வியாழன், 21 அக்டோபர், 2021

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுக்கு நாளை முதல் தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்யலாம்-TRB.


 

பள்ளிக்கு வெளியே பள்ளி வேலை நேரம் அல்லாத நேரங்களில் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது! இல்லம் தேடிக் கல்வி திட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ‌மன்றம் கோரிக்கை! பள்ளிக்கல்வி ஆணையர் ஆசிரியர் மன்றக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்று தெரிவிப்பு!



 

பள்ளிக்கல்வி-மகாகவி பாரதியார் நினைவு தினம் - கவிதைப்போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள்



 

குழந்தைகள் தின விழா பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள், பேச்சு,கட்டுரை போட்டிகள் நடத்துதல் சார்ந்த அறிவிப்பு



 

இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு சிறந்த Logo தயாரிப்பவருக்கு பரிசு அறிவிப்பு




 

புதன், 20 அக்டோபர், 2021

இல்லம் தேடிக் கல்வி திட்டம் சார்ந்த SPD proceedings


 Click here for download

ஆசிரியர்-அரசு ஊழியர் மீதானகுற்றவியல் வழக்கு,ஒழுங்கு நடவடிக்கை இரத்து! முதல்வருக்கு. ஆசிரியர் மன்றம் நன்றி!

ஆசிரியர்-அரசு ஊழியர் மீதானகுற்றவியல் வழக்கு,ஒழுங்கு நடவடிக்கை இரத்து! முதல்வருக்கு. ஆசிரியர் மன்றம் நன்றி!

10 திருக்கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள் - தமிழக அரசு


 

மலேசிய மணல் விற்பனை மீண்டும் தொடக்கம்.

மலேசிய மணல் விற்பனை மீண்டும் தொடக்கம்.

பள்ளிக்கல்வித் துறைக்கு விடியல் எப்போது? அருஞ்சொல் கட்டுரை.

 


பள்ளிக்கல்வித் துறைக்கு விடியல் எப்போது? -வெங்கட் எம் லக்ஷ்மி நன்றி:அருஞ்சொல் தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் மிக மோசமாக நிர்வகிக்கப்பட்ட துறைகளில் முக்கியமானது கல்வித் துறை. நேற்று ஒரு முடிவு, இன்று ஒரு முடிவு; அமைச்சர் ஓர் அறிவிப்பு, அதிகாரிகள் இன்னோர் அறிவிப்பு என்று பல்வேறு குழப்பங்கள். இந்தக் குளறுபடிகளுக்கெல்லாம் தீர்வு ஆட்சி மாற்றமே என்று நம்பின ஆசிரியர் சமூகமும், பொதுச் சமூகமும். பெரிய மாற்றங்களை இத்துறை எதிர்பார்க்கிறது. துரதிருஷ்டவசமாக ஆட்சி மாற்றத்துக்குப் பின் நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், பெரிய காட்சி மாற்றங்கள் கல்வித் துறைக்குள் ஆரம்பிக்கவில்லை. அதிமுகவின் செயல்பாடு அதிமுக ஆட்சியில் கல்வித் துறை சம்பந்தமான எந்த அறிவிப்பு வந்தாலும் முதல்வர் பழனிசாமியும், கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் கடும் விமர்சனத்துக்கும், கேலிக்கும் ஆளானார்கள். அவர்களது செயல்பாடும் அப்படித்தான் இருந்தது. தேசியக் கல்விக்கொள்கையில் சொல்லப்பட்ட பல விஷயங்களை அவர்கள் அரசாணையாகப் பிறப்பித்ததுடன், அப்படியே செயல்படுத்தவும் முனைந்தனர். பள்ளி வளாக இணைப்பு, ஒருங்கிணைந்த பள்ளிகள் திட்டம், சத்துணவு வழங்கும் பணியைத் தன்னார்வர்களிடம் ஒப்படைக்கும் முனைப்பு, 3, 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுக்கான ஆணை பிறப்பிப்பு என்று பல குளறுபடியான அறிவிப்புகள். இவற்றில் பல, கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாகத் திரும்பப் பெறப்பட்டன என்பது வேறு விஷயம். எப்படியும் குழப்படிக்குள்ளேயே இருந்தது கல்வித் துறை. திமுக ஆட்சியில் நடப்பது என்ன? திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அறநிலையத் துறையில் ஆரம்பித்து காவல் துறை வரை பல மாற்றங்கள் நடப்பதைக் காண முடிகிறது. கல்வித் துறையிலும் இத்தகைய மாற்றங்களுக்கான முனைப்பை அரசிடமிருந்தும், அமைச்சரிடமிருந்தும் அவர்களுடைய பேச்சின் வழியே பார்க்க முடிகிறது. ஆயினும், பள்ளிகளின் செயல்பாட்டைப் பொருத்த அளவில் எந்தப் பெரிய மாற்றங்களும் இன்னும் கண்ணுக்குத் தென்படவில்லை. அரசுப் பள்ளிகளின் பெரும் பிரச்சினை முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்களிலேயே முதன்மையானது, அரசுப் பள்ளிகளின் பெரும் பிரச்சினையான ஆசிரியர் பற்றாக்குறைக்கு முடிவு கட்டுவது ஆகும். ஆசிரியர் - மாணவர் விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் நெடுநாள் கோரிக்கை. கல்வித்துறை அரசாணை எண்: 250/29.02.1964-ன்படி 20 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் வீதம் முன்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அது காமராஜர் ஆட்சிக் காலம். பிறகு அரசாணை எண்: 525/27.12.1997-ன்படி, 40 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் என்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இது கலைஞர் ஆட்சிக் காலம். இப்போது, மேல்நிலைப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 60 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற சூழல் இருக்கிறது. குறைவான மாணவர் சேர்க்கை உள்ள சில அரசுப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார் என்றாலும், கூடுதல் மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்கிற சிந்தனையே நம்மிடம் இல்லை. இதன் விளைவு என்ன? இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற முக்கியமான பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாமல் வேறு பாட ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்தும் அவலம் நடக்கிறது. இப்படிப் படித்துவரும் மாணவர்களைத்தான் ‘நீட் தேர்வைத் தாண்டி வா’ என்று நாம் நுழைவுத் தேர்வுக்கு அனுப்புகிறோம். இப்படியான தேர்வை எதிர்ப்பது வேறு விஷயம்; இவ்வளவு மோசமான நிலையில் படிக்கும் மாணவர்களால் உள்ளூர் அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலேயே இடம் பிடிக்க முடியாதே, அந்த அவலநிலையை நாம் போக்க வேண்டாமா? கரோனா காலத்தில் வேலையிழப்பு, ஊதிய இழப்பு காரணமாக தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 2.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்திருக்கிறார்கள். இதை ஒரு பெருமையாகவும் ஆட்சியாளர்கள் பேசிக்கொள்கிறார்கள். புதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் நியமனம், பள்ளித் தளவாடப் பொருட்கள், கட்டுமானம், அடிப்படை வசதிகள் இவையெல்லாம் விஸ்தரிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா? இதுகுறித்து இதுவரை அதற்கான எந்த முனைப்பும் காட்டப்படவில்லை. களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கும், அரசு காட்டிவரும் அக்கறைகளுக்கும் இடையிலான இடைவெளியைச் சுட்டுவதற்கான ஓர் உதாரணம் மட்டுமே மேற்கண்ட பிரச்சினை. ஆசிரியர்களிடம் பேசட்டும் அரசு தேசியக் கல்விக் கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்த திமுக, “தமிழ்நாட்டிற்கென தனிக் கல்விக்கொள்கையை உருவாக்குவோம்” என்று வாக்குறுதி கொடுத்துத்தான் அரியணை ஏறியது. இது சாதாரண அறிவிப்பு இல்லை. இதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் ஏராளம். அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, தேசியக் கல்விக் கொள்கையின் பாதையிலேயே இந்த அரசும் பயணிப்பதாகவே நடக்கும் போக்குகள் வெளிப்படுத்துகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே நிர்வாக மாற்றம் என்ற பெயரில், பள்ளிக்கல்வித் துறையின் உயர்ந்த பதவியான இயக்குநர் பதவி ரத்துசெய்யப்பட்டு, அனைத்துப் பொறுப்புகளும் பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டதை நாம் அறிவோம். இயக்குநருக்கு மேல் ஆணையர் என்றொருவரை அதிமுக அரசு நியமித்தபோதே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அடுத்து வந்த திமுக அரசு ஆணையர் பதவியை ஒழித்திருந்தால் வரவேற்பைப் பெற்றிருக்கும். ஆனால், அதிமுக அரசு அடுத்து எதைச் செய்ய நினைத்ததோ அதையே இதன் மூலம் முழுமையாகச் செய்து முடித்தது திமுக அரசு. இப்படிக் கல்வித்துறைக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பது தேசிய கல்விக்கொள்கையை அடியொற்றும் முனைப்புகளில் ஒன்றே ஆகும். முழுப் பொறுப்பும் வந்த பிறகு, ஆணையரிடமிருந்து சரமாரியாக அரசாணைகள் வரத் தொடங்கியிருக்கின்றன. ‘மாணவர்களின் கற்றல் இடைவெளியை நீக்குகிறோம்’ என்ற பெயரில், ஆசிரியர்களுக்கே தெரியாமல் தன்னார்வலர்களைப் பள்ளியில் நுழைக்கலானது அவற்றில் ஒன்று. ‘முறையான கல்வியைச் சிதைத்து முறைசாராக் கல்வியைப் புகுத்துவதில் முனைப்பு காட்டுகிறார் ஆணையர்; இதுவும் கல்வியைத் தனியார்மயமாக்கும் தேசியக் கல்விக்கொள்கையின் விருப்ப விழைவுதான்’ என்ற குரல்கள் இப்போது ஆசிரியர்களிடத்திலிருந்து கிளம்பியிருக்கின்றன. அரசு, ‘நவம்பர் முதல் 1-8 மாணவர்களுக்குப் பள்ளி திறக்கப்படும்’ என்று அறிவித்தது யாவருக்கும் தெரியும். ‘3, 5, 8, 10 மாணவர்களுக்கு அடைவுத் தேர்வு நடத்தப்படும்’ என்று அரசாணை வெளியிட்டிருப்பது பலருக்குத் தெரியாது. எட்டாம் வகுப்பு வரையிலான பிள்ளைகள் பள்ளிக்கூட வாயிலை மிதித்தே ஒன்றரையாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவர்களது கற்றலைச் சோதிக்கவும், பதிவேடுகளைப் பராமரிக்கவும் ஆணை வந்திருப்பது வேடிக்கை இல்லையா? கரோனாவுக்குப் பிறகு, கல்வித் துறை உள்ளபடி நசுங்கிப்போய் இருக்கிறது. வீட்டிலேயே இருந்தவர்கள் மாணவர்கள் மட்டும் இல்லை; ஆசிரியர்களும்தான். ஒரு புத்துயிர்ப்பு எல்லாத் தரப்பினருக்குமே தேவைப்படுகிறது. போதிய அளவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும், ஏற்கெனவே உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவதும், நெடுநாட்களுக்குப் பிறகு பள்ளிக்கூடம் நோக்கிவரும் மாணவர்களுக்கு, முந்தைய வகுப்புப் பாடங்களோடு தொடர்பை உண்டாக்கி அடுத்த வகுப்பு நோக்கி நகர்த்துவதும் மாநிலம் தழுவியதாக முன்னெடுக்கப்பட வேண்டிய பெரிய காரியம். இதுகுறித்து ஆசிரிய சமூகத்துடன் அரசு பேச வேண்டும். போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே தேசியக் கல்விக்கொள்கைக்கு சவால் விடும் ஒரு தனிக் கொள்கையைத் தமிழக அரசு முன்னெடுக்க முடியும்.