செவ்வாய், 3 மார்ச், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) ~ முப்பெரும் விழா (08-03-2020) அழைப்பிதழ்...

அன்பானவர்களே!வணக்கம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், பாவலர்.திரு.க.மீ., அவர்களின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு ஜாக்டோ-ஜியோவின் 22.01.2019 ஆம் நாள் முதலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் எழுச்சியுடன்  பங்கேற்றுள்ள மறவர்-மறத்தியர் அனைவருக்கும்  இருகரம் குவித்து தலைதாழ்த்தி  வணக்கம் -வாழ்த்து-பாராட்டு உரித்தாக்கிக் கொள்கிறோம்.

எதிர்வரும் 08.03.2020 (ஞாயிறு)அன்று முற்பகல் 10.00மணி அளவில் நாமக்கல்லில்  கடந்த 2019 சனவரி 22ஆம் நாள் முதலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றுள்ள மறவர்- மறத்தியர்களுக்கும் பாராட்டு செய்து சிறப்பித்திடும் வகையில்  முப்பெரும்விழா நடைபெறுகிறது.

தமிழ்நாடு காவல்துறையால் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றதற்காக  பொய்வழக்கு புனையப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தற்காலிக  பணிநீக்கம் செய்யப்பட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டும்,17(ஆ)ஒழுங்கு நடவடிக்கைகள் தொடுக்கப்பட்டும் பல்வேறுவகையான தாக்குதல்களை- கொடுமைகளை எதிர்கொண்டுள்ள ஆசிரியர் மன்றத்தின் சேலம் சிறைச்செம்மல்களுக்கு- தியாகச்செம்மல்களுக்கு  சிறைசெம்மல் விழா
நடைபெறுகிறது.

மாநிலத்தலைமை அறிவிக்கும் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக ஆசிரியப்பணி மறுக்கப்பட்டு பணிக்காக காத்திருப்போர் கறுப்புப்பட்டியிலில் வைக்கப்பட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டும்,17(ஆ)ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு வகையான சவால்களை சந்தித்துள்ள  மன்ற மறவர்-மறத்தியருக்கு வேலை நிறுத்தப் போராளி விழா நடைபெறுகிறது.

வேலைநிறுத்தக் காலத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகி விடுவிக்கப்பட்டுள்ள செயல்நிறை மறவர்-மறத்தியர்  மற்றும்  வேலைநிறுத்தக் காலத்தில்   போராட்டப் பாரம்பர்யத்தை - போராட்டப் பெருமையை
தாழ விடாது  உயத்திப்பிடித்துள்ள செயல்நிறை மறவர்-மறத்தியர் ஆகியோருக்கு
மன்றச்செம்மல்  விழா 
நடைபெறுகிறது.

கடந்த 2019சனவரி 22ஆம் நாள் முதலான வேலைநிறுத்தத்தில் மாநிலத்தலைமையின் முடிவுகளை முழுமையாக நிறைவேற்றிய மறவர்-மறத்தியருக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி பாராட்டுச் சான்று வழங்கி சிறப்புச்செய்து முப்பெரும் விழாப்பேருரையை  இனமானக் காவலர்-பாவலர் திரு.க.மீ., அவர்கள்  ஆற்றுகிறார்கள்.

இவ்விழாவில் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில- மாவட்ட- ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்ற முன்னோடிகள், ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் முழுமையாக -நிறைவாக பங்கேற்று பங்களிப்புச் செய்து முப்பெரும் விழாவினை சிறப்புறச்செய்தும்- வெற்றிபெறச் செய்தும்  எல்லோருக்குமான ஒட்டுமொத்தப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு பாதிப்புகளை- இழப்புகளை அடைந்துள்ள ஆசிரியர் மன்றத்தின்  செம்மல்களுக்கு நன்றி பாராட்டி  உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

~முருகசெல்வராசன் & மெ.சங்கர்.


ஞாயிறு, 1 மார்ச், 2020

DEE proceedings_ தொடக்கக் கல்வி_நிதி உதவி பெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளி களுக்கு 2019ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:28.02.2020

ஆதார் டவுன்லோடு செய்ய இனி முகம் பதிவு கட்டாயம்...

டிஸ்லெக்சியா பாதிப்பு உள்ள தேர்வர்கள் விடைத்தாளில் சிவப்பு மையில் குறிப்பு எழுதுதல்- விடைத்தாளை சிவப்பாக்குதல் சார்ந்து தேர்வுகள் துறை இயக்குநர் செயல்முறை நாள்:29.02.2020

சனி, 29 பிப்ரவரி, 2020

DSE Proceedings_ பள்ளிக் கல்வி- நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பள்ளிகள் பெயர் பட்டியல் -சட்டமன்ற தொகுதி வாரியாக!

பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்டம் வாரியாக அதிகாரிகள் நியமனம் அரசாணை வெளியீடு

பொதுத்தேர்வு மார்ச் 2020 வருகைப்புரியாத தேர்வர்கள் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்ந்து தேர்வுகள் இயக்கக இயக்குநர் செயல்முறை நாள் 28.02.2020



ஓய்வு பெறுபவர் மீது 17bகுறிபாணை நிலுவையில் உள்ளதால் அவருக்கு தற்காலிக பணி நீடிப்பு ஆணை வழங்கப்பட்டது- திமிரி வட்டார கல்வி அலுவலகம்