ஞாயிறு, 20 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
*🌷எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவு தினம் இன்று.*


*ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 20, 2014) மூத்த தமிழக பெண் எழுத்தாளர்*
 *ஆவார். இவருடைய காலத்தின் பெண் அடிமை நிலையையும் மற்ற சமூக அவலங்களையும் இவரின் படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.*


*ராஜம் கிருஷ்ணன்*
*1925ஆம் ஆண்டு தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தவர். பள்ளிக்கு சென்று முறையான கல்வி பயிலாதவர். பெண்கள் பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, 15ஆவது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.திருமணத்திற்குப் பின்னர் சென்னை கிழக்கு தாம்பரத்தில் குடியேறினார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.*


*பொதுவாக தனது படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்கு வாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக* *உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர்.*
*1970ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மணிகள்' என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை* *சந்தித்தவர். அதன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழுதியவர். இவரின் 80க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன.* *இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க காங்கிரஸ்* *நூலகத்தில் கிடைக்கப்*
*பெறுகின்றன.*


*இவரது நூல்கள் தமிழக அரசால் 2009 ஆம் ஆண்டில் அரசுடமை ஆக்கப்பட்டன. இதற்காக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நூல்களே.*


*கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் ஆயிற்று. பின்னர், தன் தொண்ணூறாம் வயதில், 2002 ஆம் ஆண்டில், அவர் இயற்கை எய்தினர். ராஜம் - கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. முதுமையில் வறுமையால் வாடிய இவர் சென்னையில் உள்ள விஸ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் வாழ்ந்தார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 20 அக்டோபர் 2014, திங்கள்கிழமை இரவு காலமானார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.*
*🌷அக்டோபர் 20, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*🌷உலக புள்ளியியல் தினம் இன்று.*


*ஐக்கிய நாடுகள் பொது சபை, கடந்த 2010 ஆண்டு அக்டோபர் 20  ஆம் தேதியை உலக புள்ளியியல் தினம்  (World Statistics Day, October 20)  ஆக அறிவித்துள்ளது. புள்ளியியல் என்பது கணித அறிவியல். இது விவரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல், தொடர்புபடுத்திப் பார்த்தல், விளக்குதல், விவரங்களை வரைபடமாக வழங்குதல் ஆகிய செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.*

*இவ்வாறு பெறப்படும் புள்ளியியல் விவரங்கள் வணிகம் மற்றும் அறிவியல் போக்குகளை முன்கூட்டியே கணிக்க உதவகின்றன. இயற்கை அறிவியல்கள், அனைத்து சமூக அறிவியல்கள், அரசாங்கம் மற்றும் வணிகம் போன்ற பல்வேறு கல்வித்துறைகளிலும் புள்ளியியல் பயன்படுத்தப்படுகிறது.*

*மக்கள் தொகை, மிருகங்கள், தயாரிப்பு பொருட்கள் முதலியவற்றின் புள்ளி விவரங்களை சேகரித்து, கணக்கியல் அடிப்படையில் ஆராய்ந்து, தொகுக்கப்பட்ட தகவல்களை கணக்கியல் வடிவத்தில் வெளிப்படுத்துவதே புள்ளி விவர படிப்பு.உயிரியல், கல்வி, பௌதிகம், மனோதத்துவம், சமூகவியல் முதலிய துறைகளில் புள்ளி விவரம் பயன்படுத்தப்படுகிறது.*

*ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இப்புள்ளி விவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத் துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. புள்ளி விவரங்களின் பயன்பாட்டின் வெற்றியையும், அவற்றின் சேவை, மேன்மை மற்றும் தொழில் திறமையையும் கொண்டாடுவதே இத்தினத்தின் பொது நோக்கமாகும்.*

சனி, 19 அக்டோபர், 2019

*🌷12% த்திலிருந்து 17% அகவிலைப்படி உயர்வு வித்தியாசத் தொகை கணக்கீடு அட்டவணை*👆

*🌷12% த்திலிருந்து 17% அகவிலைப்படி உயர்வு வித்தியாசத் தொகை கணக்கீடு அட்டவணை*👆



*🌷அp∆ⁿக்டோபர் 19, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------
*🌷அணுக்கரு இயற்பியலின் தந்தை எர்னஸ்ட் ரூதர் போர்ட் நினைவு தினம் இன்று.*

*எர்னஸ்ட் ரூதர் போர்ட் (Ernest Rutherford, ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். அணுவின் தொடர்ந்த சிதைவினால் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய ஆய்வுக்கு வழி வகுத்தவரும் இவரே. தனிமங்களின் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கச் சேர்மானங்கள் குறித்த இவரது கண்டுபிடிப்பிற்காக இவர் 1908ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார். அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை 'அணுக்கரு இயற்பியலின் தந்தை' எனப் போற்றுகின்றனர்.*
*🌷அக்டோபர் 19, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------

*"உலகின் முதல் பெண் மருத்துவர்" என்ற பெருமை படைத்த இங்கிலாந்தைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்வெல் மருத்துவத்துறையில் அடியெடுத்து வைத்த தினம் இன்று.*

*இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகங்களில் அந்தக் காலத்தில் பெண்களுக்கு மருத்துவம் படிக்க அனுமதி இல்லை.*

 *எனவே அமெரிக்காவில் குடியேறி, நியூயார்க் ஜெனீவா கல்லூரியில் உடற்கூறு மருத்துவம் படித்து பட்டம் பெற்றார். 1849இல் இவர் உலகின் முதல் பெண் மருத்துவராக மருத்துவ பதிவுத்துறையில் பதிவு பெற்றார்.*

 *இவரது சகோதரி எமிலி உலகின் 3ஆவது பெண் மருத்துவர் என்ற சிறப்பு பெற்றவராவார்.*
*🌷அக்டோபர் 19, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------

*🌷நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம் இன்று.*

      *வே.ராமலிங்கம் பிள்ளை(அக்டோபர் 19, 1888 - ஆகஸ்ட் 24, 1972) “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடி தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் பின்னர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.*

*இராமலிங்கனார் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம்* *மோகனூரில் அம்மணிம்மாள், வெங்கடராமன் ஆகியோருக்கு பிறந்தார்.* *திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ்* *தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர்.* *தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி,* *கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.* *1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை* *பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.*
*‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.*

*கவிஞரின் நாட்டுப்பற்று :*

*முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச்* *சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.*
*'கத்தி யின்றி ரத்த மின்றி*
*யுத்த மொன்று வருகுது*
*சத்தி யத்தின் நித்தி யத்தை*
*நம்பும் யாரும் சேருவீர்’*
*என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.*

*மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு :*

*கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.*

*நினைவு இல்லம் :*

*தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.*

NTSE 2019 -தேசிய திறனாய்வு தேர்வு நுழைவுச் சீட்டு 21.10.2019 முதல் பதிவிறக்கம் செய்யலாம்