வியாழன், 14 அக்டோபர், 2021

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைத் தொடர்ந்து மருத்துவப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள் குறித்த அறிவியல் பூர்வமற்ற, பாகுபாடு நிறைந்த தகவல்களை மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைத் தொடர்ந்து மருத்துவப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள் குறித்த அறிவியல் பூர்வமற்ற, பாகுபாடு நிறைந்த தகவல்களை மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வுக்கு தடை இல்லை!உயர்நீதிமன்ற‌மதுரைக்கிளை ஆணை!

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வுக்கு தடை இல்லை!
உயர்நீதிமன்ற‌மதுரைக்கிளை ஆணை!

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு...தமிழ்நாடு அரசின் துறைகளிலும் இப்போதும் இப்படியா?

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு...

தமிழ்நாடு அரசின் துறைகளிலும் இப்போதும் இப்படியா?
---------------------------------------------

தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தை அப்படியே தருகிறோம், காண்க.
 
இதில் முதல் வரிசையில் அதாவது மொத்த காலியிடங்கள் 11 என்று தொடங்குவதற்கு அடியில்,
1. இதர (OC & FC) முன்னுரிமை பெற்றவர் - 1, முன்னுரிமை அற்றவர் - 2 என்று போடப்பட்டிருப்பதில், இதர (OC & FC) என்று போடப்பட்டுள்ளது தவறானதாகும்; இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கே எதிரானதாகும்.
OC என்பது Open Competition என்பதன் சுருக்கம். அதனை Other Communities  இதர வகுப்புகள் என்று போட்டால், அதன்மூலம் இட ஒதுக்கீட்டையே மாற்றிவிடும் ஆபத்து உள்ளே நுழைந்துள்ளது!
Open Competition - திறந்த போட்டி, பொதுப் போட்டி என்பது, அந்த இடங்களுக்கு அனைவருமே அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டியிடும் இடங்கள் அவை. அதில் முன்னேறிய ஜாதியினருடன் S.C., S.T., O.B.C., போன்ற அனைத்துப் பிரிவினருமே போட்டியிட்டு அதிக மதிப்பெண் பெறுவர், இடம்பெறுவர்.
ஆனால், ‘இதர’ என்று கூறினால், Other Communities - 31 சதவிகித இடங்கள் அனைத்தும் திறந்த போட்டியினருக்கே என்று பொருள்படும்.
முன்பு இப்படி (எம்.ஜி.ஆர். ஆட்சியில்) O.C.- யை Other Communities என்று சுகாதாரத் துறை அமைச்சராக எச்.வி.ஹண்டே இருந்தபோது வந்த விளம்பரத்தை எதிர்த்து நாம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நம்மிடம் பேசி, ‘‘தவறை திருத்த ஆணையிட்டுள்ளேன்; எனவே, தயவு செய்து நீங்கள் வழக்கைத் திரும்பப் பெறுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
நாமும் வழக்கைத் திரும்பப் பெற்றோம்; அப்போது அந்த அமைச்சகம் சார்பில், அது -  டைப் செய்ததில் (Typographical error) ஏற்பட்ட ஒரு தவறு என்று பொருந்தாத விளக்கம் சொல்லிய நிலையில், பிறகு விளம்பரத்தையே மாற்றினார்கள்.
அதே ஆட்சியில், வி.ஏ.ஓ. (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பிலும் அவ்வாறு விளம்பரம் வந்தது. நமது தலையீட்டால், பிறகு திருத்தப்பட்டது.
மீண்டும் அந்த நிலையில், சில துறைகள் இருக்கின்றனபோலும்; உடனே தவறைத் திருத்தி - மீண்டும் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் இந்தத் தவறு இல்லாதபடி தமிழ்நாடு அரசின் பல துறைகளும் கவனமாகச் செயல்படவேண்டியது அவசர, அவசியமாகும்!

கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்.

13.10.2021 
சென்னை.

16.10.2021‌(சனி)பள்ளிகளுக்கு விடுமுறை!பள்ளிக்கல்வி ஆணையர்‌ அறிவிப்பு!

16.10.2021‌(சனி)பள்ளிகளுக்கு விடுமுறை!பள்ளிக்கல்வி ஆணையர்‌ அறிவிப்பு!

இந்திய அஞ்சலக ஊழியருக்கு போனஸ்!

இந்திய அஞ்சலக ஊழியருக்கு போனஸ்!

புதன், 13 அக்டோபர், 2021

கேந்திரிய வித்யாலயா‌பள்ளிகளில் WALK-IN முறையில் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவது சட்டவிரோதமானது!நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.பி.வில்சன்‌ கண்டனம்!

 கேந்திரிய வித்யாலயா‌பள்ளிகளில் WALK-IN முறையில் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவது சட்டவிரோதமானது!நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.பி.வில்சன்‌ கண்டனம்! ******************************************** ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் சென்னையில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களில் அரசமைப்பின் பிரிவு 16 மீறப்படுகிறது. வேலைவாய்ப்பில் வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக walk-in முறையில், புறவாசல் வழியாக ஒருதலைபட்சமாக ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் நடைபெறுவது கண்டனத்திற்குரியது Kendriya Vidyalaya Schools in Chennai run by Union Ministry of Education is flouting Art 16; skipping regular recruitment process and communal reservations for public employment and adopting walk in procedure.This is illegal &create favouritism in selections.Back door appointments for whom ?


பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பி.ஹெச்டி (Ph.D )தகுதி கட்டாயம் என்ற ஆணை நிறுத்திவைப்பு.



 

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

🟣 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?

பொதுத்தேர்வு  எப்போது நடைபெறும்?

1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?

1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?

பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்.

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?

பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

5 நிமிட வீடியோ.