புதன், 30 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

செப்டெம்பர் 30, வரலாற்றில் இன்று.

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று.

கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளை மொழிபெயர்த்த புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு தினமான செப்டெம்பர் 30ஆம் தேதி, சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது.

ஜெரோம் 'மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர்' என புகழப்படுகிறார். 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்பு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1991ஆம் ஆண்டில் இந்த அமைப்பானது பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளை உலகளாவிய அளவில் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

பள்ளிகளுக்கு நேரிடையாக நலத்திட்டப் பொருள்களை வழங்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கையின் மீது நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் நடவடிக்கை!

பள்ளிகளுக்கு நேரிடையாக நலத்திட்டப் பொருள்களை வழங்குமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கையின் மீது நாமக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் நடவடிக்கை!

செப்டெம்பர் 29,வரலாற்றில் இன்று.உலக இதய தினம் இன்று.

செப்டெம்பர் 29,
வரலாற்றில் இன்று.

உலக இதய தினம் இன்று.


இன்று உலகம் முழுவதும் இதய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உணவு முறைகளில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக இதயம் மாறி வருகிறது. அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

* புகைப் பழக்கமே இல்லாத 6 லட்சம் பேர் ஒவ்வொரு வருடமும் காற்றில் கலக்கும் புகையால் பாதிப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில் உலக அளவில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50 சதவீதம். புகைப் பிடிப்பதினால் 10 சதவீதம் பேர் இருதய நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

* புகைப்பிடிப்பதை நிறுத்தி 15 வருடமான பிறகும்கூட மாரடைப்பு வரலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன.
அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை மற்றும் உப்பு உள்ள உணவை உண்ணுவது இதய நலனுக்கு எதிராவை. இதனால் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் உண்டாகிறது.

* உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் குழந்தைகளில் 10 லட்சம் குழந்தைகள் பிறவியிலேயே இதயக் கோளாறுடன் பிறக்கின்றன. இதயக் கோளாறு என்பது பெரும்பாலும் ஆண்களையும், வயதானவர்களையும் மட்டுமே தாக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அது தவறு, பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினருக்கும் இதய பாதிப்பு ஏற்படலாம்.

* உலக அளவில், பத்துக்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில் பள்ளிக் குழந்தைகள் அதிக எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதிக எடை, இதய நோய் மற்றும் வலிப்பு நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்.

கவனிக்க வேண்டியவை:

* சமச்சீர் சத்துகள் உள்ள பழங்களும் காய்கறிகளும் இதய நோய் மற்றும் வலிப்பு நோய் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

* வெறுமனே உடற்பயிற்சியில் மட்டும் ஈடுபடாமல் தினமும் விளையாடுவது, மதி வண்டிகளை அதிகம் பயன்படுத்துவது, மாடிப்படிகள் ஏறி இறங்குவது உடல்நலத்திற்கு நல்லது.

* சரியான நேரத்தில் சீரான கலோரிகள் கொண்ட உணவை உட்கொள்வது.

* 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சீரான இடைவெளியில் முழு உடற்பரிசோதனை செய்து கொள்வது நலம்.

* ரத்தத்தின் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதனை மூலம் கவனித்து வருவது

* எண்ணெணய் பண்டங்களை அதிகம் உட்கொள்வதை தவிர்ப்பது.

* நல்ல தூக்கம், அதிக மன அழுத்தம் வராமல் பார்த்து கொள்வது.

செப்டெம்பர் 29, வரலாற்றில் இன்று.சர்வதேச காபி தினம் இன்று.

செப்டெம்பர் 29, வரலாற்றில் இன்று.

சர்வதேச காபி தினம் இன்று.

 நாம் அன்றாடம் ஒன்று அல்லது இரண்டு தடவையாவது காபி அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருப்போம்... ஆனால் யாருக்கும் காபியின் வரலாறு தெரியாது... அது கடந்து வந்த பாதையும் தெரியாது... (வரலாறு முக்கியம் அமைச்சரே, மறந்து விடாதீர்கள்)

காபியின் ருசிகர தகவல்கள்...

சிலர் காபி குடிப்பது நல்லது என்பார்கள், சிலர் காபி குடிப்பது கேடு என்பார்கள், அதெல்லாம் அவரவர் பாடு. காபியில் பல வகைகள், சுவைகள் இருக்கின்றன. நாம் மிகவும் விரும்பி சுவைக்கும் ருசியான காபியின் வரலாறு அதை விட ருசிகரமானது. காபியை எந்த கேட்டரிங் படித்த மாணவரும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர் தெரியாமல் கண்டுப்பிடித்த பானத்தை இன்று உலகே வேண்டி விரும்பிக் குடித்துக் கொண்டிருக்கிறது. 

காபி எனும் பானம் கண்டுபிடிக்கப்பட்டு 11 நூற்றாண்டுகள் ஆகிறது. 9ஆம் நூற்றாண்டில், எதியோப்பியாவை சேர்ந்த ஓர் ஆடு மேய்ப்பவர் தற்செயலாக கண்டுப்பிடித்த பானம் தான் காபி. 

உலக வரலாற்றில் மூன்று முறை காபி தடை செய்யப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் மெக்காவிலும், 1675ஆம் ஆண்டு ஐரோப்பாவில் சார்லஸ் II ஆம் மன்னராலும், 1677ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிரெட்ரிக் என்பவராலும் காபி தடை செய்யப்பட்டது.
பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் தான் காபி அதிகமாக பருகப்படுகிறது

 பொதுவாக காபி மரங்கள் 30 அடி வரை வளர முடியுமாம். ஆனால், 10 அடியில் இருக்கும் போதே அறுவடை செய்துவிடுகின்றனர். அப்போது தான் எளிதாக பறிக்க முடியும். கேமரூனில் இருக்கும் ஒரு வகை காபி (Coffea Charrieriana) தான் உலகிலேயே இயற்கையாக காஃபைன் நீக்கப்பட்ட காபி ஆகும்.

கடந்த 1906ஆம் ஆண்டு, ஆங்கில வேதியியலாளர் ஜார்ஜ் கான்ஸ்டன்ட் வாஷிங்டன் என்பவர் தான் முதன் முதலில் இன்ஸ்டன்ட் காபியை தயாரித்தார். சில நாடுகளின், சில பகுதிகளில் காபிக் கொட்டைகளை உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.
உலகில் எண்ணெய்க்கு அடுத்து இரண்டாவதாக, அதிகமாய் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் காபி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் காபி
 குடிப்பதால், டைப் 2 நீரிழிவு நோய், அல்சைமர் எனும் மறதி நோய், இதய நோய்கள் போன்ற நோய்களின் அபாயங்கள் குறையும். ஓர் நாளுக்கு ஆறு தடவைக்கு மேல் காபிக் குடிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

திங்கள், 28 செப்டம்பர், 2020

தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...

தொடக்கக்கல்வி - 2019-20ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் ஆணை பெற்று இன்னும் பழைய ஈராசிரியர் பள்ளிகளிலேயே பணிபுரியும் 487 இடைநிலை ஆசிரியர்களை பணியில் இருந்து விடுவிக்கவும், அவரவர் மாறுதல் பெற்றுள்ள புதிய பள்ளிகளில் பணியேற்று பணிபுரியவும் அனுமதி அளித்து ஆணை அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது...

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு...

தமிழ்நாட்டின் மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு...

“ செருமுகம் நோக்கிச் செல்கெனெ விடுமே! “

சங்க இலக்கியங்களில் ஒன்றான புற நானூற்றில் உள்ள பல பாடல்களில் மேற்குறித்தவாறு முடியும்  புறப்பாடலும் ஒன்று. ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

வீரத்தமிழ்மகள் ஒருத்தியின் தந்தை முதல்  நாள் நடந்த போர்க்களத்தில் ஒரு யானையை வீழ்த்தி மாண்டு போனார் ; நேற்று நடந்த போரிலோ அவளது கணவன் ஆநிரைகளை மீட்கப் போராடி மடிந்து போனான்; வாழ்க்கையின் இரு பெரும் அரண்களையும் இரண்டே நாட்களில் அடுத்தடுத்து இழந்த அந்தத் தாய்,  இன்றைக்கும் போர்ப்பறை கேட்டவுடன், அவ்வொலியில் பெருவிருப்பம் கொண்டவளாகி, வாழ்வின் பற்றுக்கோடாக இருக்கும் தன் ஒரே மகனையும் அழைத்து அவன் தலையை வாரி, வெண்ணிற ஆடையை உடுத்தி ,  கையில் வேலினைக் கொடுத்து இன்முகத்தோடு, “போர்க்களத்துக்குப் போ மகனே!” என்று அனுப்பி வைத்தாள் என்று அந்தப் பாடல் சொல்கிறது.

ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் 
கழித்து இப்போது வரலாறு மீண்டும் திரும்புகிறது.

கொரொனா நோய்த்தொற்று இன்னும் குறையாத நிலையில், தமிழ் நாட்டின் பள்ளிக் கல்வித்துறை, அக்டோபர் 1ம் தேதி முதல்  ‘ சந்தேக நிவர்த்திக்காக’ பள்ளிக்கூடங்களைத் திறப்பதாக அறிவித்து உள்ளது. ‘சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும், ஆலோசனையைப் பெறவேண்டியும்’தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், தங்கள் சுய விருப்பத்தையும், முழு மனதுடனான தங்கள் ஒப்புதலையும் தெரிவித்து,  சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு அனுப்பவேண்டிய கடிதத்தின் மாதிரியும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றது. 

கடித வரிகளைப் படித்த போது, அதை அனுப்பி வைக்கப் போகும் ஒவ்வொரு பெற்றோரும்,  போர்க்களத்துக்குப் பெரு விருப்பத்தோடு  தானே தன் பிள்ளையை அனுப்பிவைத்த புறநானூற்றுத் தாயாக மாறவேண்டும் என்ற அவர்களின் விருப்பம் புலனாகிறது. அவ்வாறு நாம் கருதும் வகையில் இந்தக் கடிதத்தை வரைவு செய்தவர், நிச்சயம் ஒக்கூர் மாசாத்தியார் வழிவந்தவராகவே  இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடும்  உடன் எழுகிறது.😉

செப்டெம்பர் 28, வரலாற்றில் இன்று.🐕 உலக ரேபிஸ் நோய் தினம்

செப்டெம்பர் 28, வரலாற்றில் இன்று.

🐕 உலக ரேபிஸ் நோய் தினம் செப்டெம்பர் 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🐕 ரேபிஸ் எனும் வைரஸ் வீட்டு விலங்கான நாய்களையும், பூனைகளையும் எளிதில் தாக்கக் கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிபட்ட பிற விலங்குகள் மூலமாகவோ ரேபிஸ் நோய் பரவுகிறது.

🐕 ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருமுறை ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

🐕 இந்நோய்க்கு லூயி பாஸ்டர் என்பவர் 1885ஆம் ஆண்டில் மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் மறைந்த செப்டெம்பர் 28ஆம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

செப்டெம்பர் 28, வரலாற்றில் இன்று.🍁 பசுமை நுகர்வோர் தினம்

செப்டெம்பர் 28,
 வரலாற்றில் இன்று.

🍁 பசுமை நுகர்வோர் தினம் செப்டெம்பர் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

🍁 பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆகவே இயற்கையான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மறு சுழற்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். உலகின் பல பகுதிகளில் பசுமை நுகர்வோர் அமைப்பு மக்களிடம் பசுமையைப் பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

*🌟அரசாணை எண் 37 -இன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசாணை பத்தி 6 -இன் படி அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம்.*

*🌟அரசாணை எண் 37 -இன் படி 10.03.2020 க்கு முன்னர் படிப்பை முடித்திருந்தால் அரசாணை பத்தி 6 -இன் படி அரசின் இசைவு பெற்று ஊக்க ஊதியம் பெறலாம்.*

செப்டெம்பர் 27, வரலாற்றில் இன்று.கூகுள் தேடல் தளம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (1998).

செப்டெம்பர் 27, வரலாற்றில் இன்று.

கூகுள் தேடல் தளம் ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (1998).
 

உலகின் சிறந்த தேடுதல் தளமாக கருதப்படும் கூகுள் நிறுவனத்தின் 21ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

இணையத்தில் கூகுள் இல்லையென்றால் எதையும் பார்க்க முடியாது என்ற நிலை தான் பெரும்பாலான பயனர்களுக்கு. அவர்கள், கூகுள் தேடுபொறியை பயன்படுத்தி தான், எல்லா தகவல்களையும் தேடி பெறுவர்.

லாரி பேஜ், செர்ஜி பிரின் ஆகிய இருவரால் கடந்த 1998ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது. 

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இருவரும் கல்லூரி ப்ராஜக்ட்டாக செய்த தேடுதல்தளம் செல்வம் கொழிக்கும் அட்சய பாத்திரமாக மாறத்தொடங்கியது.