செவ்வாய், 9 மார்ச், 2021
*🌻40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் தேங்கி நிற்கும் ஊழியர்களுக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு [முன்பு 30 ஆண்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது]*
G.O.No.90/26.02.2021 இடைநிலை ஆசிரியர் உட்பட பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய பட்டியலில் உச்சபட்ச அளவை எட்டியுள்ளவர்கள் பயன் பெறும் வகையில் மேலும் 5 cells கூடுதலாக pay matrix உருவாக்கி தமிழக அரசு ஆணை வெளியீடு.
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு 2021 பெப்ரவரி மாதம் ஊதியம் 08.03.2021வரையிலும் கிடைக்கப் பெறவில்லை!எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் விரைந்துக்கிடைத்திட நேரடித் தலையீடு செய்க!நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முறையீடு!
*📮ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறை - அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...*
முதல்முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
முதல்முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
18 வயது நிரம்பிய, முதல் முறை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் முறை வாக்காளர்களுக்கு, ‘இ-எபிக்’ எனப்படும் மின்னணு வாக்காளர் அட்டையை வழங்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.இந்த ‘இ-எபிக்’ மின்னணு வாக்காளர் அட்டை முதல் முறை இளம் வாக்காளர்களுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த கட்டங்களில், அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.’இ-எபிக்’ தேவைப்படும் முதல் முறை இளம் வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தின் www.voterportal.eci.gov.inஇணையதளத்தில், பதிவு செய்து மொபைல் போன் எண் அல்லது இ-மெயில் ஐடி கொடுத்து உள்நுழைந்து, ‘இ-எபிக்’ டவுன்லோடு செய்து கொள்ளலாம்.மேலும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்வதற்காக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் சிறப்புச் சுருக்க முறை திருத்தம் 2021-ல் பதிவு செய்து கொண்ட இளம் வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் தங்களது பதிவு பெற்ற மொபைல் போன் எண்ணைத் தெரிவித்து மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.