புதன், 17 ஜூன், 2020
செவ்வாய், 16 ஜூன், 2020
*🌐ஜூன் 16, வரலாற்றில் இன்று:திசைகாட்டியை கண்டுபிடித்த எல்மர் ஆம்ரோஸ் நினைவு தினம் இன்று.*
ஜூன் 16, வரலாற்றில் இன்று.
திசைகாட்டியை கண்டுபிடித்த எல்மர் ஆம்ரோஸ் நினைவு தினம் இன்று.
1860ஆம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தவர். தூய்மையான காஸ்டிக் சோடாவை பிரிக்கும் தொழில்நுட்பத்தையும், பழைய உலோகக் கலவையிலிருந்து டின் மெட்டலை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தையும், கைரோஸ்கோபிக் திசைமானி காம்பஸ் மற்றும் நிலைப்படுத்தியை கண்டுபிடித்தார். இது உலகப்போரின் போது அமெரிக்காவின் கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கி குண்டுகள் மற்றும் விண்கலங்களில் திசை காண்பதற்கு பெரும் உதவியாக இருந்தது.

*🌐ஜூன் 16, வரலாற்றில் இன்று:தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று.*
ஜூன் 16, வரலாற்றில் இன்று.
தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் நினைவு தினம் இன்று.
சித்தரஞ்சன் தாஸ் (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர். தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். இங்கிலாந்தில் சட்டக் கல்வி கல்வி கற்றவர், 1909இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் அரவிந்தருக்கு ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அரசியல் குரு.
அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.
1925-ஆம் ஆண்டு ஜூன் 16 அன்று டார்ஜிலிங்கில் தனது 55-ஆவது வயதில் இறந்தார். அவரது உடல் கல்கத்தாவுக்குக் கொண்டுவரப்பட்டு மக்களின் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இரண்டு மைல் நீளத்திற்கு மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர். தாகூர் சித்தரஞ்சன் தாஸைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அவரது தியாகமும் ஆக்கசக்தியும் நம்மை வழிநடத்தும் என்று கூறுகிறார். அவரது தாராள குணம் நினைத்துப் போற்றத்தக்கது. அவரது இல்லம் "சித்தரஞ்சன் சேவாசதன்" என்ற பெயரில் மருத்துவமனையாகச் செயல்படுகிறது.
மேற்கு வங்கத்தில் முக்கிய புள்ளியாக இருந்த இவர் 1919-1922 காலப் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து பிரித்தானியரின் ஆடைகளைப் புறக்கணிக்க முன்னின்று உழைத்தார். மோதிலால் நேருவுடன் இணைந்து சுயாட்சிக் கட்சியை ஆரம்பித்தார்.
ஃபோர்வார்ட் (Forward) என்ற செய்திப் பத்திரிகையை பிரித்தானிய ஆட்சியாளருக்கு எதிராக ஆரம்பித்து நடத்தினார். இப்பத்திரிகை பின்னர் விடுதலை (liberty) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இவர் பல கவிதைகளையும் இயற்றியுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பு சாகர் சங்கீத் என்ற பெயரில் புகழ் பெற்றவை.

*🌐ஜூன் 16, வரலாற்றில் இன்று:கலைத்தந்தை என்று போற்றப்பட்டவரும், கல்வியாளருமான கருமுத்து தியாகராஜன் செட்டியார் பிறந்த தினம் இன்று(1893).*
ஜூன் 16, வரலாற்றில் இன்று.
கலைத்தந்தை என்று போற்றப்பட்டவரும், கல்வியாளருமான கருமுத்து தியாகராஜன் செட்டியார் பிறந்த தினம் இன்று(1893).
சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். குடும்பம் இலங்கையில் துணி வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. கொழும்பு புனித தாமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையில் தமிழர்களுக்கு அடையாள சூடு போடும் வழக்கத்தை தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தவர். இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக ஒரு பத்திரிகை நடத்தினார்.
இந்தியா திரும்பியவர், காங்கிரஸில் 1917-ல் சேர்ந்து தொழிலாளர் தலைவராக வும், மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்தார். மதுரையில் 1925-ல் மீனாட்சி மில் நிறுவனத்தைத் தொடங்கி, நூற்பாலை, நெசவு ஆலையையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.
மீனாட்சி ஆலையின் ஆரம்பகால இயக்குநர்களாக தேசியத் தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி, நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வந்தபோது இவரது விருந்தினர்களாகத் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது.
இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட பல நூல்கள் வெளிவர அதிகம் பொருளுதவி செய்துள்ளார். சென்னை தமிழிசை சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம், காரைக்குடி கம்பன் கழகம், உ.வே.சாமிநாத ஐயர் நிலையம் போன்ற ஏராளமான அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.
நலிந்த ஆலைகளை ஏற்று தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெற்றிகரமாக நடத்தியவர். இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தொழிலாளர்கள், இதர ஆலை முதலாளிகள் மத்தியில் பெருமதிப்பும் மரியாதையும் பெற்றவர். ஆலைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.
ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கி கல்விப் பணியாற்றினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழை பல ஆண்டுகள் நடத்தினார். இவர் கட்டிடக் கலைஞரும்கூட. இசை, ஓவியம், குதிரைச் சவாரியிலும் ஆர்வம் உள்ளவர். தினமும் திருவாசகம் ஓதும் வழக்கம் கொண்டவர்.
மத்திய அரசின் கட்டாய இந்திக் கல்வி திட்டத்தை எதிர்த்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகினார். இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய சோமசுந்தர பாரதியார், பெரியாருக்கு உறுதுணையாக இருந்தார்.
ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றபோதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசி, எழுதுவார். ராமநாதபுரம் சேதுபதி, பண்டித மணி, பேராசிரியர் ரத்தின சபாபதி ஆகியோரின் நூல் நிலையங்களை விலைக்கு வாங்கி மேம்படுத்தினார்.
தன் மனைவியை தமிழில் அரிச்சுவடியில் இருந்து கற்க வைத்து, ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது, சொற்பொழிவுகள் ஆற்றும் அளவுக்கு புலமைபெறச் செய்தார்.
14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81 வயதில் (1974) மறைந்தார்.

*🌐ஜூன் 16, வரலாற்றில் இன்று:முதல் பெண்மணி விண்ணில் பறந்த தினம் இன்று(1963):விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் valentina tereshkova செயற்கைக்கோளின் விமானியாக பொறுப்பேற்ற தினம் இன்று.*
ஜூன் 16, வரலாற்றில் இன்று.
முதல் பெண்மணி விண்ணில் பறந்த தினம் இன்று(1963).
விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் valentina tereshkova செயற்கைக்கோளின் விமானியாக பொறுப்பேற்ற தினம் இன்று.
VOSTOK 6 என்ற செயற்கைகோளில் பயணிக்க சுமார் 400க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 பேரில் ஒரே பெண் valentina tereshkova. சோவியத் ஒன்றியத்தில் ஜவுளி தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றிக்கொண்டே விண்வெளி சாகச வீரராகவும் திகழ்ந்தார்.
1969ஆம் ஆண்டு பெண் விண்வெளி வீராங்கனை அமைப்பை ரஷ்யா கலைத்ததால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பதவி வகித்தார். சோவியத் யூனியன் சிதைவுக்கு பிறகும் அரசியலில் சிறப்பாக செயல்பட்டார்.

*🌐ஜூன் 16,* *வரலாற்றில் இன்று:இந்திய வேதியியல் துறையின் முன்னோடி* *ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய் நினைவு தினம் இன்று*
ஜூன் 16,
வரலாற்றில் இன்று.
.
இந்திய வேதியியல் துறையின் முன்னோடி
ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திர ராய் நினைவு தினம் இன்று.
விடுதலைப் போராட்டக் காலம் அது. அப்போது, பிளேக் நோயால் கொத்துக் கொத்தாக மக்கள் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகளை ஐரோப்பாவிலிருந்து வாங்க வேண்டியிருந்தது. ‘நமது நாட்டு மக்களின் நோயை சரிப்படுத்த வெளிநாடுகளிலிருந்து பெரும் செலவில் ஏன் மருந்து வாங்க வேண்டும்? மருந்து உற்பத்தியில் நாமே ஏன் ஈடுபடக் கூடாது?’ என்று கேட்டார் நமது நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி.
இந்தக் கேள்வியுடன் அவர் நிற்கவில்லை. தனது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், நண்பர்களின் உதவியுடன் 1901இல் கொல்கத்தாவில் ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மாசூடிகல்ஸ்’ என்ற நிறுவனத்தை ரூ. 700 முதலீட்டில் துவங்கிவிட்டார். இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமான அந்நிறுவனம் இன்று ஆல்போல வளர்ந்து, ரூ. 65 கோடிக்கு மேல் ஆண்டு விற்றுமுதலாகக் கொண்ட பிசிபிஎல் என்ற பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர், ‘இந்திய நவீன வேதியியலின் தந்தை’ என்று போற்றப்படும் ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய்.
வேதியியல் விஞ்ஞானி, கல்வியாளர், மருந்து தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி, சமூக சேவகர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட ராயின் வாழ்க்கையே தியாக மயமானது.
1861, ஆகஸ்டு 2-இல், பிரிக்கப்படாத பாரதத்தில் (வங்கதேசம்) குல்னா மாவட்டம், ராருலி கத்தபாரா என்ற கிராமத்தில், நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் ராய்.
தொழில் நிமித்தமாக அவரது குடும்பம் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தபோது ராய்க்கு வயது 9. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும்போது சீதபேதியால் பாதிக்கப்பட்ட ராயின் படிப்பு இடையில் நின்றுபோனது. ஆனால் வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஆங்கில இலக்கியம், அறிவியல் நூல்களை ஆர்வத்துடன் படித்தார் ராய்.
அடுத்த ஆண்டு பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த ராய், பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நிறுவிய மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட்டில் 1879-இல் பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். ஆனால் அறிவியல் மீது தீரா தாகம் கொண்ட அவரால் கலைப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
தனது ஆர்வத்தை ஈடுகட்ட, கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியின் அறிவியல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கினார் ராய். அங்கு அலெக்ஸôண்டர் பெட்லர் என்ற பேராசிரியரின் வேதியியல் வகுப்புகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதன்காரணமாக வேதியியல் மீது ராய்க்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.
அதன் பின்விளைவாக, தனது பி.ஏ. படிப்பைக் கைவிட்டு, பிரிட்டனிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. படிக்க கப்பலேறினார் ராய். 1887-இல் அங்கு வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர் வெளியிட்ட ‘தாமிரம், மெக்னீசியம் தனிமக் குழுமத்தின் சல்பேட் கலப்பினம்’ என்ற ஆய்வறிக்கை (Conjugated Sulphates of the Copper-magnesium Group: A Study of Isomorphous Mixtures and Molecular Combinations) அவருக்கு புகழை அளித்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் சபை துணைத் தலைவராக 1888-இல் தேர்வானார் ராய்.
1889-இல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார் ராய். அவருக்கு துறை சார்ந்த அனுபவமும் உயர் கல்வித் தகுதியும் இருந்தபோதும், ஆங்கிலேயராக இல்லாத காரணத்தால் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டவில்லை. அந்த பாரபட்சத்தை எதிர்த்துப் பாராடியும் பலன் கிடைக்கவில்லை. இதுவே பின்னாளில் இந்திய வேதியியல் பள்ளி (1924) என்ற ஆராய்ச்சி மையத்தைத் துவங்க அவருக்கு தூண்டுதலாக அமைந்தது.
வேதியியலில் புதிய சேர்மங்களை உருவாக்குவது பிரதானமானதாகும். இதில் ராய்க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. 1896-இல் அவர் வெளியிட்ட பாதரச நைட்ரைடு (Mercurous Nitrite) சேர்மம் தொடர்பான ஆய்வறிக்கை அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.
1916-இல் மாநிலக் கல்லூரியிலிருந்து வெளியேறி, கொல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் சேர்ந்த ராய், அங்கு தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் சல்பேட் சேர்மத்தை உருவாக்குவதிலும், அவற்றை மருந்து மூலக்கூறாகப் பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றார். இது சரவாங்கி எனப்படும் முடக்குவாதத்துக்கு சிறந்த மருந்தாகும் என்றும் கண்டறிந்தார்.
1921-இல் பணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றாலும், 1936 வரை தொடர்ந்து மதிப்புறு பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்த 15 ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் அனைத்தையும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆராய்ச்சிக்கே வழங்கிவந்தார்.
வங்க மொழியில் நூற்றுக் கணக்கான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ள ராய், பிரம்ம சமாஜ அமைப்பிலும் மிகுந்த அக்கறை காட்டினார். 1923-இல் வடக்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தின்போது நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து அந்தக் காலத்திலேயே ரூ. 2.5 லட்சம் நிதி திரட்டி மக்களுக்கு உதவினார்.
இந்தியாவின் பண்டைய ரசாயன விஞ்ஞானியான ‘ரச ரத்னாகரா’ நூலை எழுதிய நாகார்ஜுனா பெயரில் 1922-இல் ஒரு விருதை உருவாக்கிய ராய், அதற்கு பெரும் தொகையை முதலீடாக்கி, வேதியியல் துறையில் சாதனை படைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கச் செய்தார்.
தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு குடும்ப வாழ்க்கை சுமையாகக் கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாக வாழ்ந்த ராய், 1944, ஜூன் 16-இல் மறைந்தார்.
தனது சுயசரிதையை இரு பாகங்களாக, ‘வங்க வேதியியலாளரின் வாழ்க்கையும் அனுபவங்களும்’ என்ற தலைப்பில் (1932, 1935) வெளியிட்டார் ராய்.
சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ராய், பண்டைய நூல்களில் இடம்பெற்ற வேதியியல் கருத்துகளை இளம் தலைமுறைக்கு வெளிப்படுத்த, ‘இந்து ரசாயன சாஸ்திர சரித்திரம்’ என்ற நூலை இரண்டு பாகங்களாக (1906, 1909) எழுதி வெளியிட்டார்.
விடுதலைப் போராட்டத்திலும், காதி இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய ராய், பொருளாதாரத் தன்னிறைவே உண்மையான சுதந்திரத்தை அளிக்கும் என்றார். அவரது சுதேசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அடிப்படையே அதுதான்.
இந்தியாவில் வேதியியல் துறையின் வளர்ச்சிக்கு ராயின் பங்களிப்பு முதன்மையானது. அவரது வேதியியல் அறிவு தேச எல்லை கடந்தது. ‘தலைசிறந்த வேதியியல் மேதை’ என்று லண்டனிலுள்ள ‘ராயல் சொஸைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி’யால் அறிவிக்கப்பட்ட, ஐரோப்பாவுக்கு வெளியே வாழ்ந்த முதல் விஞ்ஞானி பிரஃபுல்ல சந்திர ராய் தான்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)