செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

தொடக்கக்கல்வி - ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளில் 01.08.2022 ன் படி ஆசிரியர்-மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 17.08.2022




 

பள்ளிக்கல்வி - பதிவேடுகள் கணினி மயமாக்குதல் - 1 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்பாசிரியர்கள் பாடக்குறிப்பேடு பதிவேடு(Notes of Lesson ) மட்டும் பராமரித்தல் சார்ந்து ஆணையர் மற்றும் இயக்குநர் செயல்முறைகள் 23.08.2022



 

சனி, 20 ஆகஸ்ட், 2022

தொடக்கக்கல்வி - அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு 29.08.2022 இயக்குநர் செயல்முறைகள் 18.08.2022


 

தொடக்கக்கல்வி - தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளுதல் சார்ந்த அறிவுரைகள் இயக்குநர் செயல்முறைகள் 17.08.2022




 



தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர்மலை ஒன்றியச் செயற்குழு கூட்ட (18/08/2022) முடிவுகள்

 



வியாழன், 18 ஆகஸ்ட், 2022

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌கபிலர்மலை ஒன்றியச் செயற்குழுக்கூட்ட நிகழ்வுகள் 18.08.2022

 கபிலர்மலை ஒன்றியப்

பொறுப்பாளர்களுக்கு 

பாராட்டு! வாழ்த்து!

💐💐💐💐💐💐💐💐


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ‌கபிலர்மலை ஒன்றியச் செயற்குழுக்கூட்டம் 

பொத்தனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  18.08.2022 அன்று ஒன்றியத் தலைவர் திரு.ந.மணிவண்ணன் தலைமையில்,

மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.த.தண்டபாணி, 

மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார் ஆகியோர் 

முன்னிலையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ...


ஒன்றியச் செயலாளராக 

திரு இர.மணிகண்டன் ,

(இடைநிலை ஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி- சேளூர் செல்லப்பம்பாளையம்) 


ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக 

திரு பா. நிர்மல்குமார் ( இடைநிலை ஆசிரியர்,  ஊ.ஒ.ந.நி.பள்ளி - வெங்கமேடு ) 



ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



ஏனைய ஒன்றியப் பொறுப்பாளர்கள் அவரவர் முன்பு வகித்து வந்த அவரவர் 

பொறுப்புகளிலேயே தொடர்வது என்று இக்கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது. 



மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

திரு ப.சதிஷ் , பரமத்தி ஒன்றியச் செயலாளர் 

திரு க.சேகர், மாவட்டச் செயலாளர் 

திரு.மெ.சங்கர்,

 ஆகியோர் 

தேர்வு செய்யப்பட்டுள்ள ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து வாழ்த்துரை வழங்கினர்.


மாநிலப்பொருளாளர் திரு.முருகசெல்வராசன்‌ இயக்கப் பேருரை ஆற்றினார்.


ஒன்றியச் செயலாளர் திரு.இர.மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு பா.நிர்மல்குமார் ஏற்புரை ஆற்றினர்


கூட்ட நிறைவில் ஒன்றியப் பொருளாளர் 

திரு.பொ.முத்துசாமி நன்றி நவின்றார்.


இக்கூட்டத்தில் 15 பெண் ஆசிரியர்கள் உள்பட 35 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.









தலைமை உரை... 
ஒன்றியத்தலைவர் திரு.ந.மணிவண்ணன் அவர்கள்..

தொடக்கவுரை...
மாவட்டச் செயலாளர் திரு மெ.சங்கர் அவர்கள்..
இயக்கப் பேருரை...
மாநிலப் பொருளாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள்..
வாழ்த்துரை..
மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.இரவிக்குமார் அவர்கள்..
பாராட்டுரை..
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.ப.சதீஷ் அவர்கள்..
வாழ்த்துரை..
பரமத்தி ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் அவர்கள்..
நன்றியுரை..
ஒன்றியப் பொருளாளர் திரு.பொ.முத்துசாமி அவர்கள்..

கூட்டத்தில் கலந்துக்கொண்ட மன்ற மறவர்கள், மறத்தியர்கள்...






G.O.No.254/18.08.2022 தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி அரசாணை வெளியீடு!



 


திங்கள், 15 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட்-15-வரலாற்றில் இன்று,-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இயக்க நிறுவனர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் பிறந்தநாள்.

*ஆகஸ்ட்-15*

*வரலாற்றில் இன்று,*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இயக்க நிறுவனர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் பிறந்தநாள்.*


நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறை சேர்ந்த பாவலர் க.மீனாட்சிசுந்தரம் 1931 ஆகஸ்ட் 15-ல் பிறந்தவர். பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. 1973-ல் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தை  நிறுவிய இவர், டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எனப் பெயரிடப்பட்டதோடு  இவ்வமைப்பை துவக்கி வைத்த பெருமைக்குரியவர் டாக்டர் கலைஞர்.இயக்க நிறுவனரான க.மீ அவர்கள் இதன் பொதுச் செயலாளராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார். இயக்கத்தின் சார்பில் வெளியாகும் ஆசிரியர் துணைவன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர்.

 1978 மற்றும் 1984-ல் தமிழக முன்னாள் சட்டமேலவையில் திமுக சார்பில் உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக பலஆண்டுகள் பணியாற்றியவர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில  ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வந்தார்.

வானம்பாடி நான், வாழ்த்தி மகிழ்கிறேன் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்னார். தமிழக முன்னாள்  முதல்வர்மு.கருணாநிதியுடன் நெருங்கி பழகியவர்,டாக்டர் கலைஞர் அவர்களின் அன்புத்தம்பியாக விளங்கியவர். க.மீ என  அழைக்கப்பட்ட இவர், இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வந்தார். இவருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட மன்றக் கலைஞர், பெரியாரியலாளர், ஒளவை விருது போன்ற விருதுகள் வழங்கப் பெற்றவர்.


1985-ல் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலக ஆசிரியர் கருத்தரங்க மாநாடுகளில் பங்கேற்று பேசியுள்ளார். ஆசிரியர்கள் - கல்வி நலன் சார்ந்த பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர்.ஆசிரியர்களின் பற்பல கோரிக்கைகள் வென்றெடுக்க காரணமாக இருந்தவர்.முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களிடம் மடட்டுமல்லாது அவரது காலத்தில் முதவராக இருந்த அனைத்து தலைவர்களிடமும்  பற்பல கோரிக்கைகள் சீராடி,வாதாடி,போராடிப் பெற்றவர்.ஆட்சியாளர்களிடம் சீராடி,வாதாடி,போராடி இதனையே தாரக மந்திரமாய் கொண்டு பற்பல செயற்கரிய செயல்களைச் செய்தவர்.

இறுதிக்காலம் வரை ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்த பாவலர் க.மீ அவர்கள் 14.05.2020 அன்று  காலமானார்.இறப்புக்குப் பின்னரும் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு  தானமாக அளித்து பல மருத்துவ மாணவர்களுக்கு பயன்படட்டும் என்ற அவரின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.