வெள்ளி, 29 அக்டோபர், 2021
தடுப்பூசி, ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .
தடுப்பூசி,
ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .
கரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி, 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியது.
இதுவரை 1,03,53,25,577 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல், புதிதாக உலகம் முழுவதும் ஏஒய் 4.2 வகை வைரஸ் பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸின் வேற்றுருவாக்கம் தான் இந்த ஏஒய் 4.2 . இந்த வகை வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் உயிர்ப்பலியை அதிகமாக ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், கரோனா தடுப்பூசித் திட்டத்தை ஜனவரிக்குள் இன்னும் வேகமாக அதிகமாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)