திங்கள், 22 ஜூன், 2020

*🌐ஜூன் 22,* *வரலாற்றில் இன்று:நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சியை தொடங்கிய தினம் இன்று(1939).*

ஜூன் 22,
வரலாற்றில் இன்று.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சியை தொடங்கிய தினம் இன்று(1939).

*🌐ஜூன் 22, வரலாற்றில் இன்று:இத்தாலி புரட்சி எழுத்தாளர் மாஜினி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 22, வரலாற்றில் இன்று.

இத்தாலி புரட்சி எழுத்தாளர் மாஜினி பிறந்த தினம் இன்று.

19ம் நூற்றாண்டின் முற்பகுதி. இத்தாலி நாடு தமது இலக்கியப் பணியால் மட்டுமே விடுதலைப் பெற்றுவிட முடியாது என்பதை அனுவப்பூர்வமாக உணர்ந்த எழுத்தாளர் மாஜினி நேரடி புரட்சி இயக்கத்தில் ஐக்கியமாக விரும்பினார். முதலில் கார்போனோரி இயக்கத்தில் மாஜினி சேர்ந்து தீவிரமாக செயல்பட்டார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த இயக்கம் புரட்சிகரமாக இல்லாத்தால் ‘இத்தாலிய இளைஞர் சங்கம்’ என்ற புதிய புரட்சிகர அமைப்பை மாஜினி உருவாக்கினார்.

இந்த இயக்கத் தலைவராக இருந்து அவர் மேற்கொணட புரட்சிகர நடவடிக்கைகளைக் கண்டி இத்தாலி அரசாங்கம் மிரண்டு போனது. மாஜினியைக் கைது செய்து ஆறு மாத காலம் சிறையில் தள்ளியது. ஆறு மாத சிறை வாசத்திற்குப் பின் மாஜினி இத்தாலியில் இருக்கக் கூடாது என்று அரசாங்கம் நிபந்தனை விதித்தது. மாஜினி மார்க்சேல்சுக்கு சென்றார்.

மாஜினி சிறையில் இருந்த ஆறு மாத காலத்தில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்க பல செயல் திட்டங்களை மனதுக்குள் வரைந்து வைத்திருந்தார். பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளும் இத்தாலியை ரோம், நேப்பிள்ஸ், மிலான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து தங்களுக்குள் பங்கு போட்டு அடக்கியாண்டு வந்தன.

உலகின் மிகப் பெரிய வல்லரசுகளான அந்த நாடுகளிடமிருந்து இத்தாலியைக் காப்பாற்றுவதென்பது சாதாரணப் பணியல்ல என்று மாஜினி புரிந்து வைத்திருந்தார். ஆகையால் இத்தாலி சென்று ஒரு கொரில்லாப் படையை உருவாக்க வேண்டும் என்று போனார். அங்கே ஒரு புதிய பத்திரிக்கையையும் தொடங்கி புரட்சிகரமான கட்டுரைகளை எழுதினார் மாஜினி. இத்தாலியின் வாலிபப் பட்டாளம் மாஜினியின் புரட்சிகர எழுத்துக்களால் ஆட்சியாளர்கள் மீது பாயத் தொடங்கின.

மாஜினி துவங்கிய புரட்சித்தீ ஆட்சியாளர்களை சினம் கொள்ளச் செய்தது. மாஜினியின் புரட்சிப்படை வீரர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். மாஜினியைப் பிடித்து தூக்கிலிட்டால் மட்டுமே தங்களது ஆட்சி நிலைக்கும் என்று மாஜினியை தேடிப் பேயாய் அலைந்தது அரசு.

மாஜினி நெப்போலியன் பிறந்த கார்சிகா தீவுக்குச் சென்று தலைமறைவாகத் திரிந்தார். அங்கு அவரது சூறாவளிப் பேச்சுக்கு இளைஞர் வசமாயினர். ஒரு படையைத் திரட்டினார். இத்தாலி விடுதலை அடையும்வரை இளைஞர்கள் கருப்புச்சட்டைதான் அணிய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அச்சமயம் சார்டீனியா தீவின் அரசனாக சார்லஸ் ஆல்பர்ட் என்பவன் ஆட்சியைப் பிடித்து ஆண்டு வந்தான். சார்லஸ் ஆல்பர்ட் ஒரு காலத்தில் மாஜினியின் நண்பனாக இருந்தவன். 1821ம் ஆண்டில் கார்ப்பனோரா கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு மாஜினியோடு சிறை வாழ்க்கை அனுபவித்தான் இந்த சார்லஸ் ஆல்பர்ட்.

இப்போது தம்முடைய விடுதலைப் போருக்கான உதவியை தன்னுடைய பழைய நண்பரும் இப்போதைய சார்டீனியா தீவு மன்னருமாகிய சார்லஸ் ஆல்பர்ட்டிடம் கேட்கலாம் என முடிவு செய்து, கேட்டார் மாஜினி. ஆனால் புரட்சியாளனாக இருந்தபோது நண்பனாக இருந்த சார்லஸ் ஆல்பர்ட் அதிகார மமதையில் இருந்தான். மாஜினி தனக்கு அனுப்பிய கடித்தில் ‘அன்புள்ள சார்லஸ்’ என்று பெயரைச் சொல்லி அழைத்ததில் தனக்கு தன்மான இழுக்கு ஏற்பட்டதாகவும் கருதினான்.

மாஜினிக்கு உதவும் எண்ணமே இல்லாமல் இருந்த சார்லஸ் மாஜினியை உடனே நாடு கடத்தும்படி தன்னுடைய ராணுவப் படையினருக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவு மாஜினிக்கு இழைக்கப்படும் துரோகம் என்று சார்லஸ் மன்னனின் படை வீர்ர்களே கொந்தளித்துக் கூறியதுடன் மன்னனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சார்லஸ் இதனால் கடுஞ்சினமுற்று மாஜினியை சிறை செய்து குற்றம் சுமத்தினான். போராட்டத்திற்கான முழுப் பொறுப்பும் மாஜினியிடையதுதான் என்றும் அதற்கு சரியான தண்டணை தூக்கு தண்டனைதான் என்று தீர்ப்பளித்தான். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டி சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட மாஜினி, தூக்கிலிடும்முன் தப்பித்துவிட்டார்

தப்பி ஓடிய மாஜினி ‘மத்திய ஐரோப்பா’ எனும் பத்திரிக்கையை துவங்கி கட்டுரைகள் எழுதினார். எங்கு பார்த்தாலும் இவரது கோஷம் கேட்டு மக்கள் சிலிர்த்தெழுந்தனர். சேவாய் நகருக்குள் மாஜினியின் படை புகுந்து ஆர்பரித்தது. அரசாங்கம் அடிபணிந்தது.

மன்னன் சார்லஸ் பதவி இழந்து மிலான் விடுதலை பெற்றதும் பிரஞ்சு அரசாங்கம் மாஜினியை திடீரென கைது செய்து அவருக்கு இரண்டாவது முறையாக மரண தண்டணை விதித்தது. மாஜினிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு போர்க்கொடி தூக்கி இத்தாலி முழுவதும் கிளர்ச்சி நடைபெற்றது. மாஜினியை மரண தண்டணையிலிருந்து காப்பாற்ற பொதுவுடைமைத் தத்துவ மேதை காரல் மார்க்ஸ் அறை கூவலிட்டார். அதனைக் கேட்டு சிலிர்த்துப்போன இளைஞர் கூட்டம் இத்தாலி நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாரானாது.

‘மாஜினியை விடுதலை செய்’ என்ற கோஷமே இத்தாலியெங்கும் விண்ணதிர்ந்தது. கத்தோலிக்க மதக் குருவான போப்பாண்டவர் மாஜினியை உடனே தூக்கிலிடுமாறு வற்புறுத்தினார். கடைசியில் மன்னர் மனம் மாறி புரட்சிகர இயக்கத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாஜினியை விடுதலை செய்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் ரூ.1000/- வீடுதோறும் சென்று வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்து விதிமுறைகள் வெளியீடு





ஞாயிறு, 21 ஜூன், 2020

ஜேக்டோ ஜியோ 2019 போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது உள்ள 17 b குறிப்பாணையை நீக்கி தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை நாள்:10.6.2020

SPD Proceeding- பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஜுன் 2020 மாத ஊதியம் வழங்குதல் சார்ந்த நெறிமுறைகள் திட்ட இயக்குநர் செயல்முறை நாள்: 18.6.2020


*🌐ஜூன் 21,* *வரலாற்றில் இன்று:உலக யோகா தினம் இன்று.*

ஜூன் 21, வரலாற்றில் இன்று.

 உலக யோகா தினம் இன்று.

இந்தியாவில் தோன்றிய இக்கலை இன்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஒன்றாக வளர்ந்துள்ளது. 

ஆனால் இங்கு பிறந்த நாம் யோகாவை பற்றி அறிந்து கொள்ளாமலே வளர்கிறோம். நம் வருங்கால சமுதாயத்திற்கு யோகாவை பற்றிய அறிவை முழுமையாக கொடுப்போம் என்று இன்றே சபதம் ஏற்ப்போம்.

*🌐ஜூன் 21,* *வரலாற்றில் இன்று:உலக இசை தினம் இன்று.*

ஜூன் 21, வரலாற்றில் இன்று.

உலக இசை தினம் இன்று.

இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.

 பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.

*🌐ஜூன் 21,* *வரலாற்றில் இன்று:உலக மனித நலன் தினம் இன்று.*

ஜூன் 21,
வரலாற்றில் இன்று.


 மனித நலன் தினம் இன்று.
(World Humanist Day)

இதனை மனிதநேயம் என்ற பொருள்படும்படியும் எடுத்துக்கொள்ளலாம்... இன்றைய உலகத்திற்கு மிக மிகத்தேவையான ஒன்று.

 சுயநலங்களே  மிஞ்சிய நிலையில் மனிதநலன் புறக்கணிக்கப்படுவதை விளக்க வேண்டியது அவசியமில்லை.

 மனித நலன், மனிதநேயம்  ஒவ்வொரு தனிமனித ரத்த அணுக்களில், நாடி நரம்புகளில் ஊற்றாக பெருக்கெடுத்து வர வேண்டும்.

 ஆட்சியாளர்களின் ஆணைகள், சட்டங்கள் மனித நலனைப்பேணுவதைச்செய்தாலும்  தனிமனிதனின் மனிதநேய ஈடுபாடும் அதன்பாற்பட்ட நிகழ்வுகளில் பங்களிப்புமே இந்த நாளை அர்த்தம் உள்ளதாக்கும்.


 விளிம்பு நிலை மனிதர்கள், ஒடுக்கப்பட்ட மனிதர்கள், ஒதுக்கப்பட்ட மனிதர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நோயாளிகள், பசிக்காகவும்,
பாலுக்காகவும் ஏங்கும் குழந்தைகள் என அடித்தட்டு மக்களுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு காரியமாற்றுவது ஒன்றே இந்த நாளை அனுசரிப்பதை அர்த்தமுள்ளதாக்கும்.

*🌐ஜூன் 21,* *வரலாற்றில் இன்று:தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாப்படுகிறது.*

ஜூன் 21,
 வரலாற்றில் இன்று.

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாப்படுகிறது.



#அப்பா...#அப்பப்பா...
 
ஒரு தந்தையாவது மிகவும் இலகுவானது.
ஆனால் , ஒரு தந்தையாக இருப்பது மிகவும் கடினமானது.

அப்பா...
ஒரு மனிதன், பின்னாளில் தனக்கு சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும், திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்தது தான். ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.

கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்கு சமமாக இருப்பார். எப்போதும் எங்களோடு கூட இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.

தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சுமைகள் அதிகமானவை . அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.ا

ஒரு நல்ல தகப்பனுக்கு தன் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் இருக்கும்  தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது. தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.

அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானது தான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.

தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்தி கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்கு கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.ا

தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாக கிடைத்துவிட்டால்
பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும்.

வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச் சிறந்த ஆசானாக ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்கு பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.

யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!

ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.

விழவும், எழவும் வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.

இருகைகள் தட்டி எழும் ஓசை போல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்த சமூகம் பெற முடியாது.

ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாக சுமக்கிறாள்.

தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்கு சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கி சுமக்கிறார்.

ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்கு கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களை , அவமானங்களைச் சந்தித்திருப்பார்கள்?

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?

எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்?

அதை கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?

எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்?

எத்தனை பாரங்களை மனசில் சுமந்திருப்பார்கள்?

முடியுதிர்ந்த மண்டையின் வெளிகளில்..

வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்...

நரம்பு தெரியும் கைகளில் ...

நரை விழுந்த மீசைகளில் ...

அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய் குடிகொண்டிருக்கிறது.

தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?

ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாக தம் வியர்வை சிந்தியிருப்பார்கள்?

மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தன்னுடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?

பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும் போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு போர்த்தி விட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள் பின்னர், பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிற போது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?

இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக் கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படி புரியவைப்பது?

படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக் கொண்டு சதா வலி சுமந்து வலி சுமந்து வாழ்க்கையை சுமந்து செல்கிற இந்த அப்பாமாரின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?

வீரம், துணிச்சல்,
விடாமுயற்சி,
நம்பிக்கை, உழைப்பு..
இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் , யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.

ஒரு இளைஞனோ ,  யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும்,
குழந்தைகளுக்கு பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளை சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.

“எதுக்கும் பயப்படாதே”

“ஒன்றுக்கும் யோசிக்காதே”

“எல்லாம் வெல்லலாம்”

“மனசை தளரவிடாதே”

“நான் இருக்கிறேன்”

இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பதிரும்ப சொல்லிக் கொள்கிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள்.

அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்கு கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.

தன் இயலாமையை தான் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளை சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்கு தமது குரலொன்றே போதுமென்பது.

அப்பாக்கள் :

➡பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

➡பிள்ளைகளின் நெம்புகோல்கள்

➡பிள்ளைகளின் அச்சாணிகள்

➡பிள்ளைகளின் சூரியன்கள்

➡பிள்ளைகளின் திசைகாட்டிகள்

➡பிள்ளைகளின் ஆசிரியர்கள்

➡பிள்ளைகளின்
நம்பிக்கைகள்

அப்பா:
தூய்மையான
அன்பு,

போலியற்ற
அக்கறை,

நேர்மையான வழிகாட்டல்,

நியாயமான
சிந்தனை,

நேசிக்கத்தக்க உபசரிப்பு,

மாறுதலில்லா நம்பிக்கை,

காயங்களற்ற
வார்த்தை, 

கம்பீரமான
அறிவுரை,

கலங்கமில்லா
சிரிப்பு,

உண்மையான
அழுகை,

என அத்தனையும் உளமகிழ்ந்து

செய்து வளர்த்தவர்.

தோழனுக்கு தோழனாய்
தோள் கொடுப்பவர் அப்பா.

அப்படியொரு அப்பாவாக இருப்பதில் ஒவ்வொரு தகுதியுள்ள  அப்பாக்களும் மகிழ்ச்சியுருவர்.
இதுவரை இல்லாவிடிலும் இனியாவது இப்படிப்பட்ட அப்பாவாக இருக்க இப்போதிருந்தே  தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பிப்பர்.

வாழ்த்துக்கள் தந்தையர்களே.
---------------------------------------

Go. (Ms) No:311 date: 20.6.2020மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரண உதவி வழங்க ரூ.133.52 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு