வியாழன், 24 மார்ச், 2022
✍️பள்ளிக் கழிவறைகள் பராமரிப்பு, வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மை செய்தல் - நவம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான 6மாதங்களுக்கு நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு.
புதன், 23 மார்ச், 2022
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குனர் அவர்களுக்கு வேண்டுகோள்
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்குனர் அவர்களுக்கு வேண்டுகோள்! +++++++++++++++++++++++++++++++++++++ இல்லம் தேடிக் கல்வி மையப்பணிகளில் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களை இத்திட்டத்தின் தொடக்கத்தில் இருந்து இத்திட்டத்தில் இணைத்துக்கொண்டு இத்தலைமையாசிரியர்களுக்கு தாங்களும்,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் சிறு வழிகாட்டுதல் கூட செய்யாது தவிர்த்து வருவது கவலைத்தரக் கூடியதாகும். உலகப்புகழ் பெற்ற , இந்திய அளவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திராவிடக்கனவுத் திட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் பங்கேற்பும்-பங்களிப்பும். அறவே இல்லாத நிலை என்பது உண்மையிலேயே தமிழ்நாடு அரசுக்கும்-தமிழ்நாடு கல்வித்துறைக்கும் பெருமைச்சேர்க்கும் செயலாகாது. தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களை குறிவைத்து கசக்கிப்பிழியும் நோக்கம் கொண்டதாகும். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் மேல்மட்ட அளவில் இருந்தே இத்தகு பாகுபாடும்-பாரபட்சமும் காட்டப்படுவது சிறந்த நிர்வாகச்செயலாகாது. தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வியை பற்றிய கவலையற்ற பெரும்போக்காகும். இல்லம் தேடிக் கல்வி திட்ட மையப்பணிகளில் இருந்து முற்றிலுமாக தமிழ்நாட்டின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் களை விடுவித்து விட்டு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் பொறுப்பில் இத்திட்டத்தினை செம்மைப்படுத்திக் கொள்ளுமாறு மிகுந்த அன்புடன் தொடக்கக்கல்வி நலன்கருதி கேட்டுக்கொள்கிறேன். -கரிகாலன்.