ஜூலை 26, வரலாற்றில் இன்று.
ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம் இன்று(1856).
*அயர்லாந்து நாடக ஆசிரியர்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்றவர் இவர் ஒருவரே.
இவர் நோபல் பரிசையை மறுத்தவர்.
ஜார்ஜ் பெர்னாட் ஷா 1856 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி அயர்லாந்தின் டப்ளின் நகரில் பிறந்தார்.பெற்றோர் ஜார்ஜ் கார் ஷ -லூசிண்டா எலிசபெத் ஷா.இவரின் தாய் பாடகி.இவரின் தந்தை அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். இவரது தந்தை குடித்து குடித்தே பணத்தை செலவழித்தார். அதனால் குடும்பம் வறுமையில் வாடியது.இவரின் தாய் இவரை அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்தனர்.இவருக்கு இவரின் அம்மா தரும் ஒரு பவுண்டு பணத்தை புத்தகம் வாங்க செலவிட்டார்.இவருக்கு பத்து வயது நிறைவதற்குள் பைபிள் முதல் ஷேக்ஸ்பியரின் நாடகம் வரை நிறைய புத்தகங்களை வாசித்து முடித்திருந்தார். சிறு வயதில் தாயிடம் இசையைக் கற்றார்.
இவர் குடும்ப வறுமை நிலமைக்கு தந்தையின் குடிப்பழக்கம்தான் காரணம் என்பதை சிறுவயதிலேயே உணர்ந்தார்.அதனால் மதுவைத் தொடுவதில்லை என்று உறுதி பூண்டார்.இவரின் தந்தை இறந்து போனபோது அவரது இறுதிச்சடங்கில்கூட கலந்து கொள்ளவில்லை குடும்ப உறுப்பினர்கள். இவரின் குடும்ப வறுமை காரணமாக பத்தாவது வயதில்தான் பள்ளிச்சென்று கல்வி கற்றார்.இவரால் நான்கு ஆண்டுகள்தான் பள்ளியில் படிக்க முடிந்தது.
இவரின் பதினைந்தாவது வயதில் வேலைப் பார்க்கத் தொடங்கினார்.இருபதாவது வயதில் இங்கிலாந்துச்சென்றார்.நிறைய எழுதத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளை ஆர்வத்துடன் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவார். ஆனால் அனுப்பபட்ட வேகத்திலேயே அது திரும்பி வந்துவிடும்.அவை திரும்பி வந்தாலும் தொடர்ந்து எழுதினார். பத்திரிகைகளில் இவரது படைப்புகள் வெளியாகத் தொடங்கின.
இவர் தன் தாயிடமிருந்து கற்றுக்கொண்ட இசையை பயன்படுத்தி இசை விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.பின்னர் நாடக விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார்.நாடக விமர்சனங்களுக்கு பின்பு தாமே நாடங்களை எழுதத் தொடங்கினார்.
விடோயர்ஸ் ஹவுசஸ் என்ற முதல் நாடகத்தை எழுதினார்.இதன் பின்னர் ,Candida, The Devil's Disciple, Arms and the Man, Saint Joan, Pygmalion, The Apple Cart, The Doctor's Dilemma, போன்ற நாடகங்கள் இவருக்கு பெரும் புகழ் சேர்த்தன. இவரது பல படைப்புகள் மேடைகளில் அரங்கேறின.
அந்த காலக்கட்டத்தில் லண்டன் நாடக மேடைகள் பொழுதுபோக்கு அரங்குகளாக இருந்தன. அதை நீதி, அரசியல், பொருளாதார விவகாரங்களை எடுத்துக்கூறும் மன்றங்களாக மாற்றி அமைத்தார் பெர்னாட்ஷா. இவரது அனைத்து படைப்புகளுமே சமூகத்தில் நிலவிவரும் சிக்கல்களைப் பிரதிபலித்தன.இவர் புரட்சிகரமான கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் எழுதினார்.
இவரை இங்கிலாந்தின் பிளேட்டோ என்று வருணித்தது இலக்கிய சமூகம்.இவர் தன் எழுத்தில் கேலி, நையாண்டி, நகைச்சுவை ஆகியவற்றை கலந்து கொடுத்தார். எழுத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர் நகைச்சுவையையும், நையாண்டியையும் பயன்படுத்துவார். பெரிய சபைகளில்கூட தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் இவரிடம் இருந்தது.
ஷேக்ஸ்பியருக்கு அடுத்து ஆங்கில இலக்கிய உலகம் சந்தித்திருக்கும் மிகச் சிறந்த நாடக ஆசிரியர் பெர்னாட்ஷா.இவர் அறுபத்து மூன்று நாடகங்களை எழுதினார்.இவர் ஒரு நாவலாசிரியர், விமர்சகர், கட்டுரையாசிரியர் மற்றும் தனியார் கடிதவியலாளர்.இவர் 2,50,000 கடிதங்களை எழுதியுள்ளார்.
சிட்னி வெப் மற்றும் பீட்ரைஸ் வெப் மற்றும் க்ரஹாம் வால்லஸ் ஆகிய ஃபேபியன் சொசைட்டி உறுப்பினர்களுடன் இணைந்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் கல்வி நிறுவனத்தை 1895 ஆம் ஆண்டில் பெர்னாட் ஷா நிறுவினார்.
1925ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெர்னாட் ஷாவிற்கு வழங்கப்படுவதாக அறிவித்தது நோபல் குழு.இவருக்கு வந்த நோபல் பரிசை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்தார்.பரிசுத் தொகை இவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார்.
பெர்னாட் ஷா நோபல் பரிசை மட்டும் வெறுக்கவில்லை. கௌரவ பட்டம், பதக்கம், பாராட்டு விழா, புகழுரை போன்றவற்றையும் அறவே வெறுத்தார்.தனது கடைசி நிமிடம் வரை படிப்பதையும், எழுதுவதையும் கைவிடவில்லை..நல்ல நகைச்சுவை உணர்வும், சைவ உணவே விரும்பி உண்டது இவருக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுத்தன. புகைப்பிடிக்கும் பழக்கமோ, மதுப்பழக்கமோ அறவே இல்லை அதனால் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்.
இவர் 1950-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி தமது 94-ஆவது அகவையில் காலமானார்.
பெர்னாட் ஷாவின் பொன்மொழிகள்:
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.
சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகின்றனர்.
தன்னைத்தானே சீர்த்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி.
ஒன்றுமே செய்யாமல் வெட்டியாய் கழிக்கும் ஒரு வாழ்க்கையை விட பிழைகள் செய்து வாழும் வாழ்க்கை பயன்மிக்கது, பெருமைமிக்கது.