https://drive.google.com/file/d/1VJSjtFCTnv7isFQeZwzhsxbWoQHv4l7r/view?usp=drivesdk
செவ்வாய், 17 மே, 2022
அரசு பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பணியிடங்கள் தெரிவு முகமைகள் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு!
https://drive.google.com/file/d/1VJSjtFCTnv7isFQeZwzhsxbWoQHv4l7r/view?usp=drivesdk
திங்கள், 16 மே, 2022
G.O.No:120/02.05.2022 NHIS 2021 - Formulation of comprehensive Guidelines for the corpus fund orders issued
Click here for download pdf
எலச்சிப்பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு!வாழ்த்து
எலச்சிப்பாளையம் ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு!வாழ்த்து! 💐💐💐💐💐💐💐💐
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் எலச்சிப்பாளையம் ஒன்றியச்செயற்குழுக்கூட்டம் வேலகவுண்டம்பட்டி அருள் வணிக வளாகத்தில் 12.05.2022 அன்று ஒன்றியத் தலைவர் திருமதி.சு.பேபி தலைமையில், மாவட்ட கொள்கை விளக்கச்செயலாளர் திரு.க.தங்கவேல் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ... ஒன்றியத் தலைவராக திரு.சீனிவாசன் , ஒன்றியச் செயலாளராக திருமதி.சு .பேபி, ஒன்றியப் பொருளாளாராக திரு.மணிகண்டன், ஒன்றிய கொள்கை விளக்கச் செயலாளராக திருமதி .சுமதி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஏனைய ஒன்றியப் பொறுப்பாளர்கள் அவரவர் முன்பு வகித்து வந்த அவரவர் பொறுப்புகளிலேயே தொடர்வது என்று இக்கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டுக்கான உறுப்பினர் பதிவினை முடித்து ஒன்றியப் பொதுக்குழுக்கூட்டம் நடத்தி ஒன்றியப்பொறுப்புகள் அனைத்திற்கும் எதிர்வரும் 2022 சூன் மாதத்தில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதென்றும் இக்கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது. ஒன்றியப் பொறுப்பாளர்கள் தேர்விற்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதன் பின் நடைபெற்ற வாழ்த்தரங்கிற்கு ஒன்றியத் தலைவர் திரு.சீனிவாசன் தலைமை ஏற்றார். திருச்செங்கோடு ஒன்றியச் செயலாளர் திரு.சி.கார்த்திக், மாவட்டத்தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.த..தண்டபாணி, மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.இரவிக்குமார், மாவட்ட கொள்கை விளக்கச் செயலாளர் திரு.க.தங்கவேல், மாவட்டப் பொருளாளர் திரு.சு.பிரபு, மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து வாழ்த்துரை வழங்கினார்கள். மாநிலப்பொருளாளர் திரு.முருகசெல்வராசன் இயக்கப்பேருரை ஆற்றினார். ஒன்றியச்செயலாளர் திருமதி.சு.பேபி ஏற்புரை ஆற்றினார். கூட்டநிறைவில் ஒன்றியப் பொருளாளர் திரு மணிகண்டன் நன்றி நவின்றார்.