செவ்வாய், 25 ஜனவரி, 2022
திங்கள், 24 ஜனவரி, 2022
கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு
கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலருடான சந்திப்பு : -------------------------------- அன்புடையீர்! வணக்கம். கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் திரு.சுரேஷ் அவர்களை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக இன்று (24.01.2022 - திங்கள்) பிற்பகல் 05.00 மணியளவில் சந்தித்தனர். கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களிடம் கபிலர்மலை ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன் அவர்கள் புத்தாடை அணிவித்தும், மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர் அவர்கள் நூல் வழங்கியும், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.இரவிக்குமார் அவர்கள் பாவலர் புகழ் வணக்க நாட்காட்டி வழங்கியும், இலக்கிய அணி அமைப்பாளர் திருமதி.இரா.பொற்கொடி அவர்கள் நாட்குறிப்பேடு வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இச்சந்திப்பில் மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி, ஒன்றிய துணைத் தலைவர் திரு.வி.சிவக்குமார், துணைச் செயலாளர் திரு.இர.மணிகண்டன், கொள்கை விளக்கக் செயலாளர் திருமதி.த.செந்தாமரை, இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.மு.தேவராசன், செயற்குழு உறுப்பினர் திருமதி.சி.பழனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். / மெ.சங்கர்/