சனி, 3 ஏப்ரல், 2021

*சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021- தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் உயர்த்தி தரப்படல் வேண்டும் - நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை*

*சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021-  தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் உயர்த்தி தரப்படல் வேண்டும் - நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை*

*நாமக்கல் கல்வி மாவட்டம்*- *தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி* *ஆசிரியர்களின் மீது தொடுக்கப்பட்ட* *17 (ஆ) குற்றச்சாட்டு* - *ஒழுங்கு நடவடிக்கை கைவிட்டு இறுதி ஆணைகள் வெளியிட வேண்டும் - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...*

*நாமக்கல் கல்வி மாவட்டம்*-   
*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி* *ஆசிரியர்களின் மீது தொடுக்கப்பட்ட* 
*17 (ஆ) குற்றச்சாட்டு* 
- *ஒழுங்கு நடவடிக்கை கைவிட்டு இறுதி ஆணைகள் வெளியிட வேண்டும் - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...*

வியாழன், 1 ஏப்ரல், 2021

இறுதி எச்சரிக்கை போராட்டமே!**********கல்வித்துறையில் கொட்டம் அடிக்கும் கறுப்பாடுகள்!நாமக்கல் மாவட்டத்தின்தொடக்கக்கல்வித்துறையில்! கொடுமைக்காரர்களின் ஆட்டம்-பாட்டம் -கொட்டம் கல்வித்துறையில்!

இறுதி எச்சரிக்கை போராட்டமே!
**********************
கல்வித்துறையில் கொட்டம் அடிக்கும் கறுப்பாடுகள்!

நாமக்கல் மாவட்டத்தின்
தொடக்கக்கல்வித்
துறையில்! கொடுமைக்காரர்களின் ஆட்டம்-பாட்டம் -கொட்டம்  கல்வித்துறையில்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் உறுப்பினராக இருக்ககூடாது!

எதற்கும் ஆசிரியர் மன்றத்திற்கு செல்லக்கூடாது!

இதைச்சொல்ல  இரண்டு உள்ளூர் அதிகாரிகள் !
ஒரு  கல்வி மாவட்ட அதிகாரி!

 இந்த இரண்டு உள்ளூர் அதிகாரிகள்  
பற்றி 
வண்டி ...
வண்டியாக ...
எழுதலாம்!பேசலாம்!!
முல்லையின் மாண்புகெடும் 
எனும் அச்சம் மேலெழும்புகிறது!

கல்வி மாவட்டத்தவர் ரொம்ப நல்லவர் என்றே நம்பினோம்!

ஆனாலும்,
உள்ளூர் அதிகாரி விரித்த
 வலையில் ...
பாசத்தில்...
விழுந்து விட்டார் போலும்!
வேடன் வலையில் விழுந்த தலைமைப்
புறாவாகி விட்டது போலும்!

இப்போதும் 
காலம் கடந்து 
விட வில்லை!
திருத்திக்
கொள்ளுங்கள்!திருந்துங்கள்!
என்றே வேண்டுகிறோம்!


திருந்த
மறுப்பின் !
தப்புத்தாளங்கள் கொட்டின் 
நாங்கள் 
திருத்துவோம்!
திருந்தச்செய்வோம்!

வண்டவாளங்கள் தண்டவாளங்களில் தொடர்வண்டிக் 
கணக்கில் 
நீளும் நிலைக்கு தள்ளிக்கொள்ளாதீர்!

இது முதல் எச்சரிக்கை!
இறுதி எச்சரிக்கை போராட்டமே!

மாவட்டம் முழுதும் துண்டறிக்கை வெளியிட்டு...
சுவரொட்டி ஒட்டி...
ஆசிரியர்களை அணி்திரட்டி ...
மல்லை நகரத்தில் மக்கள் கூடும் இடங்களில்
ஒலி பெருக்கி
வைத்து 
சொல்லக் கூடாத கதைகளை 
எல்லாம் 
சொல்லி விடும் நிலைக்கு தள்ளிக்கொள்ளாதீர்!

மல்லை சமுத்திரத்தின் உள்ளூர் அலுவலர்களே!
கல்வித்துறையின் மாண்பினை காற்றில் பறக்க விடாதீர்!

கல்வித்துறைக்கும்,
தமிழக அரசுக்கும்
களங்கம் விளைவிக்கும் கறுப்பாடுகளாகி விடாதீர்!

இப்படிக்கு,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்
(கிளை).

திங்கள், 29 மார்ச், 2021

உங்கள் PAN, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஒரு கிளிக் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்!

உங்கள் PAN, ஆதாருடன் இணைக்க வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைவதால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து அதில் உங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

ஞாயிறு, 28 மார்ச், 2021

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கத்தில் நிதி குளறுபடி !நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் விசாரணை!

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கத்தில் நிதி குளறுபடி !
நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் விசாரணை!

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கச் செயலாளர் தற்காலிக பணிநீக்கம் !காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புக்குரியதாகும் !தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஏழு கட்டத்தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ள அனைவருக்கும் பெரும் நன்றி!

எருமப்பட்டி ஒன்றிய சிக்கன நாணயச் சங்கச் செயலாளர் தற்காலிக பணிநீக்கம் !
காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புக்குரியதாகும் !
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஏழு கட்டத்தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வெற்றிபெறச் செய்துள்ள அனைவருக்கும் பெரும் நன்றி!

********************************************
அன்பானவர்களே!வணக்கம்.

எஸ்.எண்.241,எருமப்பட்டி  ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தினை ,
சங்கச்செயலாளர் திருமதி.கே.ராணி என்பாரிடம் இருந்து மீட்டெடுக்கவும்,சிக்கன நாணயச் சங்க  உறுப்பினர்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டக்கிளை கடந்த 06.03.2021 அன்று ஏழு கட்டத்தொடர்நடவடிக்கைகளை அறிவித்தது.

முதல்கட்ட நடவடிக்கையாக 10.03.2021அன்று கோரிக்கை மனு இயக்கமும்,இரண்டாம் கட்ட நடவடிக்கையாக 17.03.2021அன்று சுவரொட்டி இயக்கமும் நடைபெற்றது.

மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 29.03.2021 அன்று எருமப்பட்டி சிக்கனநாணயச்சங்க அலுவலகத்தில் " காத்திருப்புப்போராட்டம்  " மேற்கொள்ளப்பட இருப்பதைத் தெரிவித்து கடந்த 24.03.2021் அன்று மதிப்புமிகு.நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உள்ளிட்டு கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ,கடந்த 26.03.2021 அன்று எருமப்பட்டி காவல்நிலைய அலுவலர் திரு.இரவி அவர்கள் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசனிடம் அலைபேசியில் அழைத்துப்பேசி போராட்ட விபரங்களை அறிந்துக்கொண்டார்.
கூட்டுறவுத்துறை உயர் ,கள அலுவலர்களிடம்  ஒரு முறைக்கு நான்கு முறை கலந்துப்பேசி எதிர்வரும் 29.03.2021 அன்று  எருமப்பட்டி  சிக்கன நாணயச்சங்க அலுவலகத்தில்  காவல்துறை அலுவலர்களின் முன்னிலையில் கூட்டுறவுத்துறையின் கள அலுவலர் அவர்களுடன் 29.03.20121அன்று  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது எனக்கூறி பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல் அலுவலர் திரு.இரவி அவர்கள் அழைப்புத்தந்தார்.

எருமப்பட்டி காவல்துறையின் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கையில், 
இதே நாளில் 
நாமக்கல் சரக கூட்டுறவுத்துணைப்
பதிவாளர் அவர்கள் மாவட்டச்செயலாளர் மெ.சங்கரை அலைபேசியில் அழைத்து போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தும் ,திருமதி.
கே.ராணியின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.மேலும், 27.03.2021அன்று  காலை 10.00 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புத்தந்தார்.27.03.2021அன்று தேர்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்பதைத்தெரிவித்து 27.03.2021அன்று பிற்பகல் 05.30 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருவதாக  மாவட்டச்செயலாளர் மெ.சங்கர் தெரிவித்தார்.

இதற்கிடையில்,
27.03.2021 அன்று முற்பகல் மாவட்டச்செயலாளர் மெ.சங்கரைத் தொடர்புக்கொண்ட 
கூட்டுறவு களஅலுவலர்  போராட்ட   நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறும் ,29.03.2021அன்று பேச்சு வார்த்தைக்கு வருமாறும் கேட்டுக் கொண்டார். களஅலுவலரிடம்  27.03.2021அன்று மாலை 05.30 மணிக்கு நாமக்கல் சரக கூட்டுறவுப்பதிவாளரை ,அவரது அழைப்பின் பேரில் சந்திக்க உள்ளதாகவும்,29.03.2021அன்று எருமப்பட்டியில் தங்களை சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்ட மாவட்டச்செயலாளர் 
விரைவு நடவடிக்கைகளை கோரினார்.

இத்தகு பேச்சுவார்த்தை  அழைப்புகளை பெரிதும் வரவேற்று ஏற்றுக்கொண்டு 27.03.2021அன்று பிற்பகல் 05.30 மணிக்கு 
நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் அவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன்,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர்,மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்டத்தணிக்கைக் குழு உறுப்பினர்  த.தண்டபாணி,கபிலர்மலை ஒன்றியப்பொருளாளர் பொ. முத்துசாமி மற்றும் எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்களுடன் நீண்ட நெடிய நேரம் கூட்டுறவு சரக துணைப்பதிவாளர் அவர்கள் உரையாற்றினார்கள். எருமப்பட்டி சிக்கன நாணயச் சங்கம்  இலாபத்தில் தான் உள்ளது.இச் சங்க உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து நின்று சங்கத்தை வளர்த்தெடுங்கள் என்றார்.

இச் சந்திப்பில், நாமக்கல் சரக கூட்டுறவுத் துணைப்பதிவாளர் அவர்கள் திருமதி.இராணி என்பாரை எருமப்பட்டி சிக்கன  நாணயச் சங்கப் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் 
செய்யப்பட்டுள்ளது என்பதைத்தெரிவித்தார‌்கள்.
மேலும் . சிக்கனநாணயச் சங்கத்தை ,இதன்  உறுப்பினர்களை பாதுகாத்து தருவததாகவும் ,தனது நிர்வாகத்தில் உள்ள எல்லா கூட்டுறவு நிறுவனங்களும் ஆரோக்கியமாக வளர வேண்டும்,செயல்பட வேண்டும் என்பதே விருப்பம் என்றும் துணைப்பதிவாளர் அவர்கள் நம்பிக்கைத் தந்தார்கள்.

திருமதி.கே.ராணி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது,காலம் கடந்த நடவடிக்கை என்றாலும் வரவேற்புற்குரியதாகும்.

இன்னும் நிறைய பணிகள் இச் சிக்கன நாணயச்சங்கத்தில் செய்ய வேண்டி உள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் பொறுப்புணர்வோடு செயல்பட்டு  ஆசிரியப்பெருமக்களுக்கு பெருந்தொண்டாற்றும் என்று அன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி!

-முருகசெல்வராசன்
& மெ.சங்கர்.