வியாழன், 30 டிசம்பர், 2021
புதன், 29 டிசம்பர், 2021
வருமான வரி தாக்கல் கடைசி தேதி டிசம்பர் 31
வருமான வரி தாக்கல்: டிசம்பர் 31-க்குள் செய்யவில்லை எனில் என்ன ஆகும்..?! 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்ய இரண்டு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் டிசம்பர் 27ஆம் தேதி வரையில் 4.67 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர் என அறிவித்துள்ளது. 2 நாள் மட்டுமே இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பல மீண்டும் வருமான வரி தாக்கல் செய்ய கால நீட்டிப்பு செய்யப்படும் என நம்பி வரும் நிலையில், வருமான வரித்துறை இதுவரை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. வருமான வரி அறிக்கை இந்த சூழ்நிலையில் வருமான வரி அறிக்கையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாதவர்களின் நிலை என்ன. 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி முடிவடைய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி, டிசம்பர் 31க்கு பின் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதா என்பது தான். மார்ச் 31, 2022 வரை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாதவர்கள் மார்ச் 31, 2022 வரையில் தாக்கல் செய்யலாம், ஆனால் அதற்கு பல விஷயங்களை இழக்க நேரிடும். குறிப்பாக டிசம்பர் 31க்கு பின் வரி தாக்கல் செய்வோர் நடப்பு நிதியாண்டில் ஏதேனும் நஷ்டங்கள் இருந்தால் அதை கேரி பார்வோர்டு செய்ய முடியாது. இழப்புகள் இதேபோல் வருமான வரி செலுத்துவோர் அதிகப்படியான வருமான வரியை முன்கூட்டியே செலுத்தி இருப்பின் டிசம்பர் 31-க்கு பின் திரும்ப பெற முடியும், ஆனால் அந்த தொகைக்கு மத்திய நிதியமைச்சகம் கொடுக்கும் வட்டியை இழக்க நேரிடும். அபராதம் அனைத்திற்கும் மேலாக டிசம்பர் 31க்கு பின் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்தால் அதிகப்படியான தாமத கட்டணம் செலுத்த வேண்டும், உதாரணமாக உங்களின் வரி விதிக்கப்பட வேண்டிய வருமானத்தின் அளவு 5,00,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் 5000 ரூபாயும், 5,00,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் 1000 ரூபாயும் செலுத்த வேண்டும். வருமான வரி சட்டம் இதுவே 2022, மார்ச் 31ஆம் தேதிக்கு பின்பும் 2020-21ஆம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி தாக்கல் செய்யாமல் இருந்தால் செலுத்த வேண்டிய வருமான வரியில் 50 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் வருமான வரி சட்டத்தின் படி வருமான வரி செலுத்தாதவர்களுக்கு 3 வருடம் முதல் 7 வருடம் வரையில் சிறை தண்டனை அளிக்கவும் வாய்ப்பு உள்ளது.
செவ்வாய், 28 டிசம்பர், 2021
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் கட்டாயம்.
60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் கட்டாயம். அறுபது வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் பூஸ்டர் டோஸ் அல்லது வழக்கம்போல் தடுப்பூசி செலுத்த என்ன செய்ய வேண்டும், எது தேவை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதி கரித்து வருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் ஒன்றிய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஆவ ணங்கள் ஏதும் எடுத்துச் செல்ல வேண்டுமா என்பது குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் (என்ஹெச்ஏ) தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா விளக்கியுள்ளார். ‘கோவின்’ தளத்தை உருவாக்கியர் சர்மா. அவர் கூறுகையில், ‘’ஒன்றிய அரசு வழங்கியுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பூசி டோஸ் செலுத்திக்கொள்ள இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தகுதியான வர்கள். இவர்கள் தடுப்பூசி செலுத்த வரும் முன் இணைநோய்கள் இருப்பது குறித்து அதிகாரப்பூர்வ மருத்து வரிடம் சான்றிதழ் பெற்று தடுப்பூசி மையத்துக்குச் செல்ல வேண்டும். மற்ற வகையில் இரண்டு தடுப்பூசி செலுத்தியபோது கடைப்பிடிக்கப்பட்ட அதே வழிமுறைகள்தான் இதிலும் பின்பற்றப்படும். கோவின் தளத்தில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். இரு டோஸ் ஏற்கெனவே செலுத்திய முதியோர், இணை நோய்கள் இருந்தால், அதற் குரிய சான்றிதழையும் கோவின் தள த்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் தடுப்பூசி செலுத்தப் போகும்போது உடன் சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும். 45 வயதுமுதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய்கள் இருந்தால் அவர்களுக்குச் சான்றிதழ் தேவை என்று ஏற்கெனவே விதிமுறை இருக்கிறது. அதே விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். நீரிழிவு நோய், சிறுநீரகம் தொடர்பான நோய், டயாலிசிஸ், சுவாசக் குழாய் நோய், ஸ்டெம்செல் டிரான்ஸ்பிளான்ட், புற்றுநோய் உள்ளிட்ட இருபது வகையான இணை நோய்கள் இருப்போர் இருக்கிறார்கள். இவர்கள் வரும்போது, அதிகாரப்பூர்வ மருத்துவ அதிகாரியிடம் சான்றிதழ் பெற்று வர வேண்டும்” என சர்மா தெரிவித்தார். இந்தியாவில் 60 வயதுக்கு மேற் பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ள னர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இவர்கள் தடுப்பூசி செலுத்த இணை நோய்கள் சான்றிதழ் கண்டிப்பாகத் தேவை என்று அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த குறைந்த பட்ச கால இடைவெளி 9 முதல் 12 மாதங்கள் வரை வைக்க ஆலோசிக்கப் பட்டு வருகிறது. ஆனால், கால இடை வெளி குறித்து இதுவரை ஒன்றிய அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஏதும் வெளியாகவில்லை. ஆனால், ஐசிஎம்ஆர் மற்றும் பரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷ னல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னா லஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஐந்து அறிவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையே யான இடைவெளியை ஒன்பது மாதங்களில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கையாக (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு யார் தகுதியானவர்கள் என்பதை கோ-வின் தளம் தானாகவே காட்டும். ஜனவரி 10 முதல் எத்தனை பேர் தகுதி பெறு வார்கள் என்பதற்கான விவரங்கள் உள்ளன. அடுத்த சில நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 15-18 வயதினருக்கு பள்ளிச்சான்றிதழ் போதும் “2007-ஆம் அல்லது அதற்கு முன் பிறந்த அனைவரும் தடுப்பூசி களைப் பெற முடியும். 15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாக்காளர் அடை யாள அட்டை இல்லை, அவர்களில் பலரிடம் ஆதார் இல்லாமல் இருக்க லாம், நாங்கள் இப்போது பள்ளி சான்றி தழ்கள் மற்றும் அடையாள அட்டை களை அனுமதிக்கிறோம். கோவின்-இணையதளத்தில் (CoWIN) பதிவு செய்ய தற்போது ஒன்பது தகுதி யான ஆவணங்கள் உள்ளன, இதில் பள்ளி அடையாள அட்டைகளைச் சேர்ப் போம்” என்று சர்மா கூறியுள்ளார்.