வியாழன், 19 ஜனவரி, 2023
TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விடுப்பை பதிவேற்றம் செய்வது பற்றிய விளக்கம்...
1) முதலில் TNSED App - individual login செய்யவும்
2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.
3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்
4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்
5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்
6) பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்
7) EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.
8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.
2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்
5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்
10 முதல் 15 வருடங்களுக்கு 270 நாட்கள்
15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்
20 வருடங்களுக்கு மேல் 540 நாட்கள்
ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.
உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.
180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.
9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள் எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.
10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!
குறிப்பு :
தற்போதுவரை இந்த வசதி அப்டேட் செய்யப்படவில்லை. அப்டேட் ஆனவுடன் பதிவு செய்யவும்.
புதன், 18 ஜனவரி, 2023
செவ்வாய், 17 ஜனவரி, 2023
திங்கள், 16 ஜனவரி, 2023
ஞாயிறு, 15 ஜனவரி, 2023
சனி, 14 ஜனவரி, 2023
வெள்ளி, 13 ஜனவரி, 2023
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)