வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஜனவரி 24,
வரலாற்றில் இன்று.

சி.பி. முத்தம்மா பிறந்த தினம் இன்று(1924).

இந்தியாவின் உயர் அதிகாரிகளாக ஆவதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.ஆனால் அவற்றில் வெற்றிபெற்றாலும் பெண்கள் அதில் சேர முடியாத நிலை இருந்தது. அதை முதலில் உடைத்து வெற்றி பெற்ற பெண் சி. பி. முத்தம்மா கர்நாடகத்தில் பிறந்தவர்.

அவர் சென்னையில் உள்ள பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரிகளில் மூன்றுமுறை தங்கப்பதக்கம் பெற்ற மாணவி.

இந்தியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949இல் பணியில் சி.பி. முத்தம்மா சேர்ந்தார்.

அவர் காலத்தில் வெளியுறவுத் துறையில் உள்ள பெண் அதிகாரி திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசின் அனுமதியைப் பெற வேண்டும், திருமணம் வேலையைத் தடுக்கிறது என அரசு கருதினால் அவர் ராஜினாமா செய்துவிட வேண்டும் என்பன உள்ளிட்டுப் பெண்களுக்கு எதிரான பல விதிகள் இருந்தன.

அவற்றை எதிர்த்து முத்தம்மா உச்ச நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பில் “வெளியுறவுத் துறையில் காணப்படும் 8(2)ஆம் விதி பெண்களுக்கெதிரான பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகிறது.

ஒரு பெண் திருமணத்துக்கு முன்னர் அரசின் அனுமதியைப் பெற வேண்டுமென்றால் ஒரு ஆண் அதிகாரியும் அத்தகைய அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியம். தமது குடும்பப் பொறுப்புகள் காரணமாக ஒரு பெண் தனது பணியைச் சரிவரச் செய்ய முடியாவிட்டால் அவரது பணி பறிபோகும் என்றால் அந்த விதி, மணமான ஆணுக்குமல்லவா பொருந்தும்?

விதி 18 அரசியல் சாசனத்தின் 16ஆம் பிரிவுக்கு முரண்பட்டதாகும். திருமணமான ஆண் வெளியுறவுத் துறையில் பணியிலமர்த்தப்படுவதை உரிமையாகக் கோரமுடியும் என்றால் திருமணமான பெண்ணுக்கும் அல்லவா அது பொருந்தும்? பெண்கள் பலவீனமானவர்கள் என்ற கருத்தாக்கம் கொண்ட ஆணாதிக்கக் கலாச்சாரத்தின் தொடர்ச்சியல்லவா இத்தகைய நடவடிக்கைகள்? சுதந்திரமும் நீதியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. அரசியல் சாசனம் சொல்லுகிற சமநீதித்துவம் நடைமுறையில் செயல்படுத்தப்படுவதில்லை என்பதை அல்லவா இது காட்டுகிறது என்று எடுத்துரைத்தார்.

மேற்காணும் பாலியல் பாகுபாடு நிறைந்த விதிகள் நீக்கப்பட்டதாக வெளியுறவுத் துறையின் சார்பில் பிரமாணப் பத்திரம் அளிக்கப்பட்டதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். முத்தம்மாவின் தகுதி பதவி உயர்வுக்கு ஏற்றதாக இருக்கிறதென அறிவித்த அரசு அவரை நெதர்லாந்துக்கான இந்தியத் தூதராக நியமித்தது.

இந்த வழக்குக்குப் பிறகு ஆணாதிக்க விதிகள் உடனே மாற்றப்பட்டன. இதனால் முத்தம்மா பதவி உயர்வுகளைப் பெற்றார். வெளிநாட்டு தூதர், ஹைகமிஷனர் பதவிகளில் அமர்ந்த முதல் இந்தியப் பெண் ஆனார்.

32 ஆண்டுகள் அரசுப்பணியைச் செய்தபிறகு 1982இல் ஓய்வு பெற்றார்.அனாதை ஆசிரமம் கட்ட அன்னை தெரசாவுக்கு டெல்லியில் இருந்த அவரது சொந்த நிலம் 15 ஏக்கரைத் தந்தார். தனது 85ஆவது வயதில் 14.10.09 அன்று காலமானார்.
ஜனவரி 24,
வரலாற்றில் இன்று.

இந்திய அணுவியல் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் நினைவு தினம் இன்று(1966).

• மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் சம்பந்தப்பட்ட அத்தனை புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டார்.

• பட்டப் படிப்பு முடித்தவுடன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பதற்காக அவரை பெற்றோர் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவருக்கு இயற்பியலில்தான் ஆர்வம். அப்பாவிடம் அணு இயற்பியல் படிக்க விரும்புவதாக கூறினார்.

• அதன்படியே, பாபாவை அவரது அப்பா இயற்பியல் படிக்க வைத்தார். 1932இல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

• 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்த கால கட்டத்தில் இவர் நீல்ஸ் போர் என்பவருடன் மேற்கொண்ட ஆய்வுகள் குவாண்டம் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. மேலும் வால்டர் ஹைட்லருடன் மேற்கொண்ட இவரது ஆராய்ச்சிதான் காஸ்மிக் கதிர்களைப் புரிந்துகொள்வதில் மிக முக்கிய பங்கு வகித்தது.

• இந்தியா திரும்பிய அவர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் துறை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிப் பிரிவைத் தொடங்கினார்.

• அமெரிக்காவில், 1942ஆம் ஆண்டு அணு உலை சோதனை நடத்தப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் அணுசக்தி இயற்பியல் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டாட்டாவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, மும்பையில் இதற்கான ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு நிலையத்தின் இயக்குநராக ஹோமிபாபா பொறுப் பேற்றார்.

• இந்தியா விடுதலை அடைந்த பிறகு உலகம் முழுவதும் உள்ள இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படி கேட்டுக்கொண்டார். இவரது அழைப்பை ஏற்று இந்தியா வந்த அவர்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக பணிபுரியத் தொடங்கினர்.

• அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956இல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது.

• 1955இல் ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். மேலும், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உத்தரவை அடுத்து அணுகுண்டு வெடிப்பு சோதனைக்கான ஆரம்பகட்ட முயற்சிகளை விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொண்டார்.

• ஜஹாங்கீர் ஹோமி பாபா ஸ்விட்சர்லாந்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 56ஆவது வயதில் காலமானார்.
ஜனவரி 24, வரலாற்றில் இன்று.

தேசிய கீதம், அறிவிக்கப்பட்ட தினம் இன்று(1950).

நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் எழுதப்பட்ட இந்த பாடல்  1911 ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா கூட்டத்தில் முதன் முறையாக பாடப்பட்டது.

இந்தியா சுதந்திரமடைந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 24, 1950இல் இப்பாடல் நம் நாட்டின் தேசிய கீதம் என இந்திய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது.

தேசிய கீதம் சமஸ்கிருதம் மற்றும் பெங்காலி மொழிகளில் எழுதப்பட்டது.

ஐந்து சரணங்கள் உள்ள இப்பாடலை பாடும் நேரம் 52 வினாடிகள் ஆகும்.

இந்த தேசிய கீத பாடலை 'இந்திய காலை பாடல்' என்று ஆங்கிலத்தில் தாகூர் மொழி பெயர்த்தார்.
 இதற்கு ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மடனபள்ளே என்ற நகரத்தில் தாகூரே இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல் ஒலிக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்தியர்கள் அனைவரும் தன்னை அறியாமல் எழுந்து நிற்பதற்கு இப்பாடலின் மகத்துவமே சாட்சி.
ஜனவரி 24,
வரலாற்றில் இன்று.

தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று.


இந்தியாவில் பெண் குழந்தைகளின் நலனை காக்கும் விதமாக ஜனவரி 24ஆம் தேதியை தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

மறைந்த பிரதமர் திருமதி இந்திரா காந்தி  1966ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி நம் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்றார். அந்த நாள் 2009ஆம் ஆண்டிலிருந்து தேசிய பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளைப் போற்றி,
கொண்டாடிடுவோம் !

வியாழன், 23 ஜனவரி, 2020

GoNo:19_Higher education 14.01.2020


GO No:20_Higher education 14.01.2020

2019-2020 ஆம் ஆண்டுக்கான வருமான வரிப் படிவம் ( Income tax Statement )தயார் செய்ய கீழே உள்ள இணைப்பை தொடர்க..

அரசு தேர்வுகள் இயக்ககம் _பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் 2020 - 75%வருகைப் பதிவு இல்லாத பள்ளி மாணவர்கள் விவரம் கோருதல் சார்ந்து தேர்வுகள் இயக்ககம் இயக்குநர் செயல்முறை 22.01.2020


மாநிலத்திட்ட இயக்குநரின் 21.01.2020 ஆம் நாள் கூட்ட வழிகாட்டல்கள்

தொடக்கக்கல்வி -பள்ளிகளின் பழுதடைந்த சுற்றுச்சுவர் மாணவர்கள் பாதுகாப்பு கருதி தக்க நடவடிக்கை மேற்கொள்ள இயக்குநர் செயல்முறை