சனி, 17 அக்டோபர், 2020

அக்டோபர் 17,வரலாற்றில் இன்று.சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.

அக்டோபர் 17,
வரலாற்றில் இன்று.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுஉலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை  கழிக்க  கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799)

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.

 வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799).

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்.1797இல் முதன் முதலாக ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.
1799இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது. பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

அக்டோபர் 16,வரலாற்றில் இன்று."உலக உணவு தினம்" இன்று.

அக்டோபர் 16,
வரலாற்றில் இன்று.

"உலக உணவு தினம்" இன்று.

ஐக்கிய நாடுகளின் "உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு" தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் 1979ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உணவின் முக்கியத்துவம், வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

வியாழன், 15 அக்டோபர், 2020

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.டாட்டா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவை ஆரம்பித்த தினம் இன்று (1932).

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.

டாட்டா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவை ஆரம்பித்த தினம் இன்று (1932).

பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

அக்டோபர் 15, வரலாற்றில் இன்று.சர்வதேச கைகழுவும் தினம் இன்று.

அக்டோபர் 15,
 வரலாற்றில் இன்று.

சர்வதேச கைகழுவும் தினம் இன்று.

Global Handwash Day.

முதன்முதலாக உலக கைகழுவும் தினம் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று கொண்டாடப்பட்டது. நம்மையும் அறியாமல் கைகளில் அசுத்தங்கள் இருக்கின்றன. இதில் பல்வேறு நோய்க்கிருமிகள் இருக்கின்றன. கைகளை நன்றாக கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, ஜலதோசம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல நோய்கள் ஏற்படும். ஆகவே கைகளை சோப்பு போட்டு 30 வினாடியாவது கழுவ வேண்டும்.

அக்டோபர் 15,வரலாற்றில் இன்று.முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 15,
வரலாற்றில் இன்று.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று.


1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி ஜைனுலாப்தீன்- ஆஷியம்மா ஆகியோருக்கு மகனாக அப்துல் கலாம் பிறந்தார்.


அப்துல் கலாம்
இந்தியாவின் 11ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். 

கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


 ஜனாதிபதியாக பதவி ஏற்குமுன், அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார்.

ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 

1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். 

கலாம், இந்தியாவின் முக்கிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்  பாட்னா , அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியராகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தராகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார். சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.

கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்பு பிரதிகளாக வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்பட்டார்.

*🌟ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை எண் 154 நாள்:13.10.2020 வெளியீடு!*

*🌟ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை எண் 154 
நாள்:13.10.2020 வெளியீடு!*

*🌟இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியம் 65500-க்கு ஆண்டு ஊதிய உயர்வு பரிசீலனையில் உள்ளது - RTI பதில் :*

*🌟இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியம் 65500-க்கு ஆண்டு ஊதிய உயர்வு பரிசீலனையில் உள்ளது - RTI பதில் :*

புதன், 14 அக்டோபர், 2020

அக்டோபர் 14,வரலாற்றில் இன்று.இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் வெளியுறவு அதிகாரி சி.பி.முத்தம்மா (C.B.Muthamma) நினைவு தினம் இன்று.

அக்டோபர் 14,
வரலாற்றில் இன்று.


இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் வெளியுறவு அதிகாரி சி.பி.முத்தம்மா (C.B.Muthamma) நினைவு தினம் இன்று.


 கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தவர். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்தபோது இவருக்கு வயது 9. தான் கஷ்டப்பட்டாலும் 4 குழந்தைகளையும் நன்கு படிக்கவைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார் அம்மா.

 மடிகேரியில் பள்ளிப் படிப்பு, சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரசிடென்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 3 முறை தங்கப் பதக்கம் வென்றார்.

 வெளியுறவுத் துறையில் பணியாற்றவேண்டும் என்பது இவரது விருப்பம். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்ற நாட்டின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

 இவரைப் பணியில் சேரவிடாமல் தடுக்க பல முயற்சிகள் நடந்தன. இவரது திறமைக்கு முன்பு எதுவும் எடுபடவில்லை. நாட்டின் முதல் பெண் வெளியுறவு அதிகாரியாக 1949இல் பணியில் சேர்ந்தார். அளவுகடந்த ஆர்வம், துடிப்போடு பணியைத் தொடங்கினார்.

ஆண் பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் இருந்தன. திருமணம் செய்துகொள்ள அரசிடம் முன்அனுமதி பெறவேண்டும். குடும்பப் பொறுப்பு பணித் திறனை பாதிக்கும் நிலை ஏற்பட்டால், பணியில் இருந்து விலக்கப்படுவார்கள் என்றும் சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. பணி முதிர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் பெண்கள் உரிமை கோர முடியாது என்ற விதியும் இருந்தது.

 ‘இதுபோன்ற சட்டங்கள் பெண்ணுரிமை, சமத்துவம், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.

 வழக்கை விசாரித்தவர் நீதிபதி கிருஷ்ணய்யர். இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்த நீதிபதி, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு, ஆணாதிக்க கருத்து கொண்ட விதிகளைத் திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். பர்மா, இங்கிலாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவில் தூதரக உயர் பொறுப்புகளில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் இவர்தான். 32 ஆண்டு அரசுப் பணிக்குப் பிறகு, 1982இல் ஓய்வு பெற்றார்.

 ஆதரவற்றோர் இல்லம் கட்ட டெல்லியில் இருந்த தனது சொந்த நிலத்தில் 15 ஏக்கரை அன்னை தெரசாவுக்கு வழங்கியவர்.

 இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளின் சமத்துவத்துக்காகப் போராடி அவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தந்த சி.பி.முத்தம்மா, 2009ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தமது 85ஆவது வயதில் காலமானார்.