சனி, 13 ஜூன், 2020

*🌐ஜூன் 13, வரலாற்றில் இன்று:வி. கணபதி அய்யர் ( நவம்பர் 10, 1906- ஜூன் 13, 1987) நினைவு தினம் இன்று.*

ஜூன் 13, வரலாற்றில் இன்று.

வி. கணபதி அய்யர் ( நவம்பர் 10, 1906- ஜூன் 13, 1987) நினைவு தினம் இன்று.

 இருபதாவது நூற்றாண்டின் முதன்மை இந்தியக் கணித வல்லுனர்களில் ஒருவர். 'பேராசிரியர் வி.ஜி.அய்யர்' என்று அக்காலக் கணித உலகில் சிறப்பாக அறியப்பட்ட கணபதி அய்யர் அவருடைய எளிமையான நடை உடை பாவனையாலும் மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதை. பகுவியல் என்ற பரந்த கணித அரங்கில் உள்ளடங்கிய எல்லா கணிதப் பிரிவுகளிலும் இடவியல் என்ற இருபதாவது நூற்றாண்டின் புதிய கணிதப்பிரிவிலும் அவர் ஆழம் மிகுந்த 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உலகமறியப் போற்றப் பட்டவர். கணிதப் பாருலகுக்கு 15 இந்திய மாணவமணிகளை முனைவர் பட்டம் பெற பயிற்றுவித்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் முழுவதும் கணித உலகுக்குப் பயனுள்ள சேவை செய்யக் காரணமாகவும் முன்மாதிரியாகவும் இருந்தவர்.

கேரளத்திலுள்ள கோழிக்கோட்டில்வெங்கடாசலம்-லட்சுமி தம்பதியினருக்குப் புதல்வராகப் பிறந்தார். உள்ளூரிலேயே பள்ளியிறுதியை (எஸ்.எஸ்.எல்.சி) யை முடித்து சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1927 இல் பி.ஏ. ஆனர்ஸ் தேர்வில் கணிதப் பிரிவில் முதல் வகுப்பில் தேறினார். 1938ம் ஆண்டுசென்னைப் பல்கலைக் கழகத்தில்டி.எஸ். ஸி பட்டம் பெற்றார். முனைவர்கள் கே. ஆனந்த ராவ், ஆர். வைத்தியநாதசுவாமி முதலியோர் அவரைக் கணித வழி நடத்தினர்.

மசூலிப்பட்டணத்தில் அரசாங்கக்கல்லூரியில் விரிவுரையாளராக இரண்டாண்டுகள் இருந்தபின், 1939 இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கணிதத்துறையில் சேர்ந்தார். அங்கு 1950இல் பேராசிரியராகவும் கணிதத் துறைத் தலைவராகவும் உயர்ந்தார்.1972 இல் அவர் ஓய்வு பெறும் வரையில் அங்கிருந்தே கணித உலகுக்குப் பணியாற்றினார்.

இந்தியக் கணிதக்கழகத்தின்தலைவராக (1957 - 1959) தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 இல் அதன் பொன்விழாச் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

1960 ஜனவரியில் நடந்த இந்திய விஞ்ஞானக் கழகத்தின் வருடாந்திர மாநாட்டில், அதன் கணிதப் பிரிவின் தலைவராகப் பதவி ஏற்று அதை செவ்வனே நடத்தினார்.

கணிதமோ, வேதியியலோ, இயற்பியலோ, எந்த விஞ்ஞானத் துறையிலும் தான் திறமை பெற்ற உட்துறையில் தான் எந்த சராசரிப் பேராசிரியரும் முனைவர்பட்டப் படிப்புக்குத் தன்னிடம் வரும் மாணவர்களை ஊக்குவித்து ஆய்வு செய்விப்பது வழக்கம். ஆனால் கணபதி அய்யர் ஆய்வாசிரியர்களுக்கே ஒரு முன்னோடியாக இருந்தவர். அவரிடம் சென்ற மாணவர்கள் கணிதத்தில் எந்த உட்துறையிலும் ஆய்வு செய்யலாம். அவருடைய வழிமுறையினால் அவருடைய ஆய்வு மாணவர்கள் அகலமும் ஆழ்வும் நிறைந்த ஆய்வுத்திறன் பெற்றவர்களானார்கள்.

முனைவர் படிப்புக்குரிய மாணவன் தன் மனதிற்கிசைந்த உட்துறையில் ஓரிரண்டு நூல்களை ஒரு மாதம் ஊன்றிப்படித்தபிறகு அவரிடம் தன் ஐயங்களைத்தெளிந்து கொள்வதற்காகச்செல்கிறான். அவன் சொல்வதையெல்லாம் நிதானமாகக்காது கொடுத்துக்கேட்பார். கால் மணி அல்லது அரை மணியில் அவன் தனக்குத்தெரிந்ததையெல்லாம் சொல்லிவிடுவான். அவையெல்லாம் அவருடைய ஆய்வுத் துறைகளுக்குத் துளிக்கூட சம்பந்தமில்லாததாகவே இருந்தாலும், அவர் இதற்கு முன் பார்க்காத நூல்களிலிருந்து மாணவன் பேசிக்கொண்டிருந்தாலும், அவர் நன்றாகவே புரிந்து கொள்வார்.பிறகு சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்திருப்பார். ஓரிரண்டு கேள்விகள் தான் கேட்பார். அவன் சொல்லும் அரைகுறை பதில்களையும் கேட்டுக்கொள்வார். பிறகு அவர் ஒரு நீண்ட சொற்பொழிவே செய்வார். அவர் பார்க்காத இந்த புது உட்துறையில் இன்னும் என்னென்னவெல்லாம் ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கும், இதற்காக இன்னின்ன நூல்களைப் படிக்க வேண்டியிருக்கும், உலகில் இத்துறையில் என்னென்ன இன்னும் பிடிபடாமல் இருக்கின்றன, இத்துறைக்கும் கணிதத்திலோ கணிதத்திற்கப்பாலோ உள்ள மற்ற துறைகளுக்கும் வருங்காலத்தில் உறவுகள் எப்படி பிணைக்கப்படலாம் என்றெல்லாம் அவரே அதில் ஆய்வு செய்து கரைகண்டவரைப்போல் பேசுவார். இந்த அளவுக்கு எந்த புது விஷயத்தையும் உள்வாங்கி அதைப்பற்றி மேலும் ஆக்கமுறையில் பேசக்கூடிய கணித ஆய்வாளர்கள் உலகிலேயே மிகக்குறைவானவர்கள் என்பதே அவர் காலத்திய மற்ற பேராசிரியர்களுடைய தீர்மானம்.

பொதுவாக சிக்கலெண் பகுவியலிலும், குறிப்பாக Entire Functions என்ற பிரிவிலும் அவர் ஆய்வுகளைத் தொடங்கி, சார்புப் பகுவியல், இடவியல்,தொடர்கூட்டு வாய்ப்பு, முதலிய பிரிவுகளிலும் அவருடைய கட்டுரைகள் பெயர் பெற்றன. அவருடைய மாணவர்களுடைய ஆய்வுகள் இவைகளைத் தவிர இன்னும் நிகழ்தகவு, தன்னிச்சைமாறி, முதலிய மற்ற பிரிவுகளிலும் செய்யப்பட்டன

அவருடைய இயக்க-மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களில் சிலர்:

எம்.எஸ். ராமானுஜன். (பின்னால் ஆன் ஆர்பரில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியரானார்)எம்.ஆர். பரமேசுவரன். (பின்னால் ஈஸ்ட் லான்சிங்கில் மிச்சிகன் ஸ்டேட் பலகலைக் கழகத்தில் பேராசிரியரானார்.வி. கிருஷ்ணமூர்த்தி. (பின்னால் பிலானியில் பிட்ஸில் பேராசிரியரானார்)எஸ். சுவேதாரண்யம்.கே. எஸ். பத்மநாபன். (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்)ஜீ. சங்கரநாராயணன். (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்)எஸ். கணேசன். (அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்)

கணபதி அய்யர் சாந்தம், அடக்கம், நேர்மை இவைகளுடன் எளிமையாக வாழ்ந்து வந்தார். இருபதாம் நூற்றாண்டின் உலகக்கணித மேதைகளில் உயர் மட்டத்தில் கணிக்கப்பட்ட ஒருவரான அமெரிக்கப் பேராசிரியர் மார்ஷல் ஹெச் ஸ்டோன்என்பவர் இந்தியா வரும்போதெல்லாம் -- அவர் சென்னை சங்கீத விழாவுக்காக அடிக்கடி வருவது வழக்கம் -- அண்ணாமலைநகர் சென்று கணபதி அய்யரைப் பார்த்துப் பேசாமல் போகமாட்டார். கணபதி அய்யரை ஒரு மகான் (saint) என்றே அவர் குறிப்பிடுவார். கணபதி அய்யர் தன் ஆய்வுகளையும் படிப்புகளையும் விடியற்காலை நேரத்தில் தான் செய்வார். அதனால் இரவு எட்டு மணிக்கே படுக்கைக்குச் சென்று விடுவார்.

கணபதி அய்யர் அரட்டை அடித்து யாரும் பார்த்ததில்லை. அவர் சாதாரணமாக சில பேச்சுகள் பேசினாலும் அது ஆழம் பொதிந்ததாக இருக்கும். முனைவர் ஆர். வைத்தியநாதசுவாமி அவருடைய குரு. முனைவர் எம். வெங்கடராமன் கணபதி அய்யருடன் கூட வேலைபார்த்த ஆசிரிய நண்பர். இவர்கள் இருவரும் கணிதப் பேராசிரியர்கள் மட்டுமல்லாமல், அரவிந்தர் வழியில் வந்த நூல்களையெல்லாம் நன்கு அறிந்து அரவிந்தருடைய நெறிமுறைப்படி வாழ்பவர்கள். இவர்கள் இருவருடன் கணபதி அய்யர் அடிக்கடி பேசுவார். இம்மூவரது உரையாடலில் கணிதம், சரித்திரம், வேதாந்தம், பண்பாடு என பலதரப்பட்ட விசயங்கள் கலந்திருக்கும்.

மனதிலேயே எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகள்

கணபதி அய்யர் ஆய்வுக்கட்டுரை எழுதும் முறையே விந்தையானது. பலமுறை எழுதி, அடித்து, திருத்தி, மாற்றி, எழுதுவதெல்லாம் அவரிடம் கிடையாது. எழுதவும் மாட்டார். எல்லாம் தட்டச்சு இயந்திரத்தின் முன் உட்கார்ந்து தட்டச்சு செய்வார். கட்டுரைக்கு முன்னுரை, கணிதக்குறியீடுகள், உருவகங்கள், நிறுவலுக்கு வேண்டிய அடிப்படை வரையறைகள், உதவித்தேற்றங்கள், எல்லாம் அவையவை இருக்கவேண்டிய இடத்திற்குத்தகுந்தபடி முன்னாலேயே அவர் மனதில் உருவாகியிருக்கும். ஒரே தடவை தான் தட்டச்சு செய்வார். சிறிய கட்டுரை யானாலும், பெரிய கட்டுரையானாலும், ஒரு முறை தட்டச்சுசெய்து முடியும்போது அது அப்படியே மாற்றமில்லாமல் அச்சடிக்கத் தயாராகிவிடும்.

குறிப்புகள்

↑ சென்னை கிருத்துவக் கல்லூரிப்பேராசிரியர் டபிள்யூ. எஃப். கிப்பிள் ஒரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோது, இரவு எட்டரை மணியாகியிருந்தது. கணபதி அய்யரைத் தூக்கத்திலிருந்து எழுப்பும்படியாகிவிட்டது. 'என்ன இவ்வளவு சீக்கிரம் தூங்கச் சென்றுவிட்டீர்களே' என்று கிப்பிள் கேட்டதற்கு அவருடைய பதில்: 'என்னைப் பொருத்தவரையில் அதுவே நள்ளிரவேயாகும்'!

வெள்ளி, 12 ஜூன், 2020

தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் மு.பழனிசாமி அவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனர் பணியிடத்தை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பு~தமிழக அரசு ஆணை…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் தருபவர் முழு விபரம் அவசியம் _தமிழக அரசு உத்தரவு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில் தருபவர் முழு விபரம் அவசியம்
_தமிழக அரசு உத்தரவு

*🦚BREAKING NEWS🦚* தமிழக சுகாதாரத்துறை செயலர் மாற்றம் தமிழக சுகாதாரத் துறை செயலாளராக திரு ஜெ. ராதாகிருஷ்ணன் நியமனம். தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் வணிகவரித் துறைக்கு மாற்றம்.

*🦚BREAKING NEWS🦚*

*தமிழக சுகாதாரத்துறை செயலர் மாற்றம்*

*தமிழக சுகாதாரத் துறை செயலாளராக திரு ஜெ. ராதாகிருஷ்ணன் நியமனம்*

*தமிழக சுகாதாரத் துறை  செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் அவர்கள் வணிகவரித் துறைக்கு மாற்றம்*

*🌐ஜூன் 12, வரலாற்றில் இன்று:கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்ட தினம் இன்று(2006).*

ஜூன் 12, வரலாற்றில் இன்று.

கூகுள் எர்த் மற்றும் லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்ட தினம் இன்று(2006).

*🌐ஜூன் 12, வரலாற்றில் இன்று:நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தினம் இன்று (1964)*

ஜூன் 12, வரலாற்றில் இன்று.

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தினம் இன்று (1964).

நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.

தென்னாப்பிரிக்க நாட்டில் கறுப்பர்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அங்கு வெள்ளையர்கள் சிறுபான்மையினர். ஆனாலும் ஆட்சி அதிகாரம் வெள்ளையர்களிடமே இருந்தது. 1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ‘கறுப்பின மக்கள் அடக்கப்படுகின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவர்கள் பிரயாணம் செய்வதற்கு அவர்களுடைய நாட்டினுள்ளேயே அனுமதி பெற வேண்டியுள்ளது. நிலவுடமையாளர்களாக கறுப்பின மக்கள் இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது என என அறை கூவி, அறப்போர் வழியில் போராட்டத்தை தொடங்கிய இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லா போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர்.

இதனால் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதான நெல்சன் மண்டேலா மீது தென்னாப்பிரிக்க அரசை கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் மாதம் இதே நாளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது.

மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் தனது 95ஆவது அகவையில் காலமானார்.

*🌐ஜூன் 12, வரலாற்றில் இன்று:"வாண்டுமாமா" என்று அழைக்கப்படும் பிரபல குழந்தைகள்எழுத்தாளர் வி.கிருஷ்ணமூர்த்தி நினைவு தினம் இன்று( 2014 ).

ஜூன் 12, வரலாற்றில் இன்று.

"வாண்டுமாமா" என்று அழைக்கப்படும்
பிரபல குழந்தைகள் எழுத்தாளர்
வி.கிருஷ்ணமூர்த்தி
நினைவு தினம் இன்று
( 2014 ).

*🌐ஜூன்-12, வரலாற்றில் இன்று:சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று.*

ஜூன்-12, வரலாற்றில் இன்று.

 சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் இன்று.

உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

📘பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை Online வகுப்புகள் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!-நாள்: 10.06.2020



📘பள்ளிக் கல்வி – அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு  சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச நிகழ்நிலை Online வகுப்புகள் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!-
நாள்: 10.06.2020

*🌸இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது:* *மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு* *50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!*

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது: மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!
**************************

இடஒதுக்கீடு
உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு
விளக்கமளித்துள்ளது.

 பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கோரும் மனுவை விசாரிக்க மாட்டோம் என்றும்   உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும்,
இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க மாட்டோம் என கருத்து தெரிவித்துள்ளது.

 இதுமட்டுமல்லாது, மருத்துவப் படிப்பில்
50% இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும்  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.