வெள்ளி, 15 அக்டோபர், 2021

ரூ.5000 பரிசு - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை வடிவமைப்பு போட்டி!

 ரூ.5000 பரிசு - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை வடிவமைப்பு போட்டி!




தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை (லோகோ) வடிவமைத்தால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை: 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவினையொட்டி பல்வேறு கல்விசார் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.


இந்திய சுதந்திர தின விழா இலச்சினை (LOGO) வடிவமைப்பு போட்டி நடைபெறுகிறது. தேர்வு பெறும் இலச்சினைக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.


தவிர சிறந்த படைப்பு வழங்கிய மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இலச்சினையுடன் 75ஆவது ஆண்டு சுதந்திரதினத்தினையும் மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும். 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் என்பது தமிழில் இடம் பெறவேண்டும். தேசியக் கொடியின் வண்ணங்கள் இடம் பெறுவது சிறப்பாகும்.


இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்கலாம். ஆசிரியர்கள், கவிஞர்கள், வடிவமைப்பு ஓவியர்கள் உள்பட பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.


இலச்சினை (LOGO) வடிவமைப்பானது,


13 சென்டி மீட்டர் x 13 சென்டி மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும்.


கணினியில் வரைகலை செய்யப்பட்டதாகவோ, உரிய முறையில் கைகளால் வரையப்பட்டதாகவோ இருக்கலாம்


இலச்சினை வடிவமைப்பானது JPG, JPEG வடிவில் மாற்றப்பட்டு அதிக தரத்துடன் மின்னஞ்சல் வழி அனுப்ப வேண்டும்


இலச்சினை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்


வேறு எந்த வகையிலும் உருமாற்றம் செய்யப்பட்டதாக இருத்தல் கூடாது


இலச்சினை (LOGO) தன்னுடைய சொந்தப் படைப்பு என்ற உறுதிமொழிக் கடிதத்துடன் வழங்கவேண்டும்


ஒருவர் ஒரு இலச்சினை வடிவமைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்


இந்த போட்டியில் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. வடிவமைப்பை நவம்பர் 15ஆம் தேதிக்குள் tnoulogo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சங்கர்லால் குமாவத் நியமனம்.

 


தீபாவளியை முன்னிட்டு 01.11.2021 முதல் 03.11.2021 வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்!

 


சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவலர் நினைவு நாள் !ஒத்திகை நிகழ்ச்சிகளுக்காக அக்டோபர் 16 ,18, 19,21ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்!


 

வியாழன், 14 அக்டோபர், 2021

மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி ... அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி


 

தேசிய அடைவுத்தேர்வு 3,5,8 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 12.11.2021 அன்று நடைபெறுகிறது!

தேசிய அடைவுத்தேர்வு 
3,5,8 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு 12.11.2021 அன்று நடைபெறுகிறது!

பொதுவிநியோகத்திட்டத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழக்கம் போல் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்.

பொதுவிநியோகத்
திட்டத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழக்கம் போல் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்.

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைத் தொடர்ந்து மருத்துவப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள் குறித்த அறிவியல் பூர்வமற்ற, பாகுபாடு நிறைந்த தகவல்களை மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.

சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலைத் தொடர்ந்து மருத்துவப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள மாற்று பாலினம் மற்றும் பாலீர்ப்பு கொண்ட மக்கள் குறித்த அறிவியல் பூர்வமற்ற, பாகுபாடு நிறைந்த தகவல்களை மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு.

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வுக்கு தடை இல்லை!உயர்நீதிமன்ற‌மதுரைக்கிளை ஆணை!

ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வுக்கு தடை இல்லை!
உயர்நீதிமன்ற‌மதுரைக்கிளை ஆணை!

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு...தமிழ்நாடு அரசின் துறைகளிலும் இப்போதும் இப்படியா?

தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு...

தமிழ்நாடு அரசின் துறைகளிலும் இப்போதும் இப்படியா?
---------------------------------------------

தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தை அப்படியே தருகிறோம், காண்க.
 
இதில் முதல் வரிசையில் அதாவது மொத்த காலியிடங்கள் 11 என்று தொடங்குவதற்கு அடியில்,
1. இதர (OC & FC) முன்னுரிமை பெற்றவர் - 1, முன்னுரிமை அற்றவர் - 2 என்று போடப்பட்டிருப்பதில், இதர (OC & FC) என்று போடப்பட்டுள்ளது தவறானதாகும்; இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கே எதிரானதாகும்.
OC என்பது Open Competition என்பதன் சுருக்கம். அதனை Other Communities  இதர வகுப்புகள் என்று போட்டால், அதன்மூலம் இட ஒதுக்கீட்டையே மாற்றிவிடும் ஆபத்து உள்ளே நுழைந்துள்ளது!
Open Competition - திறந்த போட்டி, பொதுப் போட்டி என்பது, அந்த இடங்களுக்கு அனைவருமே அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டியிடும் இடங்கள் அவை. அதில் முன்னேறிய ஜாதியினருடன் S.C., S.T., O.B.C., போன்ற அனைத்துப் பிரிவினருமே போட்டியிட்டு அதிக மதிப்பெண் பெறுவர், இடம்பெறுவர்.
ஆனால், ‘இதர’ என்று கூறினால், Other Communities - 31 சதவிகித இடங்கள் அனைத்தும் திறந்த போட்டியினருக்கே என்று பொருள்படும்.
முன்பு இப்படி (எம்.ஜி.ஆர். ஆட்சியில்) O.C.- யை Other Communities என்று சுகாதாரத் துறை அமைச்சராக எச்.வி.ஹண்டே இருந்தபோது வந்த விளம்பரத்தை எதிர்த்து நாம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நம்மிடம் பேசி, ‘‘தவறை திருத்த ஆணையிட்டுள்ளேன்; எனவே, தயவு செய்து நீங்கள் வழக்கைத் திரும்பப் பெறுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
நாமும் வழக்கைத் திரும்பப் பெற்றோம்; அப்போது அந்த அமைச்சகம் சார்பில், அது -  டைப் செய்ததில் (Typographical error) ஏற்பட்ட ஒரு தவறு என்று பொருந்தாத விளக்கம் சொல்லிய நிலையில், பிறகு விளம்பரத்தையே மாற்றினார்கள்.
அதே ஆட்சியில், வி.ஏ.ஓ. (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பிலும் அவ்வாறு விளம்பரம் வந்தது. நமது தலையீட்டால், பிறகு திருத்தப்பட்டது.
மீண்டும் அந்த நிலையில், சில துறைகள் இருக்கின்றனபோலும்; உடனே தவறைத் திருத்தி - மீண்டும் இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட விளம்பரங்களில் இந்தத் தவறு இல்லாதபடி தமிழ்நாடு அரசின் பல துறைகளும் கவனமாகச் செயல்படவேண்டியது அவசர, அவசியமாகும்!

கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்.

13.10.2021 
சென்னை.