வெள்ளி, 31 ஜனவரி, 2020
ஊதிய குறைதீர்க்கும் குழுத் தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _கோரிக்கை படைப்பு 31.01.2020
ஊதிய குறை தீர் குழுத்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _கோரிக்கை படைப்பு
********************
மாண்பமை டெல்லி உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரும்,
ஊதியக் குறை தீர் குழுவின் தலைவருமான திரு.டி.முருகேசன்அவர்களின் தலைமையிலான குழுவின் அழைப்பின் அடிப்படையில் இன்று (31.01.2020 - வெள்ளி ) தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமேலவை உறுப்பினரும் , ஜாக்டோ- ஜியோவின் மாநில
ஒருங்கிணைப்பாளருமான , ஆசிரியர் இனக்காவலர்,
பாவலர். திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் தலைமையில்
மன்றப் பொறுப்பாளர்கள் நீதியரசர் அவர்களிடம் தமிழ்நாட்டு ஆசிரியர்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை விரிவாக விளக்கி கோரிக்கைகளை படைத்தனர்.
இச்சந்திப்பில் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களின் ஊதியப்பாதிப்புகள் பட்டியல் இடப்பட்டு , ஒப்புநோக்கித் தரப்பட்டுள்ளது. இக்குறைபாடுகள் களையப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. திரு.ராசீவ்ரஞ்சன் குழுவின் அறிக்கையில் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கான மத்திய ஊதியத்தை மறுத்து அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்பதை இக் குழுவின் முன் மிக விரிவாக கடந்தக்கால போராட்டங்கள், ஒப்பந்தங்கள் , உடன்படிக்கைகள் ஆகியவை எல்லாம் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஊதியத்தில் சுமார்15,000/க்கும் அதிகமாக ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டு இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.
தமிழ்நாட்டு ஆசிரியர்-அரசு ஊழியருக்கு மத்தியரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு 1989ஆம் ஆண்டில் கொள்கைப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு முன் தேதியிட்டு 1988ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது் 1996ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்திலும் மத்திய ஊதியத்தை ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கிஉள்ளது. இதைப்போன்றே 2006 ஆம் ஆண்டு ஊதிய
மாற்றத்தில் இடைநிலை சாதாரணநிலை் ஆசிரியருக்கு வழங்கப்படவில்லை என்பதை தமிழக அரசிடம் வலியுறுத்திக் கேட்டப்பொழுது ரூ750/தனி ஊதியம் இடைக்கால ஏற்பாடாக தரப்பட்டு மத்திய ஊதியம் வழங்கப்படும் என்று உறுதிமொழி தரப்பட்டுள்ளது.
ஆனால் , அடுத்து அமைந்த அரசுகள் மத்திய ஊதியத்தை தரவில்லை; தர மறுத்து வருகிறது.
01.06.2006 ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்தில் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு 9300-34800+4200 தர ஊதியம் கொண்ட ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்டு , இதன் பின்னரே 2016ஆம் ஆண்டு ஊதிய மாற்றத்தில் மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரணநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிடும் வகையில் மிகஅழுத்தமான, சாதகமான பரிந்துரைகளை நீதியரசர் தலைமையிலான இக்குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்திடுமாறு மிகவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-மாநில அமைப்பு

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)