 ஆண்டுகள் பணியாற்றினார்.இந்திய நாள்காட்டி முறையான ‘சக ஆண்டு’ குறித்து தெளிவாக விளக்கினார். விடுதலைப் போராட்ட வீரர்களுடன் இருந்த தொடர்பு காரணமாக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.*

*கல்கத்தாவில் இவர் 1948இல் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் ‘சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அயனியாக்




சனி, 5 அக்டோபர், 2019

உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு வாக்கு உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

*நம் கல்வி....நம் உரிமை!..

*🌷நம் கல்வி... நம் உரிமை! - 1*

*ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. இன்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி நவீன இந்தியாவில் முன்வைக்கப்பட்ட கல்விக் கொள்கைகள், அவற்றின் நோக்கங்கள், தாக்கங்களின் வரலாற்றுப் பின்னணியில் புதிய கல்விக் கொள்கையின் சுருக்கமான அறிமுகம்.*

*புதிய கல்விக் கொள்கைக்கான வரையறை அறிக்கை எனும் பெயரில் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 43 பக்கக் கொள்கைப் பிரகடனம், கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது. பலரும் சுட்டிக்காட்டும் சம்ஸ்கிருதத் திணிப்பு என்பதையும் தாண்டி, பல்வேறு அபாயங்களை மோடி அரசின் கல்விக் கொள்கை கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை அலசும் முன்னர், இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட முக்கியமான கல்விக் குழுக்களைப் பார்த்துவிடலாம்.*

*மெக்காலேவுக்கு முன்னும் பின்னும்*

*1813-ல் முதன்முறையாக இந்திய மக்களுக்குக் கல்வி அளிக்கும் பொறுப்பைத் தனது பணியாக ஏற்பதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. கல்வி சாசனம் எனும் ஆவணத்தையும் வெளியிட்டது. அதற்காக அன்று உடனடியாக ரூ. 1 லட்சம் ஒதுக்கப்பட்டதும், அது கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதும் வரலாறு. ஆங்கிலக் கல்வியே தனது கல்வி என இந்த ஆவணம் பகிரங்கமாக அறிவித்தது. கிழக்கிந்திய கம்பெனியில் வேலை பார்க்க, இந்திய மக்களுக்குச் சாதி, மதம் உள்ளிட்ட தகுதி தேவையில்லை. பிரிட்டிஷ் கல்வி நிறுவனக் கல்வித் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என அதன் இரண்டாம் ஷரத்து குறிப்பிடுகிறது.*

*1834-ல் மெக்காலே இந்தியா வந்தார். அவருடன் ஆலோசனை நடத்திய கவர்னர் ஜெனரல் பெண்டிங் பிரபு, இந்தியக் கல்விக்கு - பொதுக் கற்பித்தல் முறை எனப் பெயரிட்டு, அவரையே அதன் தலைவராக்கினார். எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும் ஆனால், ரத்தத்திலும் நிறத்திலும் இந்தியராகவும் இருக்கும் ஒருவரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் என அறிவித்த மெக்காலே, 267 பக்கம் கொண்ட கல்விக் கருத்துருவை அரசுக்குச் சமர்ப்பித்தார்.*

*ஆங்கிலக் கல்வியை முழுதும் வேலையாள் தகுதி பெறும் கல்வியாக மாற்றினார். பிராந்திய மொழிகளில் புத்தகங்கள் அச்சிடுவதைக்கூடத் தடை செய்தார். “வியாபார, நிர்வாக மொழியாய் ஆங்கிலம்; அதற்காக பிரிட்டிஷ் அரசுக்குத் தேவைப்படும் லட்சக்கணக்கான - கணக்காளர், எழுத்தர் வேலைக்கான கல்வி ஆகியவை போதுமானவை. பெரிய மேதாவிகள், தத்துவ அறிஞர்கள் எல்லாம் நமக்கு எதற்கு?” என அவர் பகிரங்கமாக அறிவித்தார். 1835-ல் வில்லியம் பெண்டிங் பிரபு, மெக்காலே குறிப்புகளை ஏற்று முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டார். பிற்காலத்தில், ‘வேலை… கும்பேனி அரசு வேலை, தனியார் ஆலை வேலை எனும் ஈர்ப்பே கல்வியின் அடிநாதமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி தரும் சான்றிதழ், வேலை பெறும் ஒரு அடையாளச் சீட்டாகப் பயனாகிறது’ என்று காந்தி விமர்சித்தது குறிப்பிடத் தக்கது.*

*1853-ல் இங்கிலாந்தின் கல்விக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் தலைவராக இருந்த சார்லஸ் வுட் தலைமையில் ஒரு கல்விக் குழு இந்தியா வந்தது. 1854-ல் கர்சன் பிரபுவின். காலத்தில் இதன் அறிக்கை முன்வைக்கப்பட்டது. நமது கல்வி முறையில் இருக்கும் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு என்பதெல்லாம் இக்குழுவின் கைங்கர்யம்தான். பள்ளிக்கான சீருடை, ஒரு பாடமாகப் பிராந்திய மொழி போன்றவற்றை 1882-ல் வில்லியம் ஹண்டர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய கல்வி கமிஷன் கொண்டுவந்தது.*

*டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு*

*நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை நியமித்தார் பிரதமர் நேரு. பிரதான பிரச்சினை பல்கலைக்கழகக் கல்வியல்ல; அனைவருக்குமான ஆரம்பக் கல்விதான் என அம்பேத்கர், மேகநாத் சாஹா, அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் அப்போதே கருத்துத் தெரிவித்தனர். ஆனால், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவைத் தோற்றுவித்தது உட்பட, உயர் கல்வியை நிறுவனமயமாக்கி, தனியார் கல்லூரிகளை உள்ளூர்க் குழுமங்கள் உருவாக்கி, மானியக் குழுவிட

வெளி மாநில கல்வி சார் நிலையங்களை மாணவர்கள் பார்வையிட களபயணம் அழைத்து செல்லுதல் சார்ந்த மாநில திட்ட இயக்குநர் செயல்முறை நாள்:03.10.2019





தொடக்க/நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் NISHTHA பணியிடைப்பயிற்சிக்கு தேவையான android apps

அக்டோபர் 5, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.* ---------------------------------------------- 🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏 *1.சர்வதேச ஆசிரியர் தினம்.* *2.இராமலிங்க அடிகளார் பிறந்த தினம்* *3.எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் பிறந்ததினம்.* *4.ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுதினம்.*

*🌷அக்டோபர் 5, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
----------------------------------------------
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏
*1.சர்வதேச ஆசிரியர் தினம்.*
*2.இராமலிங்க அடிகளார் பிறந்த தினம்*
*3.எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் பிறந்ததினம்.*
*4.ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுதினம்.*

🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

*🌷சர்வதேச ஆசிரியர் தினம் இன்று.*


*ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5 ஆம் தேதி சர்வதேச ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.*

*யுனெஸ்கோ*
*அமைப்பால் 1994ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து  அக்டோபர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.*

*ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது.* *ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு* *நன்றி தெரிவிக்கும் விதமாகவும்* *இது நடைமுறைப்*
*படுத்தப்பட்டு வருகின்றது.*

*இந்தியா, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறது.*

*ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூறவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.*
----------------------------------------------


*🌷வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடிய இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று (1823).*


*அடிகளார் தருமசாலை அமைத்து மக்களுக்கு மூன்று வேளையும் உணவளித்தவர். இன்றும் தமிழக அரசு இந்த தருமசாலைக்கு குறைந்த விலையில் பொருட்களைக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. எந்த உயிரையும் கொல்லக்கூடாது என வாழ்ந்தவர். ஆரிய எதிர்ப்பு, சமஸ்கிருத மாயை உடைப்பு என அன்றே ஆரம்பித்தவர்.*

*சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கு தாய் மொழி என்று சொன்ன பொழுது, சிறிதும் தயங்காமல் அப்படியானால் தமிழ் தான் தந்தை மொழி என பதிலளித்தவர். அன்றே தமிழ் தனித்தியங்கும் மொழி என்றும், சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என்றும் மக்களுக்கு உணர்த்தியவர் வள்ளலார்.* *"தாய்மொழிப் பற்றும் துறக்க முடியாதது, துறக்கவும் கூடாது என்பதனை உலகினர்க்கு உணர்த்தியவர் வள்ளலார் ஒருவரே" என ம.பொ.சி இவரின் தாய்மொழிப் பற்றை விளக்குகிறார்.*

*இவர் காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதிகள் இராமகிருட்டிண பரமஹம்சர், தயானந்த சரசுவதி, இராசராம்* *மோகன் ராய், விவேகானந்தர் ஆகியோர் வடமொழியை ஏற்று வைதீக மதத்தை போற்றி* *வந்தனர்.* *இவரோ தமிழை ஏற்காத வைதீக மதத்தையும் வடமொழியையும் புறக்கணிக்கத் துணிந்தார்.*
*ஏழை, பணக்காரன், மேல்சாதி, கீழ்சாதி, முறைகளை வன்மையாகக் கண்டித்தவர். சாதி சமய வேறுபாடுகளைக் கடுமையாய் எதிர்த்தார். மக்கள் வாழப் பயன்படும் நெறியே நன்னெறி எனப் போற்றினார்.*

*சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க அதையும், அதன் மூலமான சாத்திரங்களைக் குப்பை என சொல்லி,* *புதைக்கச் சொன்னவர்:*
*"இருட்சாதித் தத்துவச்*
*சாத்திரக் குப்பை*
*இருவாய்ப் புன்செயில்*
*எருவாக்கிப்போட்டு*
*மருட்சாதி சமயங்கள்*
*மதங்களாச் சிரம*
*வழக்கெல்லாம்* *குழிக்கொட்டி*
*மண்மூடி போட்டு"*

*புலவராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, உரைநடை எழுத்தாளராக, நூலாசிரியராக, உரையாசிரியராக, ஞானாசிரியராக, போதகாசிரியராக, மருத்துவராக, இவர்களுக்கெல்லாம் மேலாகத் துறவியாக, ஞானியாக, சித்தராக வாழ்ந்தவர்.*
----------------------------------------------



*🌷எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் பிறந்த தினம் இன்று(1927).*

*எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் கும்பகோணத்தில் பிறந்தார். இவரது தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமஸ்கிருதப் பண்டிதர். ரங்கராஜன் தன் 16ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார்.*

*இவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம்,வினோத் ஆகியவை அவற்றுள் சில.*

 *'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம்.*

 *ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ்(தாரகை), தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன்* *(லாரா) மற்றும் ரேஜ் ஆஃப் ஏஞ்சலஸ் (ஜெனிஃபர்);*
*ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல்(டுவிஸ்ட் கதைகள்) டேனியேல் ஸ்டீலின் காதல் மேல் ஆணை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள்.*

 *கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுஷ்ய கதைகளும்*
*டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக் கதைகள், வினோத் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட செய்திக் கட்டுரைகள் (லைட்ஸ் ஆன் வினோத்) என பலவித படைப்புகளை எழுதியுள்ளார்.*
-------------------