வியாழன், 16 ஏப்ரல், 2020

மாத ஊதியம் வங்கித்தகவல்:
""""""""""""""""""""""""""""""
 * அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத
சம்பள நாள்:28.04.2020.

* ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய  நாள்:29.04.2020

*பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சுற்றறிக்கை...

மாத ஊதியம் வங்கித்தகவல்: """""""""""""""""""""""""""""" * அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பள நாள்:28.04.2020. * ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய நாள்:29.04.2020 *பாரத ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சுற்றறிக்கை...


மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபுதிய வருமான வரியைபின்பற்ற விருப்பமா?~ வரிகள் ஆணையம் வேண்டுகோள்...

கொரோனாவை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்~ஆயுர்வேத முறைகளை பரிந்துரை செய்த ஆயுஷ் அமைச்சகம்…

புதன், 15 ஏப்ரல், 2020

*🌐மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு- மத்திய உள்துறை அமைச்சகம்*

*(முழு விவரம்)*

*☀பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்படும்.*

*☀இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.*

*☀மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.*

*☀வரும் 20ந் தேதிக்கு பிறகு மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி*

*☀கட்டுமானப்பணிகள் நடைபெறவும் மத்திய அரசு அனுமதி*

*☀வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி*

*☀மீன் இறைச்சி கடைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு*

*☀வங்கிகள், ஏ.டி.எம்கள், காப்பீட்டுத் துறைகள் இயங்கும்.*

*☀மே 3 வரை அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து*

*☀மக்கள் கூடும் அனைத்து இடங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்க மே 3 வரை தடை*

*☀மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.*

*☀தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்.*

*☀மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை.*

*☀ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி*

*☀ஏப்ரல் 20க்கு பின்  ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க்  அணிவது கட்டாயம்*

*☀சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செயல்படும் தொழிற்சாலைகள் 20ந் தேதி முதல் இயங்க மத்திய அரசு அனுமதி*

*☀அனைத்து கல்வி நிலையங்கள், பொது போக்குவரத்து சேவைகள் இயங்க தடை*

*☀அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்க அனுமதி*

*☀நியாய விலைக்கடைகள் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி*

*☀விவசாய பணிகளை மேற்கொள்ள தடை இல்லை.*

*☀தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்!*

*☀ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி*

*☀ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் செயல்பட அனுமதி*

*☀ஏப்ரல் 20ஆம் தேதி முதல் சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம்*

*☀முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற அனுமதி*

“ஆரோக்கிய சேது” கைப்பேசி செயலி ~ கொரோனா பற்றிய எச்சரிக்கை நமது கையில்...


வீடியோ சந்திப்புகளுக்கு வழி செய்யும் 'ஜூம்' செயலி - பயன்பாடும், விழிப்புணர்வும்...

*மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவ எந்த தடையும் இல்லை.-தமிழக அரசு விளக்கம்.*

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

*🌐மே மாதம் 3 ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கினை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை.*

*21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பிரதமர் உரை.*

*கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது.*

*ஊரடங்கால் சிலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என்பது உண்மை தான்.*

*கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை சிறப்பான பாதையில் செல்கிறது.*

*ஊரடங்கால் சிலர் தங்கள் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார்கள் என்பதையும் உணர முடிகிறது.*

*பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு நாட்டை மக்கள் அனைவரும் காத்து வருகின்றனர்.*

*கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் படை வீரர்கள் போல் செயல்படுகின்றனர்.*

*ஊரடங்கை சிறப்பாக பின்பற்றி கொரோனா பரவலை மக்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர்.*

*கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.*

*கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக தவிர்த்துள்ளது.*

*கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்தவர்களை விமான நிலையங்களில் முன்கூட்டியே பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.*

 *இந்தியாவில் முதல் கொரோனா உறுதிப்படுத்தும் முன்பே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை யாரும் மறுக்க முடியாது.*

*கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பல்வேறு நாடுகளை விட இந்தியாவின் செயல்பாடு சிறப்பானது.*

*கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவின் செயல்பாட்டை உலகமே பாராட்டுகிறது.*

*சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.*

*மற்ற எதையும் விட இந்திய மக்களின் உயிர் முக்கியமானது என்கிற அடிப்படையில் அரசு செயல்படுகிறது.*

*கொரோனாவுக்கு எதிராக மாநில அரசுகள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன.*

*கொரோனா ஊரடங்கு சமயத்தில் மாநில அரசுகள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தன.*

*மத்திய அரசும், சுகாதாரத்துறை நிபுணர்களும் தற்போதும் உஷார் நிலையில் இருக்கின்றன.*

*ஊரடங்கை நீட்டிப்பது என்று பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டன.*

*மே 3ந் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.*