வியாழன், 5 மார்ச், 2020

மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகளின் பட்டியல் வெளியீடு.


இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான தொடக்க பணிகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.


இது சம்பந்தமாக மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 14 பக்கங்கள் கொண்ட அந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனை பதிவாளர் ஜெனரல் விவேக் ஜோஷி கண்காணிக்க உள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட பணியும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 2-வது கட்ட பணியும் நடைபெற உள்ளது.

முதல்கட்ட பணியோடு சேர்த்து தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்தப்படும். முதல் கட்ட பணியில் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 2-வது கட்ட பணியின்போது நேரடியாக அவர்களிடம் கேள்வி கேட்கப்படும்.



மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 34 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. இவற்றில் 31 கேள்விகளின் விவரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 3 கேள்விகளின் விவரம் வெளியிடப்படவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இடம்பெறும் 34 கேள்விகளின் விவரம் வருமாறு:-

1. வீட்டு எண், 2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண், 3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள், 4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு, 5. வீட்டின் தற்போதைய நிலவரம், 6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, 7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை, 8. குடும்ப தலைவரின் பெயர், 9. குடும்ப தலைவரின் பாலினம், 10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா? 11. வீட்டின் உரிமையாளர் விவரம், 12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை, 13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள், 14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.


15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது? 16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்? 17. கழிவறை உள்ளதா? 18. எந்த வகை கழிவறை? 19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது? 20. குளியலறை வசதி உள்ளதா? 21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா? 22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள். 23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா? 24. டெலிவிஷன் இருக்கிறதா? 25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?

26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா? 27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா? 28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா? 29. கார், ஜீப், வேன் உள்ளதா? 30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம், 31. மொபைல் போன் எண் போன்ற கேள்விகள் இடம் பெற்றுள்ளது.


முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் தனியாக சேகரிக்கப்படுகிறது. அதில் 14 கேள்விகள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், 1. பெயர், 2. மக்கள் தொகை பதிவேட்டில் இடம் பெற வேண்டிய பெயர், 3. குடும்ப தலைவருக்கு உறவு, 4. பாலினம், 5. பிறந்த தேதி, 6. திருமணமான விவரம், 7. கல்வித்தகுதி, 8. தொழில், 9. தந்தை, தாய், கணவர், மனைவி பெயர். 10. பிறந்த இடம், 11. குடியுரிமை, 12. தற்போது குடியிருக்கும் முகவரி. 13. தற்போதைய முகவரில் தங்கியுள்ள காலம், 14. நிலையான முகவரி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியருக்கு தேசிய விருது ~ விவரம் அனுப்ப சிஇஓக்களுக்கு சுற்றறிக்கை...

தமிழக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு சார்பில் தேசிய விருது வழங்கப்படுகிறது. தகுதியுள்ள ஆசிரியர்களின் விவரம் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஐசிடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. அதன்படி கடந்த 2018 மற்றும் 2019க்கான தேசிய விருதுகள் வழங்க, தகுதியான சிறந்த ஆசிரியர்களின் கருத்துருக்களை அனுப்பிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆர்வத்துடன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசின், ஐசிடி திட்டத்தின் கீழ் தேசிய விருது வழங்கப்படுகிறது. 

அதன்படி, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டிற்கு, தகுதியுடைய அனைத்து வகை ஆசிரியர்கள் சார்ந்த விவரங்களை, சிஇஓக்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

அத்துடன், ஆதார் இணைப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்துருக்களை 2பிரதிகளில் பரிந்துரைத்து, கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கு தனித்தனியாக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநருக்கு (தொழிற்கல்வி) வரும் ஜூலை 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டம் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளது என்பதால், சிஇஓக்கள் தனி கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், www.ciet.nic.in, www.ncert.nic.in என்ற இணையதளத்தில் சென்று பார்த்து அறிந்துகொண்டு, அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதேசமயம், கருத்துரு அனுப்பப்படும் ஆசிரியர்கள் எந்தவிதமான புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் உட்படாதவராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் நீதிமன்ற வழக்குகள், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படாதவர் என முதன்மை கல்வி அலுவலர்கள் சான்றளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதன், 4 மார்ச், 2020

பெண் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ள ஊராட்சியில் அவர்களது கணவர்கள் அல்லது உறவினர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடவோ, இருக்கையில் அமரவோ கூடாது- உதவி இயக்குநர்


ஏப்ரல் 2020_எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு- முதன்மை கண்காணிப்பாளர் வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமனம் செய்ய ஆணை வேண்டுதல் சார்ந்து அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் செயல்முறை நாள்:03.03.2020


பள்ளிகளின் நிலையான பராமரிப்பு விதிமுறைகள்

DSE Proceedings_ பள்ளிக்கல்வி_மத்திய அரசின் உதவித்தொகை-NMMS தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள் விவரங்கள் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (03-03-2020) ~நாளிதழ் செய்திகளில்...



தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்- கடனுதவி தொகை வழங்குதல் சார்ந்த தகவல்