திங்கள், 1 ஜூன், 2020

பள்ளிக் கல்வி - நாமக்கல் மாவட்டம் -தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளஅனைத்து வகைப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களிலும் பயனற்றமற்றும் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை குழாய் கிணறுகளை 100%மூடுவதற்கும் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றம்செய்ய தெரிவித்தல்- சான்று அனுப்பக் கோருதல் - சார்பு...

click here...

*🌐ஜூன் 1,* *வரலாற்றில் இன்று:தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 1971 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தினம் இன்று.*

ஜூன் 1,
வரலாற்றில் இன்று.

  தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 1971 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தினம் இன்று.

இது கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. 1990இல் தமிழ்நாடு ஜி. டி. நாயுடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எனப்பெயர் மாற்றப்பட்டுப் பின்னர் 1992 இல் மீண்டும்  தமிழ்நாடு  வேளாண்மைப்  பல்கலைக்கழகம் என பெயர் மாற்றப்பட்டது.
வேளாண்  கல்வி,  பயிற்சி, ஆராய்ச்சி மற்றும்  விரிவாக்கம் போன்ற பல்வேறு துறைகளிலும் மாணவர்களுக்கும் மக்களுக்கும் ஒரு வழிகாட்டியாகத் திகழ்கிறது.*

*🌐ஜூன் 1,வரலாற்றில் இன்று:யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்ட தினம்.(1981)*

ஜூன் 1,
வரலாற்றில் இன்று.

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட தினம் இன்று (1981).

தென் கிழக்காசியாவின் அறிவுக்களஞ்சியமாக போற்றப்பட்ட "யாழ் பொது நூலகம்"சிங்கள ராணுவத்தினரால் இலங்கை அமைச்சர் காமினி திச நாயக முன்னிலையில் தீக்கிரையாக்கப்பட்டது.எண்ணற்ற நூல்கள் ஓலைச்சுவடிகள் என அனைத்தும் சாம்பலாயின..இன விடுதலைப்போருக்கு இச்சம்பவம் காரணமானது.

தமிழரின் மாபெரும் அறிவுசார் சொத்து காட்டுமிராண்டிகளால் காணாமல் போனது.

*🌐ஜூன் 1,வரலாற்றில் இன்று:உலக பால் தினம்.*

ஜூன் 1, வரலாற்றில் இன்று.

உலக பால் தினம் இன்று.
   
பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத நாளை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இத்தகைய சிறப்பும், சத்தும் நிறைந்த பால், ஐநா சபையால் உலக உணவாக அங்கீகரிக்கப்பட்டது. இதை உலகுக்கு உணர்த்த ஐநா சபை ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்பட வேண்டுமென அறிவுறுத்தியது. இதன்படி 2001-ஆம் ஆண்டிலிருந்து ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.

பால் மற்றும் பால் பொருள்களின் சிறப்பு அம்சங்களை உலகுக்கு எடுத்துக்கூறும் விதமாக இத்தினத்தைக் கொண்டாட வேண்டுமென ஐநா சபை வலியுறுத்தியுள்ளது. பசும்பாலில் அனைத்துவித அமினோ அமிலங்களும் உள்ளன. 5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் 400 மி.லி பால் சாப்பிடுவது நல்லது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் உட்கொள்வது சிறந்தது. இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*🌐ஜூன் 1,வரலாற்றில் இன்று:சர்வதேச குழந்தைகள் தினம்.*

ஜூன் 1, வரலாற்றில் இன்று.

💐சர்வதேச குழந்தைகள் தினம் இன்று💐

 உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றிய விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகளில் ஜூன் 1 ஆம் தேதி சர்வதேச குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச குழந்தைகள் தினமானது ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறு தினங்களில் கொண்டாடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

*🌐ஜூன் 1,வரலாற்றில் இன்று:உலக பெற்றோர் தினம்.*

ஜூ
ன் 1,
வரலாற்றில் இன்று.

உலக பெற்றோர் தினம் இன்று.

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர்

பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர்

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில்

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா., பொதுக்கூட்டத்தில் இத்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது

இத்தினம் உலக பெற்றோர்களின் மகத்தான சேவையை பிள்ளைகள் பாராட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைவதுடன்

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது

ஞாயிறு, 31 மே, 2020

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதியப்பட்டியல் 1.6.2020 முதல் IFHRMS முறையில் சமர்பிக்க அறிவுரை- நாமக்கல் Collector



பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால்பாடத்திட்டம் ஆய்வு செய்ய குழு~அமைச்சர் பேட்டி...

*15.06.2020 முதல் தொடங்க உள்ள பொதுத்தேர்வுக்காக பள்ளி விடுதிகளை (School Hostels) 11.06.2020 முதல் திறக்க உத்தரவு!!