ஞாயிறு, 7 மார்ச், 2021
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்-பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தை மீட்டெடுப்போம்!பாதுகாப்போம்!ஆற்றல் மிகு ஆசிரியப்பெருமக்களே!ஆதரவு தருக!போராட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று வெற்றிகரமாக்கிடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயலாளர் தனிச்சுற்று மடல்!
சனி, 6 மார்ச், 2021
*🌻பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு- சார்ந்து- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008445/ பிடி2/ இ2/ 2021 நாள்: 02-03-2021...*
*🌻IFHRMS - மார்ச் 2021 மாதத்திற்கான பட்டியல்களை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வழங்குதல் - புதிய வழிமுறைகள் ...*
*✍️G.O Ms. No. 139 Dt: March 04, 2021 - COVID-19 – Health and Family Welfare Department – Comprehensive Guidelines for COVID-19 – Orders Issued – Amendments – Issued*
ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு...
ஊக்க ஊதிய உயர்வுக்கான நிதித்துறை ஒப்புதல் எப்போது கிடைக்கும் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு...
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் தேதிக்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது என அரசு பணியாளர் துறை அரசாணை (அரசாணை எண்.37 நாள்: 10.03.2020) மூலம் அறிவித்தது.
அதேசமயம் 10-3-2020 க்கு முன் உயர்கல்வி தேர்ச்சி அல்லது துறைத்தேர்வுகள் தேர்ச்சி பெற்று நிர்வாக காரணங்கள் அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கையினால் ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் இம்மாதம் 31ஆம் தேதிக்குள் நிதித் துறை ஒப்புதல் பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெற்று கொள்ளலாம் ( அரசாணை எண்:116 நாள்:15-10-2020) என அரசு அறிவித்திருந்தது. இதன்காரணமாக கல்வித் துறையில் கடந்த நவம்பர் மாதம் சுற்றறிக்கை அனுப்பி 10-3-2020 க்கு முன் உயர் கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ளவர்கள் பட்டியல் மற்றும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெறப்பட்டு நிதித்துறை ஒப்புதல் பெற அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கு இம்மாதம் 31ஆம் தேதியே கடைசி நாளாகும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாலும்,
இதுவரை நிதித் துறை ஒப்புதல் பட்டியல் கிடைக்கப் பெறாததாலும் எப்போது நிதித்துறை ஒப்புதல் கிடைக்கும் என ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியுள்ள ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.