ஞாயிறு, 24 மே, 2020

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட தகவல் தொழில் நுட்பக்குழுவின் சார்பில் ஆசிரியர் இனக்காவலர், பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் புகழ் வணக்கம் கூட்டம் கபிலர்மலை ஒன்றிய (பரமத்தி-வேலூர்) அலுவலகத்தில் 24.05.2020 (ஞாயிறு) பிற்பகல் 03.30மணியளவில்  மாவட்டச்செயலாளர் திரு.மெ.சங்கர் தலைமையில்  நடைபெற்றது.

ஆசிரியர் இனக்காவலர் ,
பாவலர் திரு.க.மீ., அவர்களின் திருஉருவப்படத்தினை மாநிலச்செயலாளர் திரு.முருகசெல்வராசன் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி  புகழ்வணக்கம்  படைத்தார்.

மாவட்ட தகவல் தொழில் நுட்பக் குழுவின்  அமைப்பாளர்களான மாவட்டத்துணைச்செயலாளர்  திரு.வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி ,
சேந்தமங்கலம் ஒன்றியத்தலைவர் திரு.கா.செல்வம்,
பரமத்தி் ஒன்றியச்செயலாளர் திரு.க.சேகர், கபிலர்மலை ஒன்றியத் துணைச் செயலாளர்
திரு.இர.மணிகண்டன்  மற்றும்
கபிலர்மலை ஒன்றியத் துணைத்தலைவர் திரு.வி.சிவக்குமார் ஆகியோர் அய்யா அவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தி புகழ்வணக்கம் படைத்தனர்.







இணையத்தின் வழியில் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யலாம் !
நீதிமன்ற பதிவாளர் அவர்களின் கடிதம் !
மே 24, வரலாற்றில் இன்று

அலெக்சாண்ட்ரினா விக்டோரியா பிறந்த தினம் இன்று.

👰 இந்தியாவின் முதல் பேரரசியான அலெக்சாண்ட்ரினா விக்டோரியா 1819ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

👰 இவர், தனது 18வது வயதில் இங்கிலாந்தின் ராணியானார். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகள் 7 மாதங்களாகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

👰 இவரது காலம் தொழிற்புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராஜ்ஜியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசாகவும் திகழ்ந்தது.

👰 'ஐரோப்பாவின் பாட்டி' எனும் பட்டப் பெயரை கொண்ட விக்டோரியா மகாராணி, 81வது வயதில் (1901) காலமானார்.
மே 24, வரலாற்றில் இன்று.

புரூக்ளின் பாலம் திறக்கப்பட்ட தினம் இன்று.

புரூக்ளின் பாலம் ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழைமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மன்ஹாட்டனிலிருந்து இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டிமுடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.
மே 24, வரலாற்றில் இன்று.

கேப்ரியல் பாரன்ஹீட் பிறந்த தினம் இன்று( 1686) .

டேனியல்கேப்ரியல் பாரன்ஹீட்  டச்சு
பொறியாளர். ஆல்கஹால்
தெர்மாமீட்டர் மற்றும் மெர்குரி
தெர்மாமீட்டரைக் கண்டுபிடித்தவர்.
மே 24, வரலாற்றில் இன்று.

1844ஆம் ஆண்டு இதே நாளில் தான் கட் - கட எனும் சங்கேத ஒலிகள் கொண்ட தந்தி முறையைக் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் உலகின் முதலாவது தந்திச் செய்தியினை அனுப்பினார். அமெரிக்க தலைநகரான வாஷிங்டனிலிருந்து மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரிலிருந்த தனது உதவியாளர் ஆல்பிரட் வெய்லுக்கு உலகின் முதலாம் தந்தி செய்தியை அனுப்பினார். மோர்ஸ் அனுப்பிய அந்த முதலாம் தந்திச் செய்தி: "கடவுள் என்ன செய்தார்?" என்பதாகும்.
"What hath God wrought?" – (Bible, Numbers 23:23) மோர்ஸ் உருவாக்கி அதனை இவ்வாறு நடைமுறைப்படுத்திய இந்த தந்தி முறை தகவல் தொடர்பில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

சனி, 23 மே, 2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*
*நிறுவனர்; பாவலர். க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc*.

-------------------------
*செய்தி அறிக்கை:*
🟩🟩🟩🟩🟩🟩
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்*

*மாநிலத் தலைவர் முனைவர் மன்றம்*  *நா.சண்முகநாதன்,*

*துணைப்பொதுச் செயலாளர் இலா.தியோடர் ராபின்சன்,*

*மாநிலப் பொருளாளர் அம்பை .ஆ. கணேசன் ஆகியோர் விடுக்கும் கூட்டு செய்தி அறிக்கை:*
---------


-----------------------
மே 23,
வரலாற்றில் இன்று.

தமிழக அரசு மதுபானங்களை விற்பனை செய்ய டாஸ்மாக் (Tasmac) ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (1983).
மே 23, வரலாற்றில் இன்று.

 நவீன நாடக இலக்கியத்தின் தந்தை
ஹென்ரிக் இப்சன் நினைவு தினம் இன்று

 இப்சன்( மார்ச் 20, 1828 - மே 23, 1906) நவீன நாடக இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுபவர். நார்வேயைச் சேர்ந்த இவர் நாடகாசிரியரும், கவிஞரும் ஆவார். ஐரோப்பிய நாடகங்கள் மறுமலர்ச்சி பெற உதவியவர். இவரது பொம்மைவீடு நாடகம் உலகப் புகழ் பெற்றது.
மே 23,
வரலாற்றில் இன்று.


 கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம் இன்று.

கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23 இல் சுவீடன் நாட்டில் பிறந்தார். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். இவர் புதிய மற்றும் தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர் முறைக்கும் அடிப்படையை உருவாக்கினார். எனவே இவர் நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.