# தமிழ்நாடு மாறாது!
++++++++++++++++++
தியாகி.
சங்கரலிங்கனார்
உயிர் கொடைத் தந்து
உருவாகிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு!.
பேரறிஞர் அண்ணா
இந்திய நாடாளுமன்றத்தில்
முழங்கிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு !.
தமிழ்நாடு சட்டமன்றத்தின்
பிரகடனம்
எங்கள் நாடு
தமிழ்நாடு!
ஈராயிரமாண்டு
பாரம்பரியம்மிகு
தமிழ் இலக்கியங்களில்
எங்கள் நாடு
தமிழ்நாடு !.
மகாகவி பாரதி வார்த்தைகளில்
கல்விச்சிறந்த நாடு
எங்கள் தமிழ்நாடு !.
ஆரியம் போல்
வழக்கொழிந்த
நாடற்ற மொழி அல்ல!.
சீரிளமைத்
திறம்வியந்து
நாள்தோறும்
நாட்டினர்
போற்றும் மொழி!
வளரும் மொழி !
எங்கள்
கன்னித்தமிழ்மொழி
அரசாளும் நாடு
எங்கள்
தமிழ்நாடு!.
பரிபாடல்,
பதிற்றுப்பத்து,
சிலப்பதிகாரம்,
மணிமேகலை,
பக்தி இலக்கியம்
என
இலக்கணத்தில் ...
இலக்கியத்தில்...
வாழ்வியலில்...
வகை வகையாக...
தொகை தொகையாக...
நீடித்து நிலைத்து
பெயர் சிறக்க
வாழும் வரலாறாய்
வாழும்நாடு!
நாள்தோறும்
வளரும் நாடு!
எங்கள் தமிழ்நாடு!.
அகிலத்தின்
மூத்த பெருங்குடிமக்களின்
பல்லாயிரமாண்டு காலத்திய
செழுமைமிகு
வரலாற்றுப் பெட்டகம்
எங்கள்
தமிழ்நாடு!.
வரலாற்றுக் கருவூலம்
எங்கள்
தமிழ்நாடு !.
இத்தகுப் பெருமைப்போன்று
எண்ணிலடங்கா
எண்ணங்களினால்...
வண்ணங்களிலால்...
உரத்த சிந்தனைகளினால்...
நிறைந்து
செழிக்கும் நாடு
எங்கள்
தமிழ்நாடு!.
கம்பீரமாக சொல்லுவோம்!
எங்கள்நாடு
தமிழ்நாடு!.
#மாறாது தமிழ்நாடு!.
-கரிகாலன்.