வெள்ளி, 8 அக்டோபர், 2021

மாண்புமிகு ஒன்றிய சுகாதார அமைச்சர் மூடப்பட்ட பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, குன்னூர், செயல்படுத்தப்படும் என்று பதிலளித்துள்ளார்!


 

மேல்நிலைத் தேர்வு நடப்பு கல்வியாண்டு - புதிய தேர்வுமையங்கள் அமைத்தல் சார்ந்த அறிவுரைகள் -அரசு தேர்வுகள் இயக்ககம்

Click here for download
 

உயர் தொழில்நுட்ப ஆய்வாக வழி மாநில அளவிலான மதிப்பீடு - பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்


Click here for download

5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான திறன் மேம்ப்பாட்டுக்கான பயிற்சி


 

ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு எண்ணுடன் அலைபேசி எண் பதிவு செய்தல் சார்பு...


 

செவ்வாய், 5 அக்டோபர், 2021

பள்ளிக் கல்வித் துறை - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 12.10.2021 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!


 

DEO பணியிடங்களுக்கு மாறுதல் கலந்தாய்வு


 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் புகார் மனு மீதான கருத்து தெரிவிக்க நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அழைப்பு - ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்பு

 அன்பானவர்களே! வணக்கம். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் எருமப்பட்டி ஒன்றிய அமைப்பு எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் சட்ட விரோதச் செயல்பாடுகளின் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை‌ வலியுறுத்தி‌ நான்கு கட்டத்தொடர் நடவடிக்கைகளை 24.09.2021 அன்று அறிவித்தது . முதற்கட்டமாக 27.09.2021 அன்று கோரிக்கை மனு‌ இயக்கமும், 30.09.2021 முதல்‌ இரண்டாம் கட்டமாக சுவரொட்டி இயக்கமும் மேற்கொண்டு உள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் (04.10.2021- திங்கள்) அன்று கோரிக்கைகளின்‌ மீது கருத்துகளை முன்வைத்திடுமாறு அழைப்புத் தந்தார்கள். இதனடிப்படையில் நடைபெற்ற கருத்துக்கேட்பில், மாநிலச் செயலாளர் முருகசெல்வராசன், மாவட்டச் செயலாளர்‌ மெ.சங்கர், எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன், ஒன்றியச்செயலாளர் இரா.செல்வராசு, ஒன்றியப் பொருளாளர் சு.துரைராசு மற்றும் நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார் ஆகியோர் பங்கேற்று நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின்‌நேர்முக அலுவலர் ஆகியோரிடம் கோரிக்கைகளின் நியாயங்களை முன்வைத்தனர். எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 24 அம்சக் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டுக் கொண்டுள்ள‌ அலுவலர் பெருமக்கள் பொருத்தமான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்வதாக உறுதி அளித்தார்கள். இத்தகு உறுதிமொழியின்‌ மீது பெரும் நம்பிக்கைக்கொண்டு வரவேற்று நன்றித் தெரிவித்து கொண்டுள்ள மன்றப் பொறுப்பாளர்கள் தொடர் நடவடிக்கைகளை தொடர்வது குறித்து இன்று (05.10.2021) எழுத்துப்பூர்வமாக‌ தெரிவிப்பது என்று முடிவாற்றி இச்சந்திப்பில் தெரிவித்து உள்ளனர். மேற்கண்ட கருத்துக்கேட்பு நிகழ்வின் தகவல் அறிந்து மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் இரா.ரவிக்குமார், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி, நாமகிரிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் சி.மோகன்குமார், ஒன்றிய இலக்கிய அணி துணை அமைப்பாளர் சி.செயவேலு, புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கொ.கதிரேசன், ஒன்றியப் பொருளாளர் இரா.பிராபகரன், உறுப்பினர் கோ.முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொ.சுதாகர், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் கா.சுந்தரம் ஆகியோர் மாவட்டக் கல்வி அலுவலகம் வந்து இருந்தனர். இப் பொறுப்பாளர்களிடையே கருத்துக்கேட்பு நிகழ்வின்‌ விபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவில், இன்றையக் கருத்துக்கேட்பு நடவடிக்கைகள் பெரிதும் வரவேற்கத்தக்கதாகும். இன்றைய காலத்திற்கேற்ற பொருத்தமான‌தாகும். தமிழ்நாடு அரசும், கல்வித்துறையும் தலையீடு செய்து எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளில் விரைவான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல் செய்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தமிழ்நாடு அரசுக்கும், கல்வித்துறைக்கும், காவல்துறை உளவுப்பிரிவு அலுவலர்களுக்கும் பெருநன்றி உரித்தாக்கிக் கொள்கிறது. இயக்கநிறுவனர் , சட்டமேலவை மேனாள் உறுப்பினர் , ஆசிரியர் இனக்காவலர், பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களின் பாதையில் சீராடி... வாதாடி... போராடி.... ஆசிரியர் நலன்கள் மற்றும் உரிமைகள் கேட்போம்; காப்போம்! தமிழ்நாடு அரசுக்கும், கல்வித்துறைக்கும், ஆசிரியர் சமுதாயத்திற்கும்‌ இடையிலான‌ நல்லுறவினை பேணிப் பாதுகாப்போம்! தமிழ்நாடு அரசுக்கும், கல்வித்துறைக்கும் களங்கம் விளைவிக்கும்‌ , அவப்பெயர் உருவாக்கும் கல்வித்துறை அலுவலர்களை அம்பலப்படுத்தி கல்வி நலன்- நிர்வாக நலன் காப்போம்! சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவோம்! இவண், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை).