*📱வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படுமா?- நிர்வாகம் விளக்கம்*
*டில்லி*
*வாட்ஸ்அப் நிர்வாகம் தாங்கள் அறிவித்துள்ள புதிய கொள்கையால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் குறித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.*
*வாட்ஸ்அப் நிர்வாகம் சமீபத்தில் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் தகவல்கள், படங்கள், செய்திகள் உள்ளிட்டவை யாவும் முகநூலில் சேமிக்கப்படும் எனவும் அவற்றை மற்றவர்களுக்கு விளம்பரங்களுக்காக அளிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. இதையொட்டி தங்கள் அந்தரங்க விவரங்கள் வெளியாகலாம் எனக் கருதிப் பல பயனாளிகள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து விலகத் தொடங்கினர்.*
*இந்நிலையில் வாட்ஸ்அப் நிர்வாகம் ஒரு விளக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.*
*அந்த அறிக்கையில் வாட்ஸ்அப்,*
*'நாங்கள் எங்களது புதிய அறிவிப்பால் பலருக்கும் எத்தனை குழப்பங்கள் நேரிட்டுள்ளன என்பதை நாங்கள் அறிந்துக் கொண்டோம். இதில் நிறைய தவறான தகவல்கள் பரவி உள்ளதால் நாங்கள் எங்களது கொள்கை மற்றும் அதன் உண்மை நிலை பற்றி அனைவருக்கும் உதவ எண்ணுகிறோம்.*
*வாட்ஸ்அப் செயலி என்பது நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினருடன் தகவல்கள் பரிமாற உருவாக்கப்பட்டதாகும். உங்களுடைய உரையாடலை நாங்கள் எப்போதும் இரு முனைகளில் இருந்தும் பாதுகாப்போம் என்பதே பொருள் ஆகும். எனவே வாட்ஸ்அப் அல்லது முகநூல் தனிப்பட்ட தகவல்களை பார்வையிடப்போவதிலில்லை. இதனால் தான் நாங்கள் உங்களுடைய அழைப்பு அல்லது தகவல்களைச் சேமிப்பது இல்லை. அத்துடன் நீங்கள் பகிரும் இருப்பிடங்கள் மற்றும் உங்கள் தொடர்பு எண்களை முகநூலுடன் பகிர மாட்டோம்.*
*இந்த புதிய கொள்கையினால் மேலே உள்ள எதுவும் மாறப்போவதில்லை. மாறாக வாட்ஸ்அப் மூலம் மக்கள் தங்கள் வர்த்தக தகவல்களைப் பகிரும் போது அது மேலும் பலரை சென்றடைய நாங்கள் இந்த விவரங்களைப் பயன்படுத்த உள்ளோம். வர்த்தகர்கள் தங்கள் பணிகளை வாட்ஸ்அப் மூலம் செய்துக் கொள்ளலாம் என்பதற்காக இந்த புதிய முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பயனாளிகள் அனைவரும் வர்த்தகர்கள்: இல்லை என்பதால் இது குறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம்.*
*நாங்கள் இது குறித்து மக்களின் விருப்பத்தைக் கோர அறிவித்த காலக் கெடுவை மாற்ற உள்ளோம். பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் யாருடைய கணக்கும் நீக்கப்படாது. இந்த தவறான தகவலை நீக்கத் தேவையான பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வாட்ஸ்அப் மூலம் யாருடைய தனிப்பட்ட அல்லது அந்தரங்க விவரங்கள் யாருக்கும் அளிக்கப்பட மாட்டாது என்பதை உறுதிப்படுத்த உள்ளோம். எனவே நாங்கள் இது குறித்த புதிய அறிவிப்பு மற்றும் வர்த்தக தேர்வுகளை வரும் மே மாதம் 15 ஆம் தேதி வெளியிட உள்ளோம்.*
*வாட்ஸ்அப் மூலம் உலக மக்களால் பகிரப்படும் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். மற்றும் தற்போதுள்ள தனிப்பட்ட தகவல்களை இப்போது மட்டுமின்றி எப்போதும் பாதுகாப்பாக வைத்திருப்போம். இது குறித்து எங்களிடம் விளக்கம் கேட்ட அனைவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இதன் மூலம் சரியான உண்மை தகவல்களை அளிக்க வைத்து வதந்திகளை நிறுத்தவும் நீங்கள் உதவி உள்ளீர்கள். நாங்கள் எப்போதும் வாட்ஸ்அப் செயலி மக்களுக்கு மேலும் சேவைகள் செய்வதையும் அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதையும் தொடர்ந்து செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*