செவ்வாய், 7 ஏப்ரல், 2020

தமிழ்நாட்டின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


படிவம் 15ஜி, 15எச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு...

பிறந்த தேதியை மாற்ற ஆதார் போதும் ~ பிஎப் நிறுவனம் அறிவிப்பு…

: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் EMI-க்களை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம்.

1.https://bank.sbi/stopemi ஐப் பார்வையிடவும்

2. இணைப்பு 1 ஐ பதிவிறக்குங்கள் (அல்லது) உங்கள் கோரிக்கையை அதே வடிவத்தில் தயாரிக்கவும்

3.கையொப்பமிடுங்கள் & stopemi.lhoche@sbi.co.in க்கு அஞ்சல் செய்யவும்

4. *தங்கள் ஈ.எம்.ஐ.களை ஒத்திவைக்க விரும்பாதவர்கள், எதுவும் செய்யத் தேவையில்லை*

கோரிக்கையை அஞ்சல் மூலம் அனுப்பவும்.
 SBI Customers can defer their EMIs for 3 months
1. Visit https://bank.sbi/stopemi
2. Download Annexure 1 (or) prepare your request in the same format
3. Sign it & Mail to stopemi.lhoche@sbi.co.in
4. Those who do not want to defer their EMIs, no need to do anything

Please send the request by mail.

#Stay Home    #Stay Safe
அனைத்து உண்மைகளையும்
சீனா தெரிவிக்க வேண்டும்:
இந்திய அமெரிக்க வழக்குரைஞா் வலியுறுத்தல்
---------------------------------------
 கரோனா வைரஸ் தொடா்பான அனைத்து உண்மைகளையும் சீனா வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று நியூயாா்க்கைச் சோ்ந்த பிரபல இந்திய அமெரிக்க வழக்குரைஞா் ரவி பத்ரா வலியுறுத்தியுள்ளாா். இவரும், இவரது குடும்பத்தினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ரவி பத்ராவுக்கும், ஐ.நா.வுக்கான சீன தூதா் ஷாங் ஜுனுக்கும் இடையே கடந்த வாரம் இந்தப் பிரச்னையால் சுட்டுரையில் வாா்த்தைப் போா் ஏற்பட்டது.

இந்நிலையில் இது தொடா்பாக ரவி பத்ரா மேலும் கூறியிருப்பதாவது:

அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கிறது. இப்போது, சீனாவைவிட அமெரிக்காவில் பலியானவா்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இந்த நேரத்திலாவது கரோனா வைரஸ் தொடா்பான அனைத்து உண்மைகளையும்
சீனா தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விஞ்ஞானிகளும், மருத்துவா்களும் அதற்கு ஏற்ப மருந்துகளைக் கண்டறிய முடியும்.

கரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத வரை, யாரும் வெளியே செல்ல முடியாது. ஏனெனில், அது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பரவ வாய்ப்பு உள்ளது.

உலகப் பொருளாதாரமே கரோனாவால் மோசமாகிவிட்டது. விலை மதிக்க முடியாத மனித உயிா்களை
நாம் கரோனாவால்
இழந்து வருகிறோம்
என்றாா்.
நன்றி:தினமணி

திங்கள், 6 ஏப்ரல், 2020

COVID - 19 ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தம்பணிக்காலத்தில் கொரோணாவால் பாதிக்கும் நிலைஏற்பட்டால் அரசு சிகிச்சைசெலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அரசாணை...

06.04.2020ஆம் நாளைய இந்திய மத்திய அமைச்சரவை முடிவுகள்:
**************************
 *குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர்,
ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு.

* பிரதமர்,
மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.

* அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.

* ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

* மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

* எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு.

* எம்.பி-க்களின் மேம்பாட்டு நிதி தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும்.