ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

*📮'ஆசிரியர் மனசு' திட்டம் தொடக்கம் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரிகள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல்.

*📮'ஆசிரியர் மனசு' திட்டம் தொடக்கம் - ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரிகள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தகவல்.


*ஆசிரியர்களின் கோரிக்கைகளை தெரிவிக்க ‘ஆசிரியர் மனசு’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.*


*புதுக்கோட்டை  மாவட்ட பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கமம் சார்பில் 'ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் கவிதாராமு தொடங்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.*


 *இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசுகையில், ''ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு செல்கிற இயக்கம் இல்லை.*


*'ஆசிரியர் மனசு' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.*


 *இதில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பணி பாதுகாப்பு சட்டம், பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், புதிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் aasiriyarmanasu@gmail.com, aasiriyarkaludananbil@gmail.com என்ற இ.மெயில் முகவரியில் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர், ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.*

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

கட்டண வரம்புகளை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் நீக்கியது!

கட்டண வரம்புகளை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் நீக்கியது!

75வது சுதந்திர தின விழாயை சிறப்பிக்க அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்- நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள்


 

2023-2024 கல்வியாண்டிற்கான 4,5ம் வகுப்புகளுக்கான கற்பித்தல் நடைமுறைகள் சார்ந்த கலந்துரையாடல் கூட்டம் நடத்த SCERT director Proceedings