வியாழன், 31 டிசம்பர், 2020

*📘முறைகேடுகளைத் தடுக்கப் போட்டித் தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.*

*📘முறைகேடுகளைத் தடுக்கப் போட்டித் தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.*



*தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகள் நேராமல் இருப்பதற்காகவும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.*


*இதுதொடர்பாகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:*


*தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்துக்குச் செல்ல வேண்டும். இதற்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு, தேர்வு தொடங்கப்படும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது அந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.*


*விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளைக் குறிக்கவும் கருப்பு நிற மை கொண்ட பந்து முனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.*


*விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையொப்பமிட்டு, இடது கை பெருவிரல் ரேகையைப் பதிக்க வேண்டும். அப்போது பிற இடங்களில் மை படாமலும், விடைத்தாள் சேதமடையாமல் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.*


*வினாத்தாள் கேள்விகளுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும்.*


*விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணி, மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பிக் கருமையாக்க வேண்டும். தவறினால் 5 மதிப்பெண்கள் குறைக்கப்படும். இந்தச் செயலை மேற்கொள்ளத் தேர்வு முடிந்த பிறகு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்.*


*தேர்வர்களின் நலனுக்காகவும், எவ்விதத் தவறுகளும் நேராமல் இருப்பதற்காகவும் தேர்வாணையம் மேற்குறிப்பிட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது’’.*

*இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

புதன், 30 டிசம்பர், 2020

National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!..

National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!..


பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...
சிறுபான்மையினர் நலத்துறையின் கடிதங்களில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்வதாகவும் அதற்காக , தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட User Name மற்றும் Password அம்மைய நிர்வாகிகளுக்கு கொடுப்பதாகவும் , அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதைத் தவறாகப் பிரயோகித்து மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை online மூலம் National Scholarship Portal - ல் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே , இதுகுறித்து , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. எனவே , பார்வையிற்காண் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் User Name மற்றும் Password பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால் அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , அனைத்து தலைமையாசிரியர்களும் அடுத்த இரு தினங்களுக்குள் ( 31.12.2020 ) இப்பணியை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
🙏மன்றம்🙏

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசு..பிப்ரவரி மாதம் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசு..

பிப்ரவரி மாதம் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

*🖥️INCOME TAX - நாளைக்குள் (31.12.2020) வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால்,இருமடங்கு அபராதம்.

*🖥️INCOME TAX - நாளைக்குள் (31.12.2020) வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால்,இருமடங்கு அபராதம்.:*

*Income-Tax-Return-FIling:*


*நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், கடந்த ஆண்டைவிட, இருமடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியதாகிவிடும்.வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே முக்கியமான வித்தியாசம், உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாதபட்சத்தில், விதிக்கப்படும் அபராதம் தான்.கடந்த ஆண்டு அபராதம், 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, இந்த ஆண்டு, இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.*



 *இருப்பினும், அபராதம் அல்லது தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம், உங்கள் நிகர மொத்த வருமானம் அதாவது, தகுதியான கழிவுகள் மற்றும் வரி விலக்குகளை கோரிய பிறகான வருமானம், 5 லட்சம் ரூபாயை தாண்டினால் மட்டுமே வசூலிக்கப்படும்.உங்கள் நிகர மொத்த வருமானம், குறிப்பிட்ட நிதியாண்டில், 5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், அபராதமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே விதிக்கப்படும்.வழக்கமாக, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவற்கு, தனிநபர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், ஜூலை, 31ம் தேதி கடைசி தேதியாகும்.ஒருவேளை இதற்குள் தாக்கல் செய்ய முடியாமல் போய்விட்டால், அதே ஆண்டில், டிசம்பர், 31ம் தேதிக்குள், தாமத மாக தாக்கல் செய்யலாம்.*

 
*ஆனால், தாமதக் கட்டணமாக, 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். ஒருவேளை, டிசம்பர், 31ம் தேதிக்குப் பிறகு, மார்ச், 31ம் தேதிக்கு முன்ன ராக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், தாமதக் கட்டணம், 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.இம்முறை தாக்கல் செய்வதற்கான கெடு, டிசம்பர், 31வரை நீட்டிக்கப்பட்டதால், வழக்கமாக விதிக்கப்படும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட மாட்டாது.ஆனால், ஜனவரி, 1ம் தேதி முதல், மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும்.*


 *ஏனென்றால், இம்முறை தாமதமாக தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கான வருமான வரிச் சட்டத்தில், எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.தாமதக் கட்டணம் குறித்த, வருமான வரி சட்டத்தின், 234எப் பிரிவில், இரண்டு அடுக்கு அமைப்பு உண்டு.அதன் படி, 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என, குறிப்பிட்ட தேதிகளுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த பிரிவில் மாற்றம் செய்யப்படாததால்,நேரடியாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.எனவே, இரு மடங்கு அபராதத்தை தவிர்க்க, நாளைக்குள் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வது தான் ஒரே வழி.*

செவ்வாய், 29 டிசம்பர், 2020

*📺கல்வி 'டிவி' - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை:*

*📺கல்வி 'டிவி' - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுரை:*

*கல்வி, 'டிவி' நிகழ்ச்சிகளுக்கு, சர்ச்சைக்குரிய அம்சங்கள் இல்லாமல், வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.*


*தொற்று பரவல் காரணமாக, மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடத்துகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு, தமிழக அரசின் கல்வி, 'டிவி' வழியாக, வீடியோ பாடங்கள் ஒளிபரப்பாகின்றன. இந்நிலையில், ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்துக்கான வீடியோ, சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பானது. அதில், திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் காட்சி இடம் பெற்றது. இதற்கு, சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.*

 
*அனைத்து மதத்தினருக்கும் பொதுவான திருவள்ளுவரை, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பது போல, சித்தரிக்க முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அனைத்து மாவட்ட வீடியோ பாடத் தயாரிப்பு ஆசிரியர்களுக்கும், பள்ளி கல்வி இயக்குனரகம், சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.அதன் விபரம்:வீடியோ பாடங்கள் தயாரிக்கும் போது, சர்ச்சைக்குரிய அம்சங்கள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனக் குறைவாகவோ, வேண்டுமென்றோ, தேவையற்ற அம்சங்களை இடம்பெற செய்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.*


*புத்தகத்தில் உள்ளபடி மட்டுமே பாடங்களையும், படங்களையும் பயன்படுத்த வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு படங்களையோ, பாட அம்சங்களையோ, 'டிவி' நிகழ்ச்சிக்கு பயன்படுத்தக் கூடாது. வீடியோக்கள் தயாரித்தபின், உயர் அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும்.இவ்வாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.*

*💵ATM-ல் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.!*

*💵ATM-ல் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.!*


*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), ICICI வங்கி, HDFC வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி மற்றும் பிற பெரிய வங்கிகள் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லாததால் தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.*

*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), ICICI வங்கி, HDFC வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி மற்றும் பிற பெரிய வங்கிகள் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லாததால் தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.*


 
*தற்போதைய சூழலில் உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக, கணக்கில் உள்ள நிலுவைத் தொகையை அறிய வங்கி தவறவிட்ட அழைப்புகள் (Missed Call) மற்றும் SMS போன்ற வசதிகளை வழங்கியுள்ளது. இருப்பினும், பல வாடிக்கையாளர்கள் ATM-களுக்கு பணம் எடுக்க இவற்றை கவனிக்காமல் செல்கின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது பெரும்பாலும் தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு வழிவகுக்கிறது. இதற்கு நாம் ஒரு பெரிய தொகையை செலுத்த வேண்டியது இருக்கும். எனவே, ATM பரிவர்த்தனைக்கு முன் நிலுவைத் தொகையை சரிபார்க்கவும்.*


*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), ICICI வங்கி, HDFC வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, YES வங்கி மற்றும் பிற பெரிய வங்கிகள் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லாததால் தோல்வியுற்ற ATM பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கின்றன.*


*தோல்வியுற்ற பரிவர்த்தனைக்கு எவ்வளவு பணம் எடுக்கப்படும்?*


*ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா - SBI*


*Decline Charge: போதிய இருப்பு இல்லாமல் உங்கள் ATM பரிவர்த்தனை தோல்வியுற்றால் SBI உங்கள் கணக்கில் இருந்து 20 ரூபாய் மற்றும் GST-யை வசூலிக்கிறது. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்குகிறது. நீங்கள் மற்றொரு வங்கியில் SBI ATM பயன்படுத்தினால், 3 பரிவர்த்தனைகள் இலவசம். இதற்கு மேல், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் நீங்கள் 10 ரூபாய் மற்றும் GST செலுத்த வேண்டும், மற்றொரு வங்கிக்கு இது 20 ரூபாய் மற்றும் GST ஆகும்.*


*ICICI வங்கி:*


*ICICI வங்கி கணக்கில் குறைந்த இருப்பு காரணமாக தோல்வியுற்றபரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ICICI வங்கியும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்கிறது.*


*HDFC வங்கி:*



*HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த இருப்பு காரணமாக, பரிவர்த்தனை தோல்வியுற்றால், வாடிக்கையாளர்கள் 25 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அத்துடன் GST என கட்டணம் தனித்தனியாக செலுத்தப்படும். HDFC வங்கி ATM-களிலும் 5 பரிவர்த்தனைகள் இலவசம், மற்ற வங்கி ATM-களில் 3 பரிவர்த்தனைகள் இலவசம். இதற்குப் பிறகு, ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது, அதில் GST வரி அடங்கும்.*


*IDBI வங்கி:*



*அரசாங்கத்திற்கு சொந்தமான IDBI வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ATM-ல் இருந்து பணத்தை திரும்பப் பெற்றால், குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியுற்றால், தோல்வியுற்ற ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ .20 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும், அதில் வரி தனித்தனியாக செலுத்தப்பட வேண்டும்.*



*கோட்டக் மஹிந்திரா வங்கி:*



*வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டால் ATM-களில் இருந்து விலகத் தவறியதற்காக தனியார் துறை வங்கிகளான கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஒரு பரிவர்த்தனைக்கு ரூ .25 கட்டணம் வசூலிக்கின்றன.*

*YES வங்கி:*

 *போதிய இருப்பு இல்லாத ATM-யில் தோல்வியுற்ற பரிவர்த்தனைக் வங்கி மாதத்திற்கு ₹.25 வசூலிக்கிறது.*


*ஆக்சிஸ் வங்கி - Axis Bank*


*மற்ற வங்கியின் உள்நாட்டு ATM-களில் போதுமான இருப்பு இல்லாததால் ATM பரிவர்த்தனைகளுக்கு ஆக்சிஸ் வங்கி ATM ஒரு பிளாட்டுக்கு 25 வசூலிக்கிறது.*



*எனவே, அடுத்த முறை ATM-ல் இருந்து பணத்தை எடுக்க முடிவு செய்தால், நீங்கள் பணம் எடுக்க வேண்டிய அளவுக்கு உங்கள் கணக்கில் நிதி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.*

*🏗️நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து உரிய அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

*🏗️நீதிமன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து உரிய அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

திங்கள், 28 டிசம்பர், 2020

*🎂🎆புத்தாண்டு 2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - GO.Ms.No. 787 நாள் : 22.12.2020.*

*🎂🎆புத்தாண்டு 2021 கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு - GO.Ms.No. 787 நாள் : 22.12.2020.*

*🔖சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை - G.O Ms.No. 99 Dt: December 21, 2020 - Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department - Constitution of the Commission for collection of quantifiable data on castes, communities and tribes of Tamil Nadu - Orders - Issued.*

*🔖சாதி வாரி கண்கெடுப்பு ஆணையம் அமைப்பதற்கான அரசாணை - G.O Ms.No. 99 Dt: December 21, 2020 - Backward Classes, Most Backward Classes and Minorities Welfare Department - Constitution of the Commission for collection of quantifiable data on castes, communities and tribes of Tamil Nadu - Orders - Issued.*

அரசாணையினைப் படிக்க இங்கே கிளிக் செய்க..

EMIS - ATTENDANCE APP updated version 0.0.27 link.

EMIS - ATTENDANCE APP updated version 0.0.27 link.