அரசுத் தரவுகளின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக மத்திய அரசு ரூ.99 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்
இதில் ரூ.3 ஆயிரம் கோடி திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ''ஒட்டுமொத்த பட்ஜெட்டில், கல்விக்காக 3.2% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது 2014-15, 2015-16, 2016-17, 2017-18 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே 4.61%, 3.89%, 3.66%, 3.71% மற்றும் 3.48% ஆக இருந்தது.
உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) சதவீத அடிப்படையில் 2014-15, 2015-16, 2016-17, 2017-18 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே 4.07%, 4.20%, 4.32% மற்றும் 4.43% ஆக இருந்தது'' என்று குறிப்பிட்டார்.