வியாழன், 18 மே, 2023

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் அன்றே பாட புத்தகங்கள் விநியோகம் ~ பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்...

சத்துணவு மற்றும் குழந்தை மையங்களில் கலைஞர் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் ~ அரசு அறிவிப்பு...

அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு வரவேற்பு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
(மாநில அமைப்பு)
அரசு அங்கீகாரம் எண்:991/89
---------------------------------------------------
அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு வரவேற்பு
-+++++++++++++++++++++++ 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது
போன்று 4 சதவிகித அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு 01.04.2023 முதல் வழங்கியிருப்பதை பெரிதும் வரவேற்று நன்றி பாராட்டுகிறேன்.

ஒன்றிய அரசு வழங்குவது போன்று வருங்காலங்களில் அகவிலைப்படி உயர்வு அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதிமொழி அளித்திருப்பதை நம்பிக்கையோடு பெரிதும் வரவேற்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01.01.2023 முதல் ஒன்றிய அரசு போல் 4 சதம் அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்..

முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

புதுக்கோட்டை
17.05.2023

புதன், 17 மே, 2023

தமிழ்நாடு அரசு 01.04.2023 முதல் 4 % .அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு

யானைத்தந்த பகடைக்காய்‌, சங்கு வளையல்‌ கண்டெடுப்பு ~ கீழடிக்கு சவால் விடும் வெம்பக்கோட்டை...

கிருஷ்ணகிரி அருகே மலைப்பகுதியில்‌ 2,500 ஆண்டுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள்‌ கண்டுபிடிப்பு...

செவ்வாய், 16 மே, 2023

16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - அரசாணை

 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - அரசாணை 


நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ் கடலூர் ஆட்சியராக நியமனம்

அரியலூர் ஆட்சியராக அன்னீ மேரி ஸ்வர்னா நியமனம், 

கிருஷ்ணகிரி ஆட்சியர் தீபக் ஜேகப் தஞ்சை ஆட்சியராக நியமனம்

புதுக்கோட்டை ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்,

 நாமக்கல் ஆட்சியராக உமா நியமனம்

காஞ்சி ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம், 

செங்கல்பட்டு ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம்

மதுரை ஆட்சியராக சங்கீதா நியமனம், 

சிவகங்கை ஆட்சியராக ஆஷா அஜித் நியமனம்

ராமநாதபுரம் ஆட்சியராக விஷ்னு சந்திரன் நியமனம்,

 தூத்துக்குடி ஆட்சியராக ராகுல்நாத் நியமனம்

திருப்பூர் ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்,

 ஈரோடு ஆட்சியராக ராஜ கோபால் சுங்கரா நியமனம்

திண்டுக்கல் ஆட்சியராக பூங்கொடி நியமனம், 

நாகை ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்

கிருஷ்ணகிரி ஆட்சியராக சராயு நியமனம்


CLICK HERE TO DOWNLOAD

திருத்திய கலந்தாய்வு அட்டவணை _தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 திருத்திய கலந்தாய்வு அட்டவணை _தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 2023.





முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள்.


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Generation Graduate Certificate) பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - எளிய வழிமுறைகள் (How to Apply Online for First Generation Graduate Certificate? - Simple instructions)...


முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (First Graduate Certificate) ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.


தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களாக இருக்க வேண்டும். இதன்மூலம் கல்விக் கட்டண தொகை விலக்கு அளிக்கப்படும். 


மேலும் இந்த சலுகையை பெற விரும்பும் மாணவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருத்த வேண்டும். 


தேவையான ஆவணங்கள்


* விண்ணப்பதாரரின் புகைப்படம்


* குடும்ப அட்டை


* ஆதார் அட்டை 


* 12ஆம் வகுப்பு சான்றிதழ்


* கல்லூரி விண்ணப்பம் 


* தந்தை கல்வி சான்றிதழ்


* தாய் கல்வி சான்றிதழ்


* சகோதர சகோதரிகளின் கல்வி சான்றிதழ்



விண்ணப்பிப்பது எப்படி?


*STEP : 1


முதலில் https://tnega.tn.gov.in/ அதில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும்.


ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து என்டர் செய்யவும். Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து Login செய்யவும்


Account இல்லாதவர்கள் புதிதாக Account Open செய்யவும். அதில் new user? sign up என்ற Optionல் புதிதாக Account Open செய்யலாம். 


Account Open செய்து லாகின் செய்து அதில்  Revenue Department என்பதை  செய்யவும். 


முதல் பட்டதாரி  என்பதை தேர்வு செய்து Proceed என்பதை Click செய்யவும்.


*STEP : 2


அடுத்து அதில்  Register CAN என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து அவரும் விண்ணப்பப் படிவத்தில்  விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு  வரும்  OTP எண்னை கொடுத்து Register என்பதை Click செய்யுங்கள்


அடுத்து உங்களுக்கு can நம்பர் ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் வரும். அடுத்து அதில் Proceed என்பதை க்ளிக் செய்யவும்.


அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் OTPயை கொடுத்து conform OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 


*STEP : 3


அதில் Current Course என்ற இடத்தில் Graduate என்பதை கொடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரியை டைப் செய்ய வேண்டும். அனைத்தையும் சரிபார்த்து Submit கொடுக்கவும்.


*STEP : 4


அடுத்து உங்களுடைய ஆவணங்களை Upload செய்யும் ஆப்ஷன் வரும். அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் Upload செய்யுங்கள்.


அதில் Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்து SIGN இட்டு மீண்டும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவேண்டும்.


 Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும். அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்


*STEP : 5


ஆவணங்கள் அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும். 


அதில் நெட் பேங்கிங் , யூபிஜ , டெபிட் கார்டு போன்றவைகள்  ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும்.


பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும்.  உங்களுக்கு வந்த ஒப்புகை சீட்டை  கொண்டு உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் ஆய்வாளர் (RI) சரிபார்ப்பு முடிந்து தாசில்தார் ஒப்புகை கொடுத்தபின்பு உங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் டவுன்லோடு செய்யலாம்.

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் இரவில் நடத்த தடை.

ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங் இரவில் நடத்த தடை

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. இரவில் கவுன்சிலிங்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

முதல் நாளில், சுழற்சி மாறுதல் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வருவாய் மாவட்டத்துக்குள் இடமாறுதல் நடக்க உள்ளது.


படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கும், 26ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. இரவு நேரத்திலும் கவுன்சிலிங் நடத்தப்படுவது உண்டு.


அதனால், ஆசிரியர்கள் விடிய விடிய காத்திருப்பர்.


அந்த நிலை இன்றி, இந்த முறை இரவு நேரத்தில் நடத்தாமல், பகலிலேயே கவுன்சிலிங்கை முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது