திங்கள், 1 பிப்ரவரி, 2021

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு!தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு.

பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு!

தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு -அரசாணை வெளியீடு.

வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு 11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு  11 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

*📘INCOME TAX 2021 - தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை !*

*📘INCOME TAX 2021 - தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை !*
 

மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி  உச்சவரம்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தனிநபர் வருமான வரி  உச்சவரம்பில் மாற்றமில்லை என்று தெரிய வந்துள்ளது.


2021-22 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.


அதில், பெரு நிறுவன வர்த்தக வரி விகிதங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் நமது நாட்டில் வசூலிக்கப்பட்டு வருகிறது.


மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு, ஓய்வூதியம் மற்றும் வட்டி வருவாய் மட்டும் உள்ளோருக்கு, வருமான வரிக் கணக்கு தாக்கலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

 
தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும்  அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.


வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்னையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்.

மத்திய பட்ஜெட் 2021- நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அம்சங்கள்!

மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை.

தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய குறைதீர்க்கும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும்.

ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்துவதில் சலுகை.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு.


கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை படைத்துள்ளோம்.

கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு.

2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது.

5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு.

இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும்.

பி.எஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை.


பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதன திட்டத்திற்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு.

துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு/49 % இருந்து 74%ஆக உயர்த்தி அறிவிப்பு.

இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்ட திட்டம்.

மேலும் 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீடு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு.

2022-ம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும்.


புதிய வேளாண் கடன்களுக்காக ரூ.16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

சென்னை உள்ளிட்ட 5 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த மத்திய அரசு முடிவு.

கேரள மாநிலத்தில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.65,000 கோடி ஒதுக்கீடு.

அசாம் மாநிலத்திற்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு

மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு.

5 ஆண்டுகளில் ரூ.4,000 கோடி செலவில் கடற்பணிகள் மேற்கொள்ளப்படும்.

உலகிலேயே கார்ப்பரேட் வரி இந்தியாவில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி ஆணையம் விரைவில் அமைக்கப்படும்

செவிலியர்கள் நலனுக்காக புதிய ஆணையம் அமைக்கப்படும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்.

தேயிலை தொழிலாளர்கள் நலனுக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

எதிர்வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் இருந்து 6.8%ஆக இருக்கும் என கணிப்பு.

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.

விவசாய கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்வு.

5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்.

சிறு நிறுவனங்களின் மூலதனம் ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாக உயர்வு.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் பிளாட்பார்மில் வசிக்கும் மக்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

புலம்பெயர்ந்த மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பற்றிய தகவல் சேகரிக்க தனி இணைய பக்கம்

தனியார் பங்களிப்புடன், 100 சைனிக் பள்ளிகள், ஆரம்பிக்கப்படும்.

லடாக்கில் உள்ள லே பகுதியில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப்படும்.

பழங்குடியினர் பகுதிகளில் 750 பள்ளிகள் அமைக்கப்படும்.

காலாவதியான வாகனங்களை உடைப்பதற்காக, 15 ஆண்டுகளான வர்த்தக நோக்கில் ஓடிய வாகனங்கள் தகுதி பெறுகின்றன.

இதர சொந்த உபயோக வாகனங்களை உரிமையாளர்கள் தாமே முன்வந்து உடைப்பதற்காக அளித்து விடலாம்.

அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள்ளாக 100 சதவீதம் மின்மயமாக்கப்படும்

பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகைக்காக ரூ.35.219 கோடி ஒதுக்கீடு.

டிஜிட்டல் பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு.

அரசின் முக்கிய திட்டங்களை மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்ய புதிய திட்டம்.

நிலவுக்கு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் ககன்யான் திட்டத்தை டிசம்பர் 2021ல் செயல்படுத்த திட்டம்.

எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

LIC தனியார் மயமாகிறது; IDBI வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு!: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கொரோனா காலம் என்பதால் வழக்கமான காகித பட்ஜெட்டிற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் ஐ-பேடில் பட்ஜெட் வாசிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்குப் பிறகு தாக்கலாகும் முதல் பட்ஜெட் என்பதாலும், 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மத்திய பட்ஜெட் இருக்கும் என நிதியமைச்சர் சொல்லியிருந்த காரணத்தாலும் இந்த பட்ஜெட் மீது பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

எல்.ஐ.சி. நிறுவன பங்கு:


* எல்.ஐ.சி. நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* இந்த ஆண்டு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க  நடவடிக்கை.

* பொதுமக்கள் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.

தனியார் மயமாகும் IDBI வங்கி:

ஐ.டி.பி.ஐ. வங்கியை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இந்த ஆண்டு நடவடிக்கை.

* அரசுக்கு சொந்தமான பொது காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் இந்த ஆண்டு தனியார்மயக்கப்படும்.

* இந்த ஆண்டு அரசு நிறுவனங்கள் விற்பனை மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

*இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும்

* இந்தியாவின் வளர்ச்சிக்கு 6 முக்கிய துறைகள் தூண்களாகக் கவனிக்கப்படும் 

* பழைய வாகனங்களைத் திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் 

* மூன்று ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் 

* உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் 

* ஜூன் 2022ம் ஆண்டுக்குள் மேற்கு - கிழக்குப் பகுதிகளில் சரக்கு பாதை அமைக்கப்படும்

மத்திய பட்ஜெட்: தமிழக நெடுஞ்சாலைகள் - ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு..

தமிழகத்தில் 3,500 கிமீ தொலைவுக்கான தேசிய நெடுஞ்சாலை பணிக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ், மதுரை-கொல்லம், சித்தூர்-தச்சூர் தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன.
மும்பை-கன்னியாகுமரி இடையேயும் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் கேரளாவின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் நவீன சாலைகள் அமைக்கப்படும்.


இதேபோல, சென்னை மெட்ரோ ரயிலின் 118.9 கிமீ தொலைவுக்கான 2ஆம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், தமிழகத்தில் கடல்பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றது.


*💥வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது-முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கை நாள்:01.02.2021.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறது-
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிக்கை நாள்:01.02.2021.

தமிழக அரசுப்பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றங்கள் ஏற்படுத்த உத்தரவு~பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு...

ஞாயிறு, 31 ஜனவரி, 2021

*🏛️அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...*

*🏛️அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...*


G.O.No.16, Dated: 25-01-2021

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மறவாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.. இனியும் ஒரு தேதி நீட்டிப்புத் தவணை கிடைக்கும் என்று காத்திராமல் இதுவரை வரன்முறை செய்திடாத வீட்டு மனைகள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளை வரும் பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின் DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில் முறையாக விண்ணப்பித்து அத்துறையின் அனுமதி உத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்..... 

இதுகுறித்த 25-01-2021 நாளில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணை  இணைக்கப்பட்டுள்ளது....

*🛩️Telegram App-ஐ நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி...?*

*🛩️Telegram App-ஐ நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி...?*

 *Telegram இல் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய.*

*படத்தில் உள்ளது போல privacy setting களை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.*

*Setting - Privacy settings*


*1. Phone number - Nobody என்று வைப்பதால் உங்கள் mobile எண் மற்றவருக்கு தெரியாமல் இருக்கும்.*


*2.Calls - Nobody என்று வைப்பதால் telegram இல் இருந்து உங்களுக்கு யாரும் கால் செய்து தொல்லை கொடுக்க முடியாது.*
 


*3.Groups- இது மிக முக்கியமான setting ஆகும். இதை My contacts என்று மாற்றி கொள்வதால் உங்கள் அனுமதி இல்லாமல் பல தவறான குழுக்களில் உங்களை யாராலும் இணைக்க முடியாது.*


*4.two-step verification - இதை on செய்து கொள்வதால் உங்கள் account மற்றவர்கள் மூலம் தவறான முறையில் பயன்படுத்த முடியாது.*

*5.Archive and mute - இந்த setting இப்போது சில accountகளுக்கு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. இதை on செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் pm/dm அனுமதி இல்லாமல் வரும் personal message அனைத்தும் mute & archive ஆகிவிடும்.*

*📘House loan principal amount, interest and house rent allowance related RTI letter*

*📘House loan principal amount, interest and house rent allowance related RTI letter*

*📘பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு-தமிழக அரசு செய்தி வெளியீடு.நாள்:31.01.2021*

*📘பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம்  வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு-தமிழக அரசு செய்தி வெளியீடு.நாள்:31.01.2021*


செய்தியினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.