பள்ளி திறப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - நாள்: 26.08.2021.
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021
வியாழன், 26 ஆகஸ்ட், 2021
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படல் வேண்டும்!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படல் வேண்டும்!
ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!
----------------------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் திரு.நா.சண்முகநாதன் விடுக்கும் செய்தியறிக்கை:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு.உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் திருவண்ணாமலையில் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயர் அரசுக்கலைக்கல்லூரிக்கு சூட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.
டாக்டர் கலைஞர் அவர்களின் பெயர் தாங்கி "டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி " எனும் மாண்புமிகு.உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்களின் அறிவிப்பினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது.நன்றி பாராட்டுகிறது.
முத்தமிழ் அறிஞர்,செம்மொழிநாயகர்,டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது ,இந்தியதுணைக்கண்டத்திற்கும், உலகம் முழுதும் பரவி வாழும் தமிழ்மக்களுக்கும்,
தமிழ் மொழிக்கும் அளப்பரிய வகையில் ஆற்றியுள்ள பணிகள்,செய்துள்ள உதவிகள் சொல்லிமாளாதவைகளாகும்.எழுதி முடிக்க இயலாதவைகளாகும்.
இத்தகு பெருமையும்-சிறப்பும் ஒருங்கே நிறைந்த தமிழாய்ந்த முதுபெரும் தமிழறிஞர் , ஒப்பாரும்,மிக்காரும் இல்லாத தன்னிகரற்ற தகைசால் தலைவர் பெருமகனார் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரில் தமிழகத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது சாலச் சிறந்ததாகும்.காலப்பொருத்தமாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் டாக்டர் கலைஞர்அ பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின்எநிறைவேற்றித் தந்திட வேண்டுமாய்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது.
இங்ஙனம்
முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
புதுக்கோட்டை
26.08.2021
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களுக்கு அலகு வாரியாக ஒப்படைவுகள் (Assignments) தயாரித்தல் -பள்ளிகளுக்கு அனுப்புதல் சார்பு
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களுக்கு அலகு வாரியாக ஒப்படைவுகள் (Assignments) தயாரித்தல் -பள்ளிகளுக்கு அனுப்புதல் சார்பான பள்ளிக்கல்வி ஆணையரின் உத்தரவு