வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தினத்தந்தி _ தலையங்கம்‘நீட்’ தேர்வுக்கு என்ன அவசரம் வந்தது?ஆகஸ்ட் 28, 2020

தினத்தந்தி _ தலையங்கம்

‘நீட்’ தேர்வுக்கு என்ன அவசரம் வந்தது?

ஆகஸ்ட் 28, 2020

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்று மத்திய அரசாங்கமும், மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், திருமண மண்டபங்களை திறக்கவோ, சினிமா தியேட்டர்களை திறக்கவோ, பெரிய வழிபாட்டு தலங்களை திறக்கவோ, ஏன் பள்ளிக்கூடங்களை - கல்லூரிகளைத் திறக்கவோ இன்னும் அனுமதிக்கவில்லை.

ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, ‘நீட்’ தேர்வையும், ஜே.இ.இ. என்று கூறப்படும் இணை நுழைவுத் தேர்வையும் ரத்துசெய்யவோ, தள்ளிவைக்கவோ மத்திய அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை. எவ்வளவோ கோரிக்கைகள் விடப்பட்டும் பலனில்லை. இந்தநிலையில், ஜே.இ.இ. தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், ‘நீட்’ தேர்வு 13-ந்தேதியும் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துவிட்டது. ஜே.இ.இ. தேர்வை இந்தியா முழுவதும் 9 லட்சத்து 53 ஆயிரத்து 473 பேர், 660 மையங்களில் எழுதுவார்கள் என்றும், தமிழ்நாட்டில் 53 ஆயிரத்து 765 பேர், 34 மையங்களில் எழுதுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், ‘நீட்’ தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர், இந்தியா முழுவதிலும் உள்ள 3,842 மையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர், 238 மையங்களிலும் எழுதுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. இப்போது ஹால்டிக்கெட் வழங்கும் பணியையும் தொடங்கிவிட்டார்கள். இந்தத் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று மாணவர்களும், அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் வலியுறுத்திவருகின்றன. இந்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தேர்வுகளை உடனடியாக ஒத்திவைக்கவேண்டும் என்று மத்திய கல்வி மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று முன்தினம் இணையதளம் மூலமாக கூட்டிய கூட்டம் ஒன்றில், மம்தா பானர்ஜி உள்பட கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 மாநில முதல்-மந்திரிகளின் கருத்தும் ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்பதாகவே இருந்தது. மேலும், அனைவரும் ஒன்றாக இணைந்து, ‘நீட்’ தேர்வுக்கு அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் இன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ‘நீட்’ தேர்வு நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    

இதுமட்டுமல்லாமல், ‘நீட்’ தேர்வை 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர், இந்தியா முழுவதிலும் உள்ள 3,842 மையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர், 238 மையங்களிலும் எழுதுவார்கள் என்றும் அறிவித்துள்ளது. இப்போது ஹால்டிக்கெட் வழங்கும் பணியையும் தொடங்கிவிட்டார்கள். இந்தத் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று மாணவர்களும், அரசியல் கட்சிகளும், மாநில அரசுகளும் வலியுறுத்திவருகின்றன. இந்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன், ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தேர்வுகளை உடனடியாக ஒத்திவைக்கவேண்டும் என்று மத்திய கல்வி மந்திரிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், “நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும் என்பது தி.மு.க.வின் கொள்கை. இந்த கொரோனா பேரிடர் காலத்தில் அதுவும் அனைவரும் மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் இந்தக்கட்டத்தில், மாணவ - மாணவியரைத் தேர்வுகள் மூலம் துன்புறுத்துவதை ஒத்திவைப்பதாவது; ‘நீட்’ ரத்துக்கான தொடக்கமாக அமையட்டும்” என்று கூறியுள்ளார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், “இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை ரத்துசெய்யும் வகையில் மத்திய அரசாங்கம் அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆக, ஒட்டுமொத்த இந்தியாவின் குரல் ‘நீட்’ தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்பதுதான். மத்திய அரசாங்கம் உடனடியாக இதற்கு செவிசாய்த்து, ஒன்று இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும். அல்லது கொரோனா பாதிப்பு குறையும்வரை தள்ளிவைக்கவேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. பல மாநிலங்களில் போக்குவரத்து வசதியும் இல்லை. இப்போது ஐ.ஐ.டி.யையோ அல்லது மருத்துவ கல்லூரிகளையோ நிச்சயமாக உடனடியாக திறக்கமுடியாது. அப்படியிருக்க, ‘நீட்’ தேர்வை நடத்த மட்டும் என்ன அவசரம் வந்தது? என்பதுதான் மாணவர்களின் கேள்வி.

📘✍️EMIS - புதிய மாணவர்களை ( முதல் வகுப்பு ) பதிவு செய்வதற்கான புதிய படிவம்...

📘✍️EMIS - புதிய மாணவர்களை ( முதல் வகுப்பு ) பதிவு செய்வதற்கான புதிய படிவம்...

EMIS - புதிய மாணவர்களை ( முதல் வகுப்பு ) பதிவு செய்வதற்கான புதிய படிவம்...

தொடக்க / நடுநிலை / தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட முதல் வகுப்பு மற்றும் LKG மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID பெற வேண்டும்.

பிற வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு EMIS நம்பர் ஏற்கனவே  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு EMIS ல் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

அவர்கள்  கடைசியாக படித்த பள்ளியில் இருந்து EMIS நம்பர் ஒதுக்கீடு பெற்று உள்ளதால், அந்த நம்பரை வாங்கிக் கொள்ளலாம்.

தற்போது முதல் வகுப்பு மாணவர்களை EMIS WEB PORTAL ல் பதிவேற்றம் செய்து Unique ID பெற கீழ்கண்ட படிவத்தை பதவிறக்கம் ( Download ) செய்து ஒவ்வொரு மாணவர்களுக்கும் பூர்த்தி செய்து வைத்து கொண்டு EMIS WEB PORTAL ல் சுலபமாக பதிவேற்றம் செய்யலாம்.

படிவத்தை பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.

click here.

பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் ~கலெக்டர் தகவல்…

அரசு பள்ளிக்கு வரும் அனைவருக்கும் சேர்க்கை ~தலைமை ஆசிரியர்களுக்கு சிஇஓ அறிவுரை...

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

*📺2 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக ஒளிபரப்பப்படும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் கல்வி சார்பான நிகழ்ச்சிகளின் விபரங்கள்:*

*📺2 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக ஒளிபரப்பப்படும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின்  கல்வி சார்பான  நிகழ்ச்சிகளின் விபரங்கள்:*

click here

வகுப்பு வாரியாக ஒளிபரப்பப்படும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் கல்வி சார்பான நிகழ்ச்சிகளின் விபரங்கள்:

வகுப்பு வாரியாக ஒளிபரப்பப்படும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின்  கல்வி சார்பான  நிகழ்ச்சிகளின் விபரங்கள்:

Click here

வாக்காளர் அடையாள அட்டையில் தவறுகள் இருப்பின் எவ்வாறு திருத்தம் மேற்கொள்ளலாம் என்பது குறித்த வீடியோ.

*வாக்காளர் அடையாள அட்டை*

🧡பெயர் திருத்தம்
🧡வயது திருத்தம்
🧡புகைப்படம் திருத்தம்
🧡முகவரி திருத்தம்
🧡பிறந்த தேதி திருத்தம்
🧡உறவுமுறை திருத்தம்

உங்கள் வீட்டில் இருந்தே செய்யலாம்



புதன், 26 ஆகஸ்ட், 2020

*📘 தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை (டி)எண்.125 நாள்:26.08.2020 வெளியீடு.*

*📘 தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை (டி)எண்.125 நாள்:26.08.2020 வெளியீடு.*

தினத்தந்தி- தலையங்கம்:தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை! தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இங்கே கல்வி வளர்ச்சி அதிகம். படித்து முடித்த இளைஞர்கள் வேலையில்லை என்றால் சோர்ந்து விடுகிறார்கள்.

தினத்தந்தி- தலையங்கம்

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை!

  தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இங்கே கல்வி வளர்ச்சி அதிகம். படித்து முடித்த இளைஞர்கள் வேலையில்லை என்றால் சோர்ந்து விடுகிறார்கள்.

ஆகஸ்ட் 26, 2020.

வேலையில்லாத, வருமானமில்லாத வாழ்க்கை என்பது, கப்பல் இல்லாத கடல் யாத்திரை போன்றது. பூக்கள், பழங்கள் இல்லாத மரத்தை போன்றது என்பார்கள். அந்தவகையில், மத்திய அரசு என்றாலும் சரி, தமிழக அரசு என்றாலும் சரி, வேலைவாய்ப்புகளை பெருக்க மிகத் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இங்கே கல்வி வளர்ச்சி அதிகம். படித்து முடித்த இளைஞர்கள் வேலையில்லை என்றால் சோர்ந்து விடுகிறார்கள். சமீப காலங்களாக மத்திய அரசாங்கப் பணிகளில், அது ரெயில்வே பணி என்றாலும் சரி, தபால் அலுவலகப்பணி என்றாலும் சரி மற்றும் எந்த மத்திய அரசு அலுவலகங்கள் என்றாலும் சரி, வங்கிகள் என்றாலும் சரி, ஏராளமானவர்கள் தமிழ் தெரியாதவர்களாகவும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

பல மாநிலங்களில் இவ்வாறு தங்கள் மாநில மொழி தெரியாமல், பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் வந்து பணியாற்றுவதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், இனி அந்த மாநில அரசுப் பணிகள், அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துவிட்டார். இதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக கூறியிருக்கிறார். “மத்திய பிரதேசத்தின் வளங்கள், அந்த மாநிலங்களின் குழந்தைகளுக்குத்தான். இந்த மாநில வளர்ச்சியில் அவர்களின் திறமையை பயன்படுத்தப்போகிறோம். இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், அரசுப் பணிகளில் சேர்ந்து மாநிலத்தின் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதுதான் என் கனவு” என்று கூறியிருக்கிறார். முன்னாள் முதல்-மந்திரியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல்நாத்தும் இதற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

மத்திய பிரதேசம் மட்டுமல்ல, மற்ற சில மாநிலங்களிலும் இந்த கருத்து இப்போது எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பணிகளில் சேர்ந்துவிடுகிறார்கள் என்ற குறை இளைஞர்களிடையே இருக்கிறது. இதற்கு காரணம், அரசியல் சட்டத்தில் இந்தியாவிலுள்ள இளைஞர்கள் யாரும், எந்த மாநிலத்திலுள்ள அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலும் கலந்துகொள்ள வழியிருக்கிறது. ஆனால், அந்தப்பணிக்கு தேர்வாகி 2 ஆண்டுகளுக்குள், அந்த மாநில மொழியில் தேர்ச்சிபெற வேண்டும் என்று இருக்கிறது. இந்த ஒரு சட்டத்தின் உட்பிரிவுகளை பயன்படுத்தி, தமிழக அரசு பணிகளிலும், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சேர்ந்துவிடுகிறார்கள்.
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளிலும், தமிழக அரசுப் பணிகளிலும், பிற மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்த வேலைவாய்ப்புகளை பறிகொடுத்த தமிழக இளைஞர்கள் மத்தியில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது. இது நமக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு அல்லவா?, இதை எங்கிருந்தோ வந்த இவர்கள் தட்டிப்பறித்துவிட்டார்களே? என்ற மனக்குறை இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்போது, மத்திய அரசாங்கத்தின் அனைத்து பணிகளுக்கும் ஒரே தேர்வை நடத்தும் வகையில், தேசிய பணியாளர் நியமனத்தேர்வு முகமை என்ற அமைப்பை ரூ.1,517 கோடியில் புதிதாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆக, மத்திய அரசுப் பணிக்கான தேர்வில், தமிழக இளைஞர்கள் உள்பட அனைத்து மாநில இளைஞர்களும் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ்நாட்டிலும் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தநிலையில், மத்திய பிரதேச அரசு எடுத்த முடிவைப்போல மாநில அரசுப் பணிகளில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்ற துணிச்சலான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவேண்டும். அதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்பதுதான் வேலைவாய்ப்புகளைத் தேடி அலையும் இளைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

இது ஒருபக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம், அனைத்து போட்டித் தேர்வுகளிலும், அது மத்திய அரசாங்க போட்டித்தேர்வு என்றாலும் சரி, தமிழக அரசு போட்டித்தேர்வு என்றாலும் சரி, அதில் கலந்துகொண்டு வெற்றிபெறும் வகையில் தங்கள் திறமைகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவேண்டும்.

Breaking News :'நீட் 2020' தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு DIRECT LINK ATTACHED

🔴Breaking News :'நீட் 2020' தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு DIRECT LINK ATTACHED
click here