ஞாயிறு, 2 ஜனவரி, 2022
சனி, 1 ஜனவரி, 2022
வெள்ளி, 31 டிசம்பர், 2021
பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் ஆணை வெளியீடு.மாறுதல் கோரும் விண்ணப்பம் பதிவு செய்தல்.விவரம் தெரிவித்தல் சார்பான இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.
பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் ஆணை வெளியீடு.மாறுதல் கோரும் விண்ணப்பம் பதிவு செய்தல்.விவரம் தெரிவித்தல் சார்பான இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு .மு க ஸ்டாலின் அவர்களுடன் அரசு அலுவலர் ஒன்றியநிர்வாகிகள் சந்திப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு .மு க ஸ்டாலின் அவர்களுடன் அரசு அலுவலர் ஒன்றியநிர்வாகிகள் சந்திப்பு!
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திரு இரா சண்முகராஜன் மாநில பொதுச்செயலாளர் திரு செ. சுருளி ராஜ் அவர்கள் , மாநிலப் பொருளாளர் திரு ஆர் சி எஸ் குமார்,
மாநிலத் துணைத் தலைவர்கள் திரு.அரங்க அனந்த கிருஷ்ணன், திரு தே.விக்டர் பால்ராஜ், திரு த.அமிர்த குமார், த.சங்கர், திருமதி பா.ஆலிஸ் ஷீலா, மற்றும் மாநில தலைமை நிலையச் செயலாளர் திரு.வெ.மகேந்திர குமார் , மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு சு.முத்து ரமேஷ் ஆகியோர் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்களை 31.12.2021 காலை 11:15 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடன் சந்திப்பில் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிட்டதற்கு ஒன்றியத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
100 ஆண்டுகளை கடந்து நிற்கின்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு இசைவு தெரிவித்தும், பின்னர் மாநாட்டுக்கு தேதி தருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒப்புக்கொண்டு மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தின் சார்பில் தமிழகத்தில் பணி புரியும் 15 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சார்பாக உள்ள ஜீவாதார கோரிக்கைகளை 25 அம்சமாக வடித்தெடுத்து தயாரிக்கப்பட்ட கோரிக்கை புத்தகத்தை ஒன்றிய மாநிலத்தலைவர் திரு இரா சண்முகராஜன் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
மேலும் 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு நியமித்த பழைய ஓய்வூதிய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க கூடிய குழுவிடம் ஒன்றியத்தின் சார்பில் சமர்ப்பித்த அறிக்கையினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது
அதை கூர்ந்து கவனித்து விரைவில் இதன் தொடர்பாக கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் பிற கோரிக்கைகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தர மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்கள் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த சந்திப்பின் நிகழ்வின்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உடன் மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு துரை முருகன் அவர்களும் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் திரு கே என் நேரு அவர்களும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.ஐ பெரியசாமி அவர்களும் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.ஏ.வ வேலு, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.சேகர்பாபு உள்ளிட்ட பல அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
வருகின்ற புத்தாண்டு ஒன்றியத்திற்கு மிக நலமாக தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வதில் தமிழ்நாடு அரசு ஒன்றியம் பெருமை கொள்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)